
பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு இடையூறாய் இருக்கும் உறையூர் பகுதி, சீனிவாச நகரில் இயங்கி வரும் மதுபான கடையை நிரந்தரமாக மூடக்கோரி
கடந்த மாதம் 8ம் தேதி திருச்சி மாநகர் மாவட்ட அமமுக சார்பில் உறையூர் பகுதி செயலாளர் கல்நாயக் சதீஷ்குமார் தலைமையில்,
திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ப. செந்தில்நாதன் முன்னிலையில்,
திருச்சி சீனிவாச நகர் மற்றும் லிங்க நகரில் ( மனமகிழ் மன்றம் ) இயங்கி வரும் மதுபான கடைகளை மூடக்கோரி நடைபெற்ற உண்ணாவிரதம் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்தது.
இதனை மீறி உண்ணாவிரதம் இருக்க முயன்ற அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் அன்று கைது செய்யப்பட்டனர்.
திருச்சியில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கிடையாது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளதால் அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநகர் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் மதுரை உயர் நீதிமன்றத்தில் உறையூர் குறத்தெருவில் முறைப்படி உண்ணாவிரதம் இருக்க வழக்கு தொடர்ந்து இருந்தார். இதன் வழக்கு தீர்ப்பு தற்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருக்க அனுமதி அளித்து வந்துள்ளது .

எனவே வரும் டிசம்பர் இரண்டாம் தேதி திங்கட்கிழமை அன்று உறையூர் குறத்தெருவில் திருச்சி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் உறையூர் சீனிவாசா நகரில் உள்ள டாஸ்மாக் பார் மற்றும் லிங்கநகர் மனமகிழ் மன்றத்தை மூடக்கூறி மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொள்ள உள்ளனர் என
திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தெரிவித்துள்ளார் .
டாஸ்மாக் மற்றும் மனமகிழ் மன்றத்தை மூட கோரி திருச்சி அமமுகவினருக்கு சாதகமாக வந்துள்ள உயர் நீதிமன்ற தீர்ப்பே முதல் வெற்றி ஆகும் .
