Jumped Deposit” என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியாதெனில் தவறாமல் கடைசி வரை வாசித்துவிடுங்கள்

இது ஒரு சைபர் க்ரைம். லேட்டஸ்ட் ரிலீஸ். இந்த வாரம் தமிழகக் காவல்துறையின் சைபர் க்ரைம் பிரிவினர் இது குறித்து எச்சரித்துள்ளனர்.

கடந்த சில வாரங்களாக இவ்வகையான சைபர் குற்றம் வெகுவேகமாக அதிகரித்து வருகிறது.

Jumped Deposit என்றால் என்ன?

  • இது UPI வாடிக்கையாளர்களைக் குறிவைத்து நடத்தப்படும் ஒரு சைபர் க்ரைம்.
  • முதலில் உங்கள் கணக்கில் ஒரு சிறிய தொகை வரவு வைக்கப்படும். நிஜமாகவே.
  • அவ்வாறு வரவு வைக்கப்பட்டதற்காக ஒரு எஸ்.எம்.எஸ் வரும்.
  • நாமும் ஆர்வமாக “எங்கிருந்து பணம் வந்திருக்கிறது” என்று தெரிந்துகொள்ள முனைவோம்.
  • இதற்கிடையில், உங்களுக்குப் பணம் அனுப்பியவர் ஒரு withdrawal requestம் அனுப்பியிருப்பார்.
  • அவசரமாக நீங்கள் UPI செயலியைத் திறந்து PIN எண்டர் செய்துவிட்டால் மேட்டர் ஓவர். அவர் அனுப்பிய withdrawal request அக்செப்ட் ஆகிவிடும்.
  • இதன் மூலம் ஒரு பெரிய தொகை கண்ணிமைக்கும் நேரத்தில் உங்கள் கணக்கிலிருந்து காணாமல் போய்விடும்.

என்ன நடக்கிறதென்று புரிவதற்குள் எல்லாமும் முடிந்துவிடும். கொத்துக் கொத்தாக இந்த JD க்ரைமில் மக்கள் ஏமாந்து வருகின்றனர்.

எவ்வாறு தப்பிப்பது?

  • பணம் வந்திருக்கிறதென்று எஸ்.எம்.எஸ் வந்தால் உடனே UPI செயலியைத் திறக்கக் கூடாது.
  • குறைந்த பட்சம் முப்பது நிமிடங்களாவது பொறுமை காக்கவும்.
  • இவ்வாறு செய்வதால் என்னாகும்? எந்தவொரு withdrawal requestக்கும் “வேலிடிட்டி டைம்” என்று ஒன்றுள்ளது. நீங்கள் அரை மணி நேரம் காத்திருப்பதால் அவர்கள் அனுப்பியுள்ள ரெக்வெக்ஸ்ட் காலாவதியாகிவிடும்.

எளிய உபாயம் தான். ஆனால் பணம் வந்திருக்கிறதென்று தெரிந்த பின்னர், “யார், என்ன, ஏன்” என்று தெரியாமல் காத்திருப்பது கடினம். பலராலும் முடியாது.

சாதாரண ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப் நோட்டிஃபிக்கேஷன்கள் வந்தாலே பார்க்காமல் இருப்பது சிரமம். பணம் வந்திருக்கிறதென்றால் நியர் இம்பாஸிபிள்.

இந்த உளவியல் தந்திரம் தான் Jumped Deposit க்ரைமின் தூண்டில். சிக்காமலிருங்கள்.

“ஒரு பொய் சொன்னா அதுல கொஞ்சம் உண்மையும் கலந்துருக்கணும்” சதுரங்க வேட்டை திரைப்படத்தில் இவ்வசனம் வரும்.

ஏமாற்றுபவர்களின் ஆயுதம் பொய் மட்டுமல்ல. அதில் கலந்திருக்கும் சிறுதுளி உண்மையும். Jumped Depositக்கும் இது பொருந்தும்.

பொறுத்தார் பூமி ஆள்வார்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    வெற்றி! வெற்றி! திருப்பராய்த்துறை மக்கள் தொடர்பு முகாம் வெற்றி!அதிரடி அமைச்சர் ரமேஷ் – அள்ளிக் கொடுத்த நலத்திட்டம்!வாரிக் கொடுத்த வள்ளல்கள் – வழிகாட்டும் அதிகாரிகள் – திருப்பராய்த்துறையில் நலத்திட்ட அள்ளல்!பட்டா முதல் ஆண்ட்ராய்டு மொபைல் வரை 164 பேருக்கு ரூ.73.56 லட்சம் உதவிகள்

    திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் திருவிழா போல் களைகட்டியது. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் நடைபெற்ற இந்த முகாமில் 164 பயனாளிகளுக்கு ரூ.73 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட…

    84 ஆண்டுகால மர்மக் கோட்டை நொறுங்கியது! தபோவனத்தில் புகுந்த BDO அண்ணாதுரை… அநீதிக்கு முடிவு கட்டிய கிருஷ்ண அவதாரம்! வரி ஏய்ப்பு சாம்ராஜ்யத்திற்குப் பூட்டு… தமிழகத்தை அலறவிட்ட BDO-வின் தர்ம யுத்தம்!

    மகாபாரதத்தில் அஸ்தினாபுரத்து சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு, “ஊசி முனை நிலத்தைக் கூட பாண்டவர்களுக்குத் தர மாட்டேன்!” என்று துரியோதனன் பிடிவாதம் பிடித்தானே… அதே போன்ற ஒரு சாம்ராஜ்ய ஆணவமும், 84 ஆண்டு கால அநீதியும் திருச்சிராப்பள்ளி மண்ணில் சுக்குநூறாக உடைந்து நொறுங்கியிருக்கிறது!…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *