தனுஷ் நயன்தாரா மோதல் – நாட்டின் அத்தியாவசிய பிரச்சனை

தனுஷ் நயன்தாரா மோதல் 10 கோடி கேட்டு நோட்டீஸ்

தனுஷ் நயன்தாரா திரையுலகில் மிக நெருக்கமான நண்பர்களாக பயணித்து வந்தவர்கள். தனுஷ் உடன் நயன்தாரா இணைந்து நடித்த திரைப்படம் யாரடி நீ மோகினி அந்த திரைப்படத்திற்கு பிறகு அவர்களின் நட்பு இன்னும் வலுப்பட்டது. அதன் காரணமாக தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த எதிர்நீச்சல் திரைப்படத்தில் ஒற்றை பாடலுக்கு நயன்தாரா தனுஷுடன் நடனமாடியது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து தனுஷ் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நயன்தாரா இணைந்து நடித்த நானும் ரவுடிதான் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த திரைப்படத்தின் பொழுது தான் நயன்தாராவிற்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையில் காதல் மலர்ந்தது. அதேநேரம் தனுஷ் உடன் நயன்தாராவிற்கு இருந்த நட்பிலும் விரிசல் தொடங்கியது. அந்த திரைப்படத்திற்கு பிறகு தான் தனுஷ் நயன்தாரா சிவகார்த்திகேயன் விக்னேஷ் சிவன் என அற்புதமாக உருவாகி இருக்க வேண்டிய ஒரு வெற்றிக் கூட்டணி என்ன காரணத்தினாலோ பிரிந்து தனியாக சென்றது.

அதன் பிறகு திரைப்பட விழாக்களில் சிவகார்த்திகேயன் தனுஷை மறைமுகமாக தாக்கி பேசியதும் தனுஷ் சிவகார்த்திகேயனை குறித்து பூடகமாக பேசியதும் அந்த நேரங்களில் பேசுபொருளாக இருந்தது.

விக்னேஷ் சிவன் நயன்தாராவின் திருமணம் மிகவும் ஆடம்பரமான முறையில் நடைபெற்றது. அந்த திருமண விழாவை அவர்கள் இருவரும் ஒரு ஆவணப்படம் போல தயாரித்து அதை netflix ott தளத்திற்கு விற்பனை செய்து நிஜ வாழ்க்கையிலும் பணம் சம்பாதிப்பது தான் எங்களின் குறிக்கோள் என்பதை வெளி உலகத்திற்கு உணர்த்தினர். இந்த நிலையில் அந்த ஆவண படத்தில் நானும் ரவுடிதான் திரைப்படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள் இடம் பெற்று இருப்பதாக கூறி நடிகர் தனுஷ் 10 கோடி ரூபாய் கேட்டு வழக்கு தொடர்ந்தது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. இதைத் தொடர்ந்து தனுஷை பற்றி நயன்தாரா அனல் பறக்கும் வார்த்தைகளை சமூக ஊடகங்களில் இரைத்திருக்கின்றார் அதில் ஒன்று எக்ஸ் வலைத்தளத்திலும் இன்ஸ்டாகிராமிலும் உலா வந்து கொண்டிருக்கிறது

நயன்தாரா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அதில், தனுஷ் குறித்து ஆணி வேர்-அக்கு வேறாாக பிரித்து மேய்ந்திருக்கும் அவர், “நீங்கள் இசை வெளியீட்டு விழாக்களில் பேசுவது போல பாதி கூட ரியாலிட்டியில் இல்லை” என்று கூறியிருக்கிறார். நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த 2022ஆம் ஆண்டு நடைப்பெற்றது. இந்த திருமணத்தை நெட்ஃப்ளிக்ஸ் டாக்குமெண்டரியாக வெளியிட முடிவு செய்தனர். இந்த படத்தில், நானும் ரெளடி தான் BTS 3 வினாடி வீடியோ மற்றும் பாடல்கள் இடம் பெற இருந்தன. இதை, அப்படத்தில் உபயோகிக்க கூடாது என்று நயன்தாராவிற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய தனுஷ், அப்படி மீறி அதை உபயோகித்தால் அவர் மீதும் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் மீதும் 10 கோடி கேட்டு வழக்கு தொடர இருப்பதாக அதில் குறிப்பிட்டிருக்கிறார். 

