

திருச்சி தென்கை இரயில்வே மண்டல பல்துறை பயிற்சி நிறுவனத்தில் நவம்பர் 14 சர்வதேச குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி 14.11.2024 நடைபெற்றது. மாவட்ட குழந்தை நலக் குழு உறுப்பினர் முனைவர் பிரபு குழந்தைகள் பாதுகாப்பில் இரயில்வே பணியாளர்களின் பங்கு குறித்தும் குழந்தைகள் நலன் சார்ந்த சட்டங்களான குழந்தை திருமண தடுப்புச் சட்டம் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டம் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் இளஞ்சிறார் நீதி சட்டம் மற்றும் கிராம அளவிலான குழந்தை பாதுகாப்பு குழு செயல்பாடுகள் பணிகள் குறித்து விழிப்புணர்வு வழங்கினார்.
மேலும் சர்வதேச குழந்தைகள் தினத்தை முன்னிட்டு Walk For Children – உறுதிமொழி நான் பாதுகாப்பான குழந்தை பருவத்திற்காக தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து விதமான குழந்தைநேய செயல்பாடுகளிலும் என்னை ஈடுபடுத்திக் கொள்வேன் குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகளான குழந்தை திருமணம் இளம் வயது கர்ப்பம் பாலியல் வன்முறை பள்ளி இடைநிற்றல் போதைப்பொருள் பயன்பாடு குழந்தை தொழிலாளர் முறை சமூக ஊடகங்கள் தாக்கம் பாலின வேறுபாடு மற்றும் வேறு எந்தவிதமான குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகள் என் கவனத்திற்கு வந்தாலும் உடனடியாக குழந்தைகளை பாதுகாக்கும் செயலில் ஈடுபடுவேன் சாதி மத இன வேறுபாடு இன்றி அனைத்து குழந்தைகளையும் சமத்துவமாக நடத்துவேன் பாலின தேர்வு நிலையற்ற குழந்தைகளுக்கான பாதுகாப்பு சூழலை அனைத்து நிலையிலும் உறுதி செய்வேன். மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கும் மனவளர்ச்சி குன்றிய ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கும் அவர்களது அணுகல்களை உறுதி செய்து பாதுகாப்பு மற்றும் பராமரிப்பினை ஏற்படுத்தி கொடுப்பேன். குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகள் என் கவனத்திற்கு வரும் பட்சத்தில் உடனடியாக 1098 மற்றும் அருகே உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் கொடுப்பேன் நம் எதிர்காலத்தில் முதலீடு செய்வது என்பது நம் குழந்தைகளுக்காக முதலீடு செய்வதாகும் என்பதை உணர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு நடவடிக்கையில் தமிழ்நாடு அரசுடன் இணைந்து ஒருங்கிணைந்து செயலாற்றுவேன் என்று மனதார உறுதியளிக்கிறேன் குழந்தை நேய சமூகத்தை இணைந்து உருவாக்குவோம் உறுதி செய்வோம் என்று உறுதிமொழி அனைவராலும் எடுத்துக் கொள்ளப்பட்டது நிகழ்ச்சியில் 150 க்கும் மேற்பட்ட இரயில்வே பணியாளர்கள் கலந்துக் கொண்டனர்.
