

நவம்பர் 14 தேசிய குழந்தைகள் தினம் நவம்பர் 19 குழந்தைகளுக்கு எதிரான வன்முறை எதிர்ப்பு தினம் மற்றும் நவம்பர் 20 சர்வதேச குழந்தைகள் தினம் ஆகிய தினங்களை முன்னிட்டு திருச்சி மாநகரம் இடமலைப்பட்டி புதூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் குழந்தை உரிமை பாதுகாப்பு மற்றும் போதைப் பொருள் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி உதவி தலைமை ஆசிரியர் பிராங்ளின் இளங்கோ தலைமையில் 15.11.24 நடைபெற்றது. மாவட்ட குழந்தை நலக்குழு உறுப்பினர் முனைவர் பிரபு குழந்தைகள் பாதுகாப்பில் மாணவர்களின் பங்கு குறித்தும் போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விழிப்புணர்வு வழங்கினார். குழந்தை பாதுகாப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது நிகழ்ச்சியில் 80 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
