

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் திருச்சி மணப்பாறையில் ஜனவரி 2025’இல் நடைபெறவிருக்கும் பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் வைரவிழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு பெருந்திரளணி நிகழ்வின் முன்னேற்பாடு பணிகளை இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, அப்துல் சமது, மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாவட்ட முதன்மை ஆணையர் அறிவொளி சேர்மன்
அமிர்தவள்ளி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர் .
