

தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல் :9715328420
ஊட்டச்சத்தை உறுதி செய்’ 2ஆம் திட்டம் தொடக்கம் – தாராபுரத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம்- சித்ராவுத்தன்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி அங்கன்வாடி மையத்தில் ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து பெட்டகங்களை ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள
குழந்தைகளின் தாய்மார்களுக்கு
மனிதவள.மேலாண்மைத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடுகளை களையும் நோக்கத்துடன் ஊட்டச்சத்தை உறுதி செய்யும் திட்டத்தினை முதல் கட்டமாக 2022-ம் ஆண்டு தொடங்கி வைத்தார்கள்.
அதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ள1முதல் 6 மாதக்குழந்தைகளின் பாலுட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்.
குழந்தைகளின் நிலையை தொடர்ந்து கண்காணிக்கும் ஊட்டச்சத்தை உறுதி
செய் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை அரியலூர் மாவட்டத்தில் தொடங்கி வைத்ததை தொடர்ந்து,
தாராபுரம் சித்ராவுத்தன்பாளையம் நகராட்சிநடுநிலைப்பள்ளி அங்கன்வாடி மையத்தில் ஊட்டச்சத்தை உறுதி செய்திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து பெட்டகங்களை ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள
குழந்தைகளின் தாய்மார்களுக்கு வழங்கப்படவுள்ளது.
தேசிய ஊட்டச்சத்து குழுமத்தின் கீழ் போஷான் அபியான் திட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாடில்லா நிலை எய்துதல் என்னும் உயரிய கருத்தோடு கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உள்ள 355 குழந்தைகளுக்கு இரண்டு ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் மிதமான ஊட்டச்சத்து குறைபாடு உள்ள 881 குழந்தைகளுக்கு ஒரு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படுகிறது.
இவ்வாறு அமைச்சர் என்.கயல்விழி தெரிவித்தார்.
இதற்கு முன்னதாக, அமைச்சர் என்.கயல்விழி ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த பல்வேறு கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.
இவ்விழாவில், திருப்பூர் மாநகராட்சி 4- மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், தாராபுரம் நகர்மன்றத்தலைவர் பாப்புக்கண்ணன், 27 ஆவது வார்டு கவுன்சிலர் ஷாலினி பவர் சேகர், மாவட்ட திட்ட அலுவலர் (பொ) (ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டம்) க.மகாலட்சுமி சங்கீதா. தாராபுரம் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் (பொ) வனஜா. உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டானர்.