ஸ்ரீரங்கத்தில் தொடரும் குட்கா வேட்டை – ஸ்ரீரங்கம் காவல்துறையினரின் அதிரடி-பொதுமக்கள் பாராட்டு

திருச்சி மாநகரம் ஸ்ரீரங்கம் ஆய்வாளர் திருவானந்தம் அவர்களின் உத்தரவின் பேரில்
உதவி ஆய்வாளர் சுந்தரம் ,தலைமை காவலர் சங்கர்,காவலர்கள் ஜார்ஜ் மற்றும் சந்தோஷ் ஆகியோரை கொண்ட தனிப்படை குட்கா விற்பனை செய்யும் நபர்களை பிடிக்க அமைக்கப்பட்டது

தனிப்படை குழு பல்வேறு இடங்களில் வாகன சோதனையும் ,சந்தேகத்திற்குரிய நபர்களை விசாரித்தும் வந்தனர்.
இந்நிலையில் ஸ்ரீரங்கம் தேவி தியேட்டர் பாலத்திற்கு கீழ் நேரு நகர் அருகில் மர்மநபர்கள் குட்கா போதை பொருட்கள் விற்பனை செய்து வருவதாக தகவல் கிடைத்தது

இந்சூழ்நிலையில் சம்பவ இடத்தை காவலர்கள் சுற்றி வளைத்து நோட்டமிட்டு வந்த நிலையில் ஆட்டோவில் வந்த இரண்டு நபர்களை சோதனை செய்ததில் ஆட்டோவில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது
மேலும் விசாரிக்க

அவர்கள் ராஜபாளையத்தை சேர்ந்த சரவணண் என்பவரும் ,திருச்சி ராஜா காலனியை சேர்ந்த சபீர் முகமது என்பதும் தெரியவந்தது

திருவானைக்கோவிலில் வீடு வாடகைக்கு எடுத்து குடோன் அமைத்து குட்கா பதுக்கியதும் தெரியவந்தது.

அவரிடம் தீவீர விசாரணை மேற்கண்ட பொழுது 3 நபர்கள் இவ்விஷயத்தில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது

இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சரவணண்,சபீர் முகமது என இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.அவர்களிடமிருந்து 1.5 இலட்சம் மதிப்புள்ள 150 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யபட்டது

மேலும் ஒருவரை வலை வீசீ தேடி வருகின்றனர்

மூன்று நாட்களுக்கு முன்புதான் 38 கிலோ குட்கா சிக்கியது குறிப்பிடதக்கது

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    வெற்றி! வெற்றி! திருப்பராய்த்துறை மக்கள் தொடர்பு முகாம் வெற்றி!அதிரடி அமைச்சர் ரமேஷ் – அள்ளிக் கொடுத்த நலத்திட்டம்!வாரிக் கொடுத்த வள்ளல்கள் – வழிகாட்டும் அதிகாரிகள் – திருப்பராய்த்துறையில் நலத்திட்ட அள்ளல்!பட்டா முதல் ஆண்ட்ராய்டு மொபைல் வரை 164 பேருக்கு ரூ.73.56 லட்சம் உதவிகள்

    திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் திருவிழா போல் களைகட்டியது. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் நடைபெற்ற இந்த முகாமில் 164 பயனாளிகளுக்கு ரூ.73 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட…

    84 ஆண்டுகால மர்மக் கோட்டை நொறுங்கியது! தபோவனத்தில் புகுந்த BDO அண்ணாதுரை… அநீதிக்கு முடிவு கட்டிய கிருஷ்ண அவதாரம்! வரி ஏய்ப்பு சாம்ராஜ்யத்திற்குப் பூட்டு… தமிழகத்தை அலறவிட்ட BDO-வின் தர்ம யுத்தம்!

    மகாபாரதத்தில் அஸ்தினாபுரத்து சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு, “ஊசி முனை நிலத்தைக் கூட பாண்டவர்களுக்குத் தர மாட்டேன்!” என்று துரியோதனன் பிடிவாதம் பிடித்தானே… அதே போன்ற ஒரு சாம்ராஜ்ய ஆணவமும், 84 ஆண்டு கால அநீதியும் திருச்சிராப்பள்ளி மண்ணில் சுக்குநூறாக உடைந்து நொறுங்கியிருக்கிறது!…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *