இன்று திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சலகம் முன்பாக மத்திய அரசனை கண்டித்து நேஷனல் குவார்டினேஷன் கமிட்டி ஆப் பென்ஷன் அஸ் அசோசியேசன் ( NCCPA)மற்றும், (AIPRPA)ஏ ஐ பி ஆர் பி ஏ , (AIBDPA)ஏ ஐ பி டி பி ஏ, (DRPU)டி ஆர் பி யு, (ITPA)ஐ டி பி ஏ, சார்பாக நடைபெற்றது .

இதில் மத்திய அரசு 25 .3 .2025 அன்று பாராளுமன்ற மக்களவையில் பென்ஷன் வசதிகள் திருத்த நிதி மசோதாவை 2025 ஐ நிறைவேற்றி உள்ளது. இம்மா அசோதாவில் உள்ள சரிபார்த்தல் விதி 145 ன் படி அரசாங்க ஓய்வூதியதாரர்களை அவர்கள் ஓய்வு பெற்ற தேதியின் அடிப்படையில் வேறுபடுத்தி அதன் அடிப்படையில் ஊதிய கமிஷன் பரிந்துரை பழங்களை அமல்படுத்த அரசாங்கத்துக்கு அதிகாரம் அளிக்கின்றது. இந்த திருத்தம் மிக பாரபட்சத்துடன் ஓய்வூதியர்களை வஞ்சிக்கும் விதமாகவும் உள்ளது.

மேலும் இத்திருத்தம் சிசிஎஸ் பென்ஷன் விதிகள் 1.06.1972 முதல் பெண் தேதியிட்டு அமலாக்கப்பட உள்ளதால் எட்டாவது ஊதிய குழுவின் பரிந்துரைகளின் பலன்கள் அனைத்தும் ஓய்வூதியதாரர்களுக்கும் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது எனவே சட்ட திருத்தத்தை எதிர்த்தும் ரத்து செய்யக் கூறியும் மத்திய அரசினை கண்டித்து மத்திய சங்கத்தின் அறைகூவலின்படி நடைபெற்றது என்று கூறினார்
