

திருவெறும்பூர் வட்டார சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகளில் சார்பாக தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் தலைமையில் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது
துவாக்குடி: நவ17
தமிழகத்தில் ஆறு மாத குழந்தை மற்றும் எடை குறைவாக உள்ள குழந்தைகளுக்கு தமிழக முதல்வர் அவர்களின் சிறிய ஏற்பாட்டில் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டு வருகிறது மேலும் இதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவெறும்பூர் வட்டார சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை தறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகளின் சார்பாக

நேற்று துவாக்குடி நகராட்சிக்குட்பட்ட வடக்கு மலை பகுதியில் புதிதாக அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில் திருவரம்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும்மான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் சுமார் 150 குழந்தைகளுக்கு அவர்கள் தாய்மார்களின் மூலம் அரசு வழங்கும் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது இதில் கடுமையாக எடை குறைவாக உள்ள குழந்தைகளுக்கு இரண்டு ஊட்டச்சத்து பெட்டகமும் மீதமுள்ள 94 குழந்தைகளுக்கு ஒரு ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் துவாக்குடி நகர் மன்ற தலைவர் காயம்பு, மாவட்ட திட்ட அலுவலர் நித்தியா மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் விஜயலட்சுமி ,குழந்தை வளர்ச்சி வட்டார அலுவலர் சாய்ராபானு உட்பட ஏராளமானோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்