நயன்தாரா குற்றம் சாட்டுவது போல தனுஷ் அப்படிப்பட்ட நபர் தானா என்பது ஒரு புறம் இருந்தாலும் ஒருவரை குற்றம் கூறும் முன் உன் பக்கம் இருக்கும் நியாயத்தையும் குற்றங்களையும் உணர்ந்து பிறகு மற்றவரை குற்றம் கூற சொல்லுகின்றது ஒரு சீன பழமொழி. அதைப்போல தனுசை குற்றம் கூறும் நயன்தாரா இவற்றுக்கு அப்பாற்பட்டவரா என்றால் நிச்சயமாக கிடையாது. திரை உலகில் நயன்தாரா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தயாரிப்பாளர்களும் சக நடிகர்களும் கொட்டிக் கொண்டுதான் இருக்கின்றார்கள். அவருக்கு உள்ள பின்புலத்தை கொண்டு அனைத்து செய்திகளையும் அவர் ஊடகங்களில் இருந்தும் மக்கள் மன்றத்திலிருந்து மறைத்துக்கொண்டு தான் இருக்கின்றார்.

இவர்களின் பிரச்சினை பற்றி நாம் கவலைப்பட வேண்டிய அவசியம் கிடையாது தான். காரணம் நாட்டில் 1008 பிரச்சனைகள் இருக்கின்றன. அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவரை ஒரு வாலிபர் கத்தியால் குத்துகின்றார் அரசு பொது மருத்துவமனையில் வாகன நிறுத்தத்தில் ஏற்பட்ட தகராறில் 10 பேர் கொண்ட கும்பல் ஒரு மருத்துவரை கொடூரமான முறையில் தாக்குகின்றார்கள். மருத்துவம் பார்ப்பதற்காக வந்த நோயாளியிடம் தனியார் மருத்துவமனைக்கு செல் என்று ஒரு மருத்துவர் விரட்டியதாக பரபரப்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. சரியான நேரத்தில் உரிய சிகிச்சை அளிக்கப்படாத காரணத்தினால் இளைஞர் இறந்து போனதாக கூறி மருத்துவமனை முன்பு பெற்றோர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சியில் ஒரு இளைஞர் நடு ரோட்டில் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இப்படி தமிழகம் முழுவதும் ஊடகங்களுக்கு அத்தியாவசியமான பிரச்சனைகள் ஆயிரம் உள்ளது. இந்த சூழலில் இந்த தனுஷ் நயன்தாரா பிரச்சனை நமக்கு தேவையா என்று ஊடகங்கள் ஆகிய நாங்கள் யோசிக்கத் தான் வேண்டும். இந்த செய்தியை போடுவதனால் யாருக்கும் எந்தவித பலனும் கிடையாது ஆனால் அதே நேரத்தில் திரையில் நாயகர்களாக நாயகிகளாக தோன்றும் பிம்பங்கள் நிஜத்தில் நாயகர்கள் தானா நாயகிகள் தானா இவர்களை நாம் போற்றி ஆராதித்து கொண்டாடி வருகின்றோம் என்று ஒவ்வொரு ரசிகனும் புரிந்து கொள்ள வேண்டிய தருணம் இது என்பதாலேயே இந்த கட்டுரையை எழுத வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு நாம் ஆளாகி இருக்கின்றோம்.

