உயர் மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கையில் கருப்பு கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டம்!

தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்: 9715328420

மூலனூர்:உயர் மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கையில் கருப்பு கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டம்!

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் வெள்ளகோவில் ஒன்றியம் மூத்த நாயக்கன் வலசு முதல் தாராபுரம் வட்டம் மூலனூர் ஒன்றியம் தூரம்பாடி வரை டாடா நிறுவனம் விவசாயிகள் விலை நிலத்தில் விவசாயிகளின் அனுமதியின்றி உயர் மின் கோபுரம் அமைத்து வருகிறது.

இதனை கண்டித்து வேலப்பநாயக்கன் வலசு, எரசனம் பாளையம், கருப்பன்வலசு, தூரம்பாடி ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கையில் கருப்பு கொடி ஏந்தி உயர்மின் கோபுரங்களுக்கு எதிராக எரசனம் பாளையம் கிராமத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது விவசாயி. செங்கோடன் கூறியதாவது:-

உயர் மின் அழுத்த கோபுரத்தினால் தங்களது விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும் மேலும் டாடா நிறுவனம் கே எஸ் என்ற துணை நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது .மூலனூர்,
வெள்ளகோவில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து அதில் மின்சார கம்பங்களை அமைத்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் உள்ள 46 பனை மரங்களை வெட்டி சாய்த்துள்ளனர். விவசாயிகளிடம் எந்தவித அனுமதியும் கேட்பதில்லை .அதனால் நிறுவனத்தின் ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும் .இது போன்ற நிறுவனங்களுக்கு திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் அனுமதி வழங்கக் கூடாது. மேலும் விவசாயிகளின் விலை நிலங்களின் தற்போதைய சந்தை மதிப்பு என்ன என்பதை எந்த நிறுவனமும் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. நிறுவனங்களே ஒரு குறிப்பிட்ட தொகையை விவசாயிகளுக்கு தருவதாக கூறி வருகின்றனர். இதனால் எங்களுக்கு எங்கள் கிராமங்களில் உயர்மின் அழுத்த கோபுரம் அமைக்க நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். மேலும் ,உயர்மின் கோபுரங்கள் அமைத்தால் ஆடு, மாடு சினை பிடிக்காது மற்றும் நிலத்தடி நீர் குறைந்து விடும் நிலத்தின் மதிப்பு குறைந்து விடும் . எனவே டாட்டா நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனமான கேஎஸ் நிறுவனம் அமைத்து வரும் உயர்மின் கோபுர திட்டத்தை கைவிட வேண்டும். அவ்வாறு உயர்மின் கோபுரங்களை அமைக்கும் பட்சத்தில் விவசாயிகள் நீர்நிலைகளை காப்பாற்றுவதற்காக எங்களது உயிர்களையும் இழக்க தயாராக உள்ளோம். மேலும் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகியவற்றில் 1000 விவசாயிகள் ஒன்று திரண்டு காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ள உள்ளோம் .
இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

பேட்டி: திரு,செங்கோடன் கருப்பன் வலசு.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    நூற்றுக்கால் மண்டபத்தில் நர்சரி… குழந்தைகளின் உயிருடன் யார் விளையாடினார்கள்? “ஆயிரம் ஆண்டு கோவில்… அனுமதியில்லா பள்ளி… யார் கொடுத்த தைரியம்?”

    திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், திருப்பராய்த்துறை வருவாய் கிராமத்தில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோவிலின் நூற்றுக்கால் மண்டபம், வழிபாட்டு மரபின் சின்னமாக இல்லாமல், பல ஆண்டுகளாக அனுமதியின்றி இயங்கிய மழலையர் பள்ளியின் வகுப்பறையாக மாற்றப்பட்டிருந்தது கல்வித்துறையின் ஆய்வில் வெளிச்சத்துக்கு…

    திருச்சி டவுன் பஸ்களின் திமிர் அடங்குமா?பஞ்சப்பூர் வழித்தடத்தில் பயணிகளை படுத்தும் பாடு!

    திருச்சி டவுன் பஸ்களின் திமிர் அடங்குமா?பஞ்சப்பூர் வழித்தடத்தில் பயணிகளை படுத்தும் பாடு! பயணிகள் அலறல்.. பஸ் உரிமையாளர்கள் மிரட்டல்.. போக்குவரத்து துறை தூங்குவது ஏன்? “பச்சக்கிளி முத்துச்சாரம்.. பார்க்காத பூமி ஏதம்!” ஆனால், திருச்சியில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மீறி, தனியார்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *