

பாகுபலி மெகா ஹிட் ஆவதும், கங்குவா சங்கு ஊதியதும் வெறுமனே அரசியல் முன்விரோதம் காரணமாக அல்ல.
சூர்யா + ஜோதிகா மனதில் ஆழமாக ஊன்றிப்போய்விட்ட அரசியல் ஆசை அல்லது சந்தர்ப்பவாதம் தான் காரணம்.
எதார்த்தமாக கதையை எடுப்பதோ அல்லது வசூலுக்காக சினிமாத்தனத்தை சேர்ப்பதோ கலைஞனின் உரிமை. ஆனால் சூர்யா போன்றவர்கள் படத்தையும், தன்னையும், தான் பல வழிகளிலும் குவித்து வைத்திருக்கும் சொத்துக்களையும் பாதுகாக்க பல்வேறு தரப்பினரை குஷிப்படுத்த அரசியல் ரீதியாக படத்தை டுவிஸ்ட் பண்ணி கதை அமைக்கிறார்கள்.
ஒரு பக்கா பிராமணரின் வாழ்க்கை வரலாறை வைத்து சூரரை போற்று படத்தை எடுத்து அதில் ஹீரோ, ஹீரோயின் இருவரையும் நாத்திகர்களாக, பெரியார் சிஷ்யர்களாக காட்ட வேண்டிய அவசியம் என்ன? இது திட்டமிட்டு திராவிட லாபிக்காக திரிக்கப்பட்ட திரைக்கதை.
அது போலவே.. பழங்காலத்து கதை என்ற பெயரில் கங்குவா எடுத்து, அதில் திட்டமிட்டு பழங்குடி மக்களின் வழிபாட்டு முறைகள், நம்பிக்கைகள் பற்றி எதுவும் பெரிதாக வராதபடி கதையை திரித்திருக்கிறார்கள். பழங்குடிகளின் வாழ்க்கை முறையில் கடவுள் நம்பிக்கை மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது. அன்றாட வாழ்வியலில் கடவுளின் பங்கு மிகப்பெரியது. படத்தின் எந்த இடத்திலும் குறிப்பிடத்தக்க அளவில் கடவுள் சிலையோ, அடையாளங்களோ, வழிபாட்டு காட்சிகளோ இருக்காது.
ஒப்பிட்டு பார்த்தால் பாகுபலி படத்தில் கடவுள் நம்பிக்கை தேவையான இடங்களில் காட்டப்பட்டிருக்கும். பரமேஸ்வரன் சாட்சியாக அரசன் பதவி ஏற்பது, ஈசனுக்கு அக்கனி கலசத்தில் யாத்திரை, குந்தலதேசத்தில் கண்ணன் பூசை, சிவா சிவாய போற்றி பாடலும் சிவனை சுமந்து செல்லும் காட்சியும், யானை மேல் மஞ்சள் தூவி விநாயகர் வழிபாடு என்று அந்தந்த காலத்து மாந்தரின் மனநிலை, நம்பிக்கைகள், பண்பாடு எல்லாம் சேர்ந்து வரும் போது கதை இயல்பாக உள்ளது.
ஆனால் காங்குவா போன்ற திரிக்கப்பட்ட கதைகளில் உயிர் நாடியான பண்பாட்டு விழுமியங்களை வலிந்து நீக்குவதால் கதை ஜீவனற்று போகிறது. எந்த வகையிலும் கதைமாந்தரோடு சாமானியன் Connect ஆகவே முடிவதில்லை. பாகுபலியில் சிவ லிங்கத்துக்கு பதில் ஒரு அரிசி மூட்டையை தூக்கிப்போயிருந்தால் அந்த மெய்சிலிர்ப்பு நமக்கு உண்டாகி இருக்காது. சிவகாமி தேவி தலையில் தீச்சட்டி வைத்து நடப்பதற்கு பதில் ஒரு பானை தண்ணீரை தூக்கி போயிருந்தால் பாகுபலி தேரை இழுத்து யானையை தடுப்பது சுவாரசியமாக இருக்காது.
எல்லா பிரம்மாண்டத்துக்கும் அடித்தளம் “ஏன்?” என்ற கேள்வி தான். சந்திரலேகா (1948) படத்தில் கிளைமேக்ஸ் பாடல் ஒன்றில் பல நூறு கலைஞர்களோடு ஒரு பிரம்மாண்ட நடனம், அதை 40-50 வருடம் கழித்து டிவியில் பார்த்த எனக்கு Goosebumps வர காரணம் அந்த பிரம்மாண்டம் பலிக்க வேண்டும், அரசனை கொல்ல வேண்டும் என்று நாம் விரும்புவதால் தான். இயக்குனர் சங்கரின் பிரம்மாண்டங்கள் பிற்காலத்தில் பிசுபிசுத்து போக காரணம் இது போல காரணம்/தேவை அழுத்தமாக இல்லாமல் சும்மாவே ஆயிரம் டிவியை போட்டு உடைப்பதால் தான்.
அப்படி ஒரு காரணத்தை Period Film இல் கொண்டு வர கடவுள், பண்பாடு போன்றவை அடிப்படை. ஆனால் அப்படி காட்டினால் இந்து மதத்தை ப்ரமோட் பண்ற மாதிரி இருந்துவிடுமோ என்று அவர் பயந்திருக்கலாம். ஹிந்தியில் வரும் முழு நேர பிரச்சார படங்களாக இருந்தாலும் கஷ்டம் தான்.
ஆனால் அதற்காக காட்டக்கூடாத வஸ்துவாக கடவுளையும், நம்பிக்கைகளையும், பண்பாட்டையும், சடங்கு முறைகளையும் நினைத்தால் இது எதுவுமே இல்லாத பெரியார் திடல் திண்ணிகளின் ஹிப்பி, பொறுக்கித்தன வாழ்க்கை முறையை படமாக எடுக்கலாம். அதில் பண்பாடு பற்றி தட்டையாக எடுத்து, எல்லாமே பணம், செக்ஸ், அதிகாரம், ஆதாயம் தான் வேறு எதுவும் வாழ்வில் தேவையில்லை என்று கதை அமைக்கலாம். பொருத்தமாக இருக்கும்.
பழங்குடிகள் எங்கள் முன்னோர்கள். அவர்களே வளர்ந்து அரசுகளாக ஆனார்கள். பாகுபலி என்கிற அரசனுடைய கதையை எடுத்து அது எங்கள் முன்னோர் கதை என்று உணர வைத்த டீம் எங்கே..
எங்கள் டிஎன்ஏவில் ஆழ ஊன்றி இருக்கும் எங்கள் முன்னோர் பழங்குடிகளின் கதையை எடுத்து அதில் எங்களை துளி கூட ஒட்டிவிடாமல் மணிரத்னம் கிராமத்தை காட்டிய மாதிரி மேம்போக்காக நுனிப்புல் மேய்ந்த கங்குவா டீம் எங்கே?
பாகுபலி புலியை பார்த்து, கங்குவா பூனை சூடு போட்டுக்கொண்டது. பாவம் அந்த பூனையை கூட சூப் வைத்துவிட்டார்கள் பாட்டாளிகள்!!