மீண்டும் தனுஷ் நயன்தாரா பிரச்சனைக்கு வரவும்.
முதலில் நயன்தாரா சார்ந்த பிரச்சினைகளை பற்றி விவாதிப்போம். நயன்தாரா மாவட்ட ஆட்சியராக ஒரு திரைப்படத்தில் நடித்திருப்பார். அந்த திரைப்படத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த ஒரு குழந்தையை மீட்க போராடும் ஆற்றல்மிக்க ஆட்சியர் கதாபாத்திரத்தில் அவர் நடித்து பலரின் பாராட்டுகளை பெற்றார். ஆனால் நிஜத்தில் அவர் அப்படிப்பட்டவரா என்றால் நிச்சயமாக கிடையாது. இதை அவர் வசிக்கும் அப்பார்ட்மெண்டில் உள்ள குடியிருப்பு வாசிகளே கூறுகின்றார்கள். அவர் வெளியில் வரும் பொழுது யாரும் அந்த பகுதியில் இருக்கக் கூடாது என்றும் அவர் செல்லும்வரை யாரும் தங்களது காரையோ பிற வாகனங்களையோ எடுக்கக் கூடாது என்றும் அவர் அதிரடி கட்டளைகளை இட்டிருப்பதாகவும் அனைவரையும் துச்சமாக பார்ப்பதாகவும் அந்த குடியிருப்பு வாசிகள் பத்திரிக்கையாளர்களிடம் கூறுகிறார்கள். நயன்தாரா நடிக்கும் எந்த ஒரு திரைப்படமானாலும் அந்த திரைப்படத்தின் நிகழ்ச்சிகளிலோ ஊடக விவாதங்களிலோ அவர் ஒருபொழுதும் கலந்து கொள்ள மாட்டார் மனதில் அவருக்கு பெண் அஜித் குமார் என்கின்ற நினைப்பு போல. அஜித்குமார் உடன் இவரை ஒரு சதவீதம் கூட ஒப்பிட்டுப் பார்க்கவே முடியாது. அஜித் குமார் என்பவர் மனிதர்களில் உச்சம் ஆனால் இவர் வேண்டாம் நாம் ஏன் அதை கூற வேண்டும். இவரிடம் சிக்கும் தயாரிப்பாளர்களின் நிலை ஐயோ பாவம் தான். இந்த சூழலில் குழந்தை பெற்றால் தன்னுடைய அழகு எங்கே பறிபோய் விடுமோ என்கின்ற பயத்தில் வாடகை தாய் மூலம் இவர் குழந்தை பெற்றதும் அது தொடர்பாக வழக்கு பதியப்பட்டதும் பின்பு தன்னுடைய பின்புலத்தை கொண்டு அந்த வழக்கை நீர்த்துப்போக செய்ததும் உலகறிந்த சங்கதி தான்.

ஆர் ஜே பாலாஜியுடன் இவர் இணைந்து நடித்த மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் பொழுது பாலாஜிக்கும் இவருக்கும் இடையில் என்ன மனக்கசப்பு ஏற்பட்டதோ தெரியாது தன்னுடைய இரண்டாம் பாகமான மூக்குத்தி அம்மன் திரைப்படத்திற்கு அவர் நயன்தாராவிற்கு பதிலாக மற்றொரு பிரபல நடிகையை நடிக்க வைக்க முயற்சி செய்தார். ஆனால் வழக்கம் போல தன்னுடைய பின் புலத்தை பயன்படுத்தி நயன்தாரா அந்த திரைப்படத்திலிருந்து அந்த நடிகையை தூக்கி அடிக்க வைத்துவிட்டு தான் அந்த கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆர் ஜே பாலாஜி இந்த திரைப்படத்தில் நடிப்பாரா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக மாறிவிட்டது.

இப்படி அவர் மீது அடுக்கடுக்காக ஆயிரம் குற்றச்சாட்டுகள் உள்ளன இந்த குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் அவர் பதில் கூறிவிட்டு பிறகு தனுஷின் மீது குற்றச்சாட்டுகளை வீசட்டும் யாரும் கேட்க போவதில்லை.

