

விழுப்புரம் மாவட்ட காவல்துறை
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக இரண்டாம்நிலை காவலர்கள் மற்றும் சிறைத்துறை காவலர்கள் பணியிடங்களுக்கு விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 34 நபர்கள், உளுந்தூர்பேட்டை தமிழ்நாடு சிறப்பு காவல் படை 10ம் அணி சேர்ந்த 63 நபர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் 33 என மொத்தம் 130 நபர்களுக்கு இன்று 27.11.2024-ம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதல்

விழுப்புரம் காவலர் சமுதாய கூடத்தில் இன்று விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் .தீபக் சிவாச் இ.கா.ப., அவர்கள் பணி நியமன ஆணை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.

உடன் உளுந்தூர்பேட்டை கூடுதல் தளவாய் .ரவி மற்றும் மாவட்ட தீயணைப்பு அதிகாரி பாஸ்கரன் ஆகியோர் உடன் இருந்தனர்.