துரை வைகோ எம்.பி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திப்பு

இன்று (22.07.2026) திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட இரண்டு முக்கிய கோரிக்கைகளோடு மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை புது தில்லியில் உள்ள அலுவலகத்தில் துரை வைகோ எம்.பி சந்தித்தார்.

முதலாவதாக, திருச்சிராப்பள்ளியில் உலர் துறைமுகம் (Dry Port / Inland Container Depot) அமைப்பது தொடர்பாக, தமிழக அரசுக்கு மத்திய நிதி அமைச்சகம் அதிகாரப்பூர்வ கடிதம் அனுப்புவதாக மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள் முன்னதாக வழங்கியிருந்த உறுதிமொழியை நினைவூட்டி, அதனை விரைந்து செயல்படுத்தி, நிலம் ஒதுக்கீடு மற்றும் Special Purpose Vehicle (SPV) அமைப்பதற்கான நடவடிக்கைகளைத் தொடங்க வழிவகை செய்யுமாறு வலியுறுத்தினார். இந்தத் திட்டம் மத்திய தமிழ்நாட்டின் தொழில், ஏற்றுமதி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்பதையும் எடுத்துரைத்தார் துரை வைகோ.

இதுதொடர்பாக கடந்த 04.06.2026 அன்று தமிழக முதலமைச்சர் மாண்புமிகு திரு ஜோசப் விஜய் அவர்களை சந்தித்தபோதும், திருச்சிராப்பள்ளியில் உலர் துறைமுகம் அமைப்பதற்கான கோரிக்கை மனுவை வழங்கியிருந்தார் துரை வைகோ எம்.பி. அப்போது, இத்திட்டத்தில் மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் அவர்கள் மிகுந்த அக்கறையும் ஆர்வமும் காட்டி வருவதையும் எடுத்துக் கூறி, மத்திய அரசின் தரப்பில் சாதகமான அணுகுமுறை இருப்பதாகவும் அவரிடம் தெரிவித்திருந்தார். இத்திட்டத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும் தனது அக்கறையையும் முழு ஆதரவையும் தெரிவித்தார். இந்தத் தகவலையும் இன்று மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் அவர்களிடம் எடுத்துரைத்து, மாநில அரசின் ஒத்துழைப்புடன் இத்திட்டத்தை விரைந்து முன்னெடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தினார் துரை வைகோ எம்.பி.

இரண்டாவதாக, ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலுக்கு யுனெஸ்கோ உலக பாரம்பரியச் சின்ன (UNESCO World Heritage Site) அங்கீகாரம் பெறுவதற்கான பரிந்துரை நடைமுறையை விரைவுபடுத்துமாறு கோரிக்கை வைத்தார். இதுதொடர்பாக ஏற்கனவே அளித்திருந்த மனுவையும், மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள் முன்னதாக வழங்கியிருந்த உறுதிமொழியையும் நினைவூட்டி, மகாபோதி கோயிலுக்குப் பின்பற்றப்பட்ட நடைமுறையை முன்மாதிரியாகக் கொண்டு, 2026-ஆம் ஆண்டிற்கான பரிந்துரைச் சுற்றிலேயே ஸ்ரீரங்கம் திருக்கோயிலின் பெயரை எடுத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார் துரை வைகோ.

இரு கோரிக்கைகளையும் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் கவனத்துடன் கேட்டறிந்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக மீண்டும் உறுதியளித்தார்.

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியின் வளர்ச்சிக்கும், தமிழ்நாட்டின் பாரம்பரியப் பெருமைக்கும் தொடர்ந்து குரல் கொடுத்து செயல்படுவேன் என செய்தியாளர்களிடையே தெரிவித்தார் துரை வைகோ எம்.பி.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    வெற்றி! வெற்றி! திருப்பராய்த்துறை மக்கள் தொடர்பு முகாம் வெற்றி!அதிரடி அமைச்சர் ரமேஷ் – அள்ளிக் கொடுத்த நலத்திட்டம்!வாரிக் கொடுத்த வள்ளல்கள் – வழிகாட்டும் அதிகாரிகள் – திருப்பராய்த்துறையில் நலத்திட்ட அள்ளல்!பட்டா முதல் ஆண்ட்ராய்டு மொபைல் வரை 164 பேருக்கு ரூ.73.56 லட்சம் உதவிகள்

    திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் திருவிழா போல் களைகட்டியது. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் நடைபெற்ற இந்த முகாமில் 164 பயனாளிகளுக்கு ரூ.73 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட…

    84 ஆண்டுகால மர்மக் கோட்டை நொறுங்கியது! தபோவனத்தில் புகுந்த BDO அண்ணாதுரை… அநீதிக்கு முடிவு கட்டிய கிருஷ்ண அவதாரம்! வரி ஏய்ப்பு சாம்ராஜ்யத்திற்குப் பூட்டு… தமிழகத்தை அலறவிட்ட BDO-வின் தர்ம யுத்தம்!

    மகாபாரதத்தில் அஸ்தினாபுரத்து சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு, “ஊசி முனை நிலத்தைக் கூட பாண்டவர்களுக்குத் தர மாட்டேன்!” என்று துரியோதனன் பிடிவாதம் பிடித்தானே… அதே போன்ற ஒரு சாம்ராஜ்ய ஆணவமும், 84 ஆண்டு கால அநீதியும் திருச்சிராப்பள்ளி மண்ணில் சுக்குநூறாக உடைந்து நொறுங்கியிருக்கிறது!…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *