
ஆறு மாதத்தில் மாற்றம் மக்களுக்குத்தான் தான் ஏமாற்றம்
திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு ராஜா , BDO அவர்கள் 6 மாதத்தில் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் மிகவும் நேர்மையான அதிகாரி இவரது மாற்றம் அரசியல்வாதிகளின் செயலாக இருக்குமோ என்று தோன்றுகிறது .
மதிப்பிற்குரிய திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு திருப்பராய்த்துறை ஊராட்சி சேர்ந்த மக்களின் வேண்டுகோள் என்னவென்றால் முடிந்தால் தயவு செய்து மீண்டும் BDO திரு ராஜா அவர்களின் பணியிட மாற்ற உத்தரவை கேன்சல் செய்து மீண்டும் அவரை அந்த நல்லூர் ஊராட்சியிலேயே பணி செய்வதற்கு வாய்ப்பு வழங்கிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இல்லையென்றால் நஷ்டமா எங்களுக்கு தான், மக்களுக்கு தான் சார். BDO திரு ராஜா போல நேர்மையான மற்றும் உன்னதமான செயல்வீரரை பார்த்ததில்லை.
திருப்பராய்த்துறை ஊராட்சியில் BDO திரு ராஜா சார் செய்த பணிகள்
மக்களுக்காக செயல்பட வேண்டும் மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றி தர வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார்.
மக்கள் குடிநீர் மஞ்சள் நிறமாக வருகிறது என்று கம்பளைண்ட் வைத்தவுடன் அதை உடனே சரி செய்வதற்கு முயற்சிகள் செய்து டேங்க் சுத்தமாக கிளீன் செய்வதில் ஈடுபட்டிருந்தார்.
திருப்பராய்த்துறை ஊராட்சியில் பேருந்து நிலையத்தில் பல வருடமாக எரியாமல் இருந்த மின்சார உயர் கம்ப மின்விளக்குகள் பொருத்தவரில் முக்கிய பணியாற்றினார். மின்விளக்குகள் சரி செய்து அதற்கு மாற்று ஏற்பாடு செய்து கொடுத்து தற்போது மூன்று மூன்று விளக்குகள் பொருத்துவதற்கு உதவி புரிந்தார்
திருப்பராய்த்துறை ஊராட்சியில் காமராஜ் நகரில் கொசு மருந்து அடிப்பதில் முன் நின்று செயல்படுத்தினார்.
திருப்பராய்த்துறையில் திருமஞ்சனத் துறைக்கு செல்லும் கைப்பிடி இல்லாத ஆபத்தான நிலையில் உள்ள ஆற்றைக் கெடுக்கும் பாலத்தை காவிரியில் நீர் நின்றவுடன் போதுமான பாதுகாப்பு வசதி செய்து பராமரித்து செய்து தருவதாக உறுதியளித்திருந்தார்
எலமனூரில் ஒற்றைப் பாலத்தில் ஆபத்தான முறையில் விவசாயிகள் பயணிக்கிறார்கள் என்று அறிந்த உடனே ஊராட்சி இன்ஜினியருடன் அந்த இடத்தை பார்வை செய்து களப்பணி செய்து அதற்கு மாற்று ஏற்பாடு எவ்வாறு செய்யலாம் என்று பரிசீலித்து வருகிறார்.
எலமனுர் விவசாயிகள் ஒற்றை பாலத்தில் வாய்க்காலை கடப்பதை கலைப்பணி செய்ய வந்த பொழுது, எலமனுர்மக்கள் தெரு விளக்கு இல்லை ரோடு விளக்கில்லை என்ற கம்பளைண்ட் வைத்தனர் அதையும் கூடி விரைவில் சரி செய்வது தருவதாக கூறியிருந்தார்.
நந்தவனத்துக்கு, கோவில் ஊருக்கு தனது சொந்த செலவில் கொசு மருந்து அடித்துக் கொடுத்தார்.
அவரதுகவனத்திற்கு சென்றவுடன்அம்பேத்கார் நகரில் பல மாதங்களாக பழுதாகி இருந்த மின்மோட்டரை இரவு ஒன்பதரை மணியளவில் உடனே சரி செய்து கொடுத்தார் குடி தண்ணீர் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்தார்.
எலமனூர் ஒரு தீவு அந்த ஊருக்கு செல்வதற்கு ஒரே ஒரு பாலம் தான் உள்ளது. அந்த பாலம் பராமரிப்பின்றி இடிந்து விழும் நிலையில் உள்ளது என்று அறிந்தவுடன் அந்த பாலத்தை ஆய்வு செய்து தற்காலிக நடவடிக்கையாக வாய்க்காலில் நீர் குறைந்த உடன் பராமரிப்பு பணி செய்து தருவதாக உறுதியளித்திருந்தார்.
BDO திரு ராஜா இப்பொழுது இவர் அந்தநல்லூர் ஊராட்சியில் இருந்து திருவரம்பூர் ஊராட்சிக்கு செல்கிறார். ஒரு வேலை இவரது வேலை செய்யும் திறமை, நேர்மை தன்மை, மற்றும் மக்களுக்காக களத்தில் நின்று போராடுபவர் என்று அறிந்தவுடன் மதிப்பிற்குரிய அமைச்சர் திரு மகேஷ் பொய்யாமொழி அவரை நிர்வாக காரணம் காட்டி அங்கு அழைத்திருக்கலாமென்று நினைக்கத் தோன்றுகிறது
எது எப்படியோ அந்தநல்லூர் ஊராட்சிக்கு பெரிய இழப்பு திருவரம்பூர் ஊராட்சிக்கு அங்கு உள்ள மக்களுக்கும் அடித்தது லாட்டரி
திருப்பராய்த்துறை ஊராட்சியை சிங்கப்பூர் ஆக மாற்ற கனவு கண்டிருந்தோம் ஒரு ரெண்டு வருஷம் இருந்தீங்கன்னா தலைகீழ திருப்பி போட்டு இருப்போம் சார். நாங்கள் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்.
BDO திரு ராஜா Sir, பணி சிறக்க வாழ்த்துக்கள்.
