

அன்புடையீர்க்கு வணக்கம்,
கழகப் பொதுச் செயலாளர், வருங்கால முதல்வர், மக்கள்செல்வர் அவர்களின் ஆணைக்கிணங்க,
தலைமை நிலைய செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு M.ராஜசேகரன் அவர்களின் ஆலோசனையின் படி,
மதுபானங்களுக்கு எதிரான அம்மா மக்கள் முன்னேற்றக் கழக போராட்டங்களின் ஒரு அங்கமாக,

மக்களின் எதிர்ப்பையும் மீறி உறையூர் பகுதியில் இயங்கி வரும் இரண்டு மதுபான கடைகளை நிரந்தரமாக மூடக்கோரி, மாண்புமிகு மதுரை உயர் நீதிமன்ற கிளையின் அனுமதியுடன்,

திருச்சி மாநகர் மாவட்டம் சார்பாக, உறையூர் குறத் தெருவில், வருகின்ற டிசம்பர் 2-ம் தேதி (திங்கட்கிழமை) நடைபெறப் போகும் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கழக நிர்வாகிகள் அனைவரும், தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இ்வ் உண்ணாவிரத போராட்டம், தற்பொழுது இரண்டு மதுக் கடைகளுக்கு எதிரான போராட்டத்தின் தொடக்கப் புள்ளியாக இருந்தாலும், இதுவே திருச்சி மாநகரில், உயிர்பலிகள் வாங்கி, மக்கள் பாதிப்படையும் வகையில் இயங்கி வரும் மேலும் மதுக்கடைகளை (முடுக்குபட்டி பாலம், புத்தூர் நான்கு முனை, தென்னூர் அரச மரத்தடி, சஞ்சீவ் நகர் புறவழிச்சாலை, பால்பண்ணை சென்னை புறவழிச்சாலை, உய்யக்கொண்டான் பாலம், சிந்தாமணி அண்ணா சிலை அருகே போன்றவற்றை), அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதற்கு வாய்ப்பாகும்.

எனவே இவ் உண்ணாவிரத போராட்டத்தில், முறைகேடான மது விற்பனைக்கு எதிராக போராடி வரும் சமூக ஆர்வலர்களும், மதுவின் தீமையை எடுத்துரைக்கும் நல்லோரும், மது அரக்கனால் பாதிக்கப்பட்டவர்களும், எங்கள் கழக உறுப்பினர்களுடன் பங்கு பெற்று, முறைகேடான மதுவிற்பனைகளுக்கு எதிரான போரில் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

மக்கள்செல்வர் வழியில்,
ப.செந்தில்நாதன் BE, MBA (UK), Ex MC,
மாவட்டச் செயலாளர்,
திருச்சி மாநகர் மாவட்டம்.
