
:
ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் பல லட்சம் பெண்கள் இந்த நோயினால் பாதிக்கப்படுகின்றனர் .இதைப்பற்றி போதிய விழிப்புணர்வு பெண்களிடம் இல்லாததே காரணமாகும். பெண்களிடையே மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அக்டோபர் மாதம் பிங்க் அக்டோபர் மாதமாக அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி ஹர்ஷமித்ரா மருத்துவமனை புற்றுநோய் மற்றும் மல்டி ஸ்பெஷாலிட்டி மற்றும் ரோஸ் கார்டன் இலவச அறக்கட்டளை இணைந்து புற்றுநோயிலிருந்து குணமடைந்தோருக்கான சந்திப்பு 22 ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை திருச்சி நாகமங்கலத்தில் உள்ள ஹர்ஷமித்ரா மருத்துவமனையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக டாக்டர் டாக்டர் . துளசி எம் எஸ் டி ஜி ஓ அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் முதல்வர் ,தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை மற்றும் கல்லூரி தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம் சமயபுரம் திருச்சி மற்றும் டாக்டர். B. மென்மொழி .,MD.,DGO., மகப்பேறு சிறப்பு மருத்துவர் ,நிர்வாக இயக்குனர் பாலாஜி மருத்துவமனை மணப்பாறை மற்றும் சகோதரி. சகாயமேரி .,MSc ,Nursing, செயலாளர், சர்வைட் செவிலியர் கல்லூரி, மணிகண்டம், திருச்சி . ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கௌரவ அழைப்பாளராக கலைமாமணி. திருமதி நித்யா ரவீந்திரன், நடிகை மற்றும் டப்பிங் கலைஞர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்.இந்த சிறப்பு நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் மற்றும் புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் கலந்து கொண்டனர்.மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தங்களது அனுபவங்களை நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டனர் .மேலும் மார்பக புற்றுநோய் சிகிச்சையில் இருப்பவர்கள் தங்களுக்கு உண்டான சந்தேகங்களை குணமடைந்தோரிடம் கேட்டு தெரிந்து கொண்டனர். அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக சிறப்பு விருந்தினர்கள் சிறப்புரையாற்றினர். கௌரவ அழைப்பாளராக வந்திருந்த கலைமாமணி. திருமதி .நித்யா ரவீந்திரன் அவர்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தும் விதமாக உரையாற்றினார். முன்னதாக சிறப்பு விருந்தினர்கள் மற்றும் கௌரவ அழைப்பாளரை வரவேற்று வரவேற்புரை யாற்றினார் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் ஜி கோவிந்தராஜ் வர்தனன் ,புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் இந்த சந்திப்பின் முக்கிய நோக்கமாக மார்பக புற்றுநோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மார்பக புற்றுநோயால் குணமடைந்தவர்களை அனுபவங்களை கேட்டல், சிகிச்சையின் போது அவர்கள் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் சந்தித்த பிரச்சனைகள் முழுமையாக குணமடைந்த பின்பு அவர்களின் மனநிலையை கேட்டறிதல் ,புதிதாக மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களை சிகிச்சைக்கு ஊக்கப்படுத்துதல் மற்றும் சந்தேகங்களை தெளிவு படுத்தி அவர்களுக்கு இடையேயான ஒரு நட்பு வட்டாரத்தை உருவாக்குவதே காரணம் என்று தெரிவித்தார் டாக்டர் .க. கோவிந்தராஜ் நிர்வாக இயக்குனர். மேலும் இந்த பிங்க் அக்டோபரில் மார்பக புற்றுநோயை தடுக்கும் வகையில் ஆரம்ப கட்ட நிலையிலேயே கண்டறியும் பரிசோதனைகளான மேம்மோகிராம், தெர்மோ கிராம் ,சோனோகிராம் ஆகிய 3கிராம் @999 என்ற வாசகத்தோடு பெண்களை ஊக்கப்படுத்தும் வகையில் சலுகை விலையில் செய்து வருகிறது என்றார். இச்சிறப்பு நிகழ்ச்சியின் இறுதியாக நிகழ்ச்சியை சிறப்பித்த அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார் மருத்துவர் P. சசிப் பிரியா செயல் இயக்குனர் அவர்கள் இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஹர்ஷமித்ரா மருத்துவமனை பணியாளர்கள் ஒருங்கிணைத்தனர்.