தனுஷை பற்றி சொல்ல வேண்டிய அவசியமே கிடையாது. அவர் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தது தொடங்கி இன்று இயக்குனராக மாறியது வரை 1008 குற்றச்சாட்டுகள் அவர் மீது உள்ளன. அவரோடு ஒரு திரைப்படத்தில் இணைந்து நடித்த நடிகை மீண்டும் அவரோடு நடிப்பதற்கு விரும்புவதே இல்லை அவர் அழைத்தால் கூட ஒதுங்கி கொள்கிறார்கள். அதற்கு சரியான உதாரணமாக நயன்தாராவை கூட கூறலாம். தனுஷால் திருமண வாழ்க்கையை பறிகொடுத்த திரையுலக தம்பதிகள் ஏராளம் என்பது பத்திரிகைகள் மூலமாக நாம் அறிந்த செய்தி. இப்படி தனுஷ் மீதும் 1008 குற்றச்சாட்டுகள் உள்ளன. திரையில் மட்டுமே நல்ல நடிகராக தெரியும் தனுஷ் நிஜ வாழ்க்கையில் நடிகரா அல்லது நல்ல மனிதரா என்பது யாமறியோம் பராபரமே.

ரசிகர்களே எங்களின் அன்பு வேண்டுகோள் ஒன்றே ஒன்றுதான். திரைப்படங்களை திரைப்படங்களாக பாருங்கள் அதில் நடிக்கும் கதாநாயகர்களை கதாநாயகிகளை திரை பிம்பங்களாக மட்டுமே பாருங்கள். நிஜத்தில் அவர்களை ஹீரோவாக உயர்த்தி ஹீரோயினாக உயர்த்தி கொண்டாட வேண்டாம். அவர்கள் படம் பிடித்திருந்தால் கைதட்டி ரசியுங்கள் ஒரு முறைக்கு இருமுறை தவறில்லை ஆனால் அவர்களை தலையில் வைத்து கொண்டாடாதீர்கள். நீங்கள் தலையில் வைத்து கொண்டாடுவதற்கான எந்தவித தகுதிகளும் இந்த நடிகர் நடிகைகளிடம் கிடையாது. நமக்காக நம்மை காப்பதற்காக இந்திய எல்லையில் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் உணவு உடை உறைவிடம் மனைவி மக்கள் சந்தோஷம் என்று எதையும் பார்க்காமல் நமக்காக காத்து நிற்கும் அந்த ராணுவ வீரர்களை கொண்டாடுங்கள். காவல்துறையினரை கொண்டாடுங்கள் மருத்துவரை கொண்டாடுங்கள் வழக்கறிஞர்களை கொண்டாடுங்கள் உங்கள் ஆசிரியர்களை கொண்டாடுங்கள் உங்கள் நண்பர்களை கூட கொண்டாடுங்கள் ஆனால் தயவுசெய்து திரையில் மட்டுமே நல்லவர்களாக வேஷம் இடும் இந்த நடிகர் நடிகைகளை மட்டும் நம்பவே நம்பாதீர்கள். இதனால் இழப்பு உங்களுக்கு மட்டுமே

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    என் சி சி பி ஏ (NCCPA) சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமானது திருச்சியில் நடைபெற்றது

    இன்று திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சலகம் முன்பாக மத்திய அரசனை கண்டித்து நேஷனல் குவார்டினேஷன் கமிட்டி ஆப் பென்ஷன் அஸ் அசோசியேசன் ( NCCPA)மற்றும், (AIPRPA)ஏ ஐ பி ஆர் பி ஏ , (AIBDPA)ஏ ஐ பி டி பி ஏ,…

    வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

    வக்பு வாரிய சட்டத்தை கண்டித்து இந்தியா முழுவதும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மத்திய அரசு கண்டித்து வக்பு வாரிய சட்டத்தை திரும்ப…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *