

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
தாராபுரம் விவேகம் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு காவல்துறையின் சார்பில் பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. காவல்துறை சிறப்பு விருந்தினர்களை வரவேற்று பள்ளியின் தாளாளர் முனைவர் திரு. ஆர். சுப்பிரமணியன் வரவேற்புரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அலங்கியம் காவல் ஆய்வாளர் திரு. சுரேஷ் குமார், திருப்பூர் மாவட்ட போக்சோ பிரிவு காவல் ஆய்வாளர்
திரு K. இளங்கோவன், திருப்பூர் மாவட்ட சைபர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. மல்லிகா, தாராபுரம் காவல் ஆய்வாளர் திரு. விஜய சாரதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
இன்றைய சூழலில் சமூகத்தில் பெருகிவரும் குற்றங்கள், பெண் மற்றும் ஆண் குழந்தைகளின் பாதுகாப்பு, குற்றங்களில் பாதிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய அடிப்படைப் புரிதல்களைச் சமூகத்தில் நடக்கும் குற்றச் செயல்களோடு உதாரணம் காட்டி மாணவர்களிடையே எடுத்துரைத்தனர்.
மேலும் போதைப்பொருள் பயன்பாடு, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் பற்றித் தெரிய வந்தால் உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்க மாணவர்கள் தைரியமாக முன்வர வேண்டும் என்று கூறி அறிவுறுத்தினா். அத்துடன் காவல்துறையின் சார்பில் சைபர் குற்றப் புகார்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண் அடங்கிய துண்டறிக்கை அனைவருக்கும் வழங்கப்பட்டது. இறுதியாக விவேகம் பள்ளியின் செயலாளர் முனைவர் திரு.K பூபதி அவர்கள் நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியை, உதவித் தலைமை ஆசிரியை இருபால் ஆசிரியப் பெருமக்கள், விடுதி பொறுப்பாளர்கள் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.