

திருச்சி மாவட்டம் லால்குடி எல்என் பி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நவம்பர் 20 சர்வதேச குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தை உரிமை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் நளினா தலைமையில் 20.11.24 நடைபெற்றது. மாவட்ட குழந்தை நலக்குழு உறுப்பினர் முனைவர் பிரபு அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் அழகம்மை ஆகியோர் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு குழந்தை திருமண

தடுப்புச் சட்டம் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் மற்றும் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம், கல்வியின் அவசியம் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு வழங்கினார்கள். குழந்தைகளுக்கான இலவச தொலைபேசி எண் 10 9 8 என்ற எண்ணை பள்ளி குழந்தைகளால் உருவாக்கப்பட்டு அனைத்து மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர், காவலர்கள் செய்திருந்தனர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 1000க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

