அகில பாரத ஐயப்ப சேவா சங்கம்திருச்சி மாவட்ட யூனியனின் 2025 26 ஆம் ஆண்டுக்கான பொதுக்குழு கூட்டம்

அகில பாரத ஐயப்ப சேவா சங்கம்
திருச்சி மாவட்ட யூனியனின் 2025 26 ஆம் ஆண்டுக்கான பொதுக்குழு கூட்டமும் தொண்டர்கள் பாராட்டு விழாவும் திருச்சியில் சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள அன்னதான சமாஜத்தில் 02.08.2026 ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் திரு ரமேஷ் தலைமை வகித்தார் மாவட்ட கௌரவத் தலைவர் எம் வி சபரிதாசன், மாவட்ட செயலாளர் திரு ஸ்ரீதர், பொருளாளர் சுரேஷ், துணை தலைவர்கள் முத்து, பாண்டியன், நடராஜன் மற்றும் இணைச் செயலாளர்கள் இளங்கோவன், சிதம்பரம் தர்மலிங்கம், ராதாகிருஷ்ணன், அலுவலக செயலாளர் அம்சராம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக தேசிய தலைவர் சங்கீத்குமார், தேசிய பொதுச் செயலாளர் அட்வகேட் விஜயகுமார், தமிழ் மாநில தலைவர் விஸ்வநாதன் தமிழ் மாநில செயலாளர் டாக்டர் ஐயப்பன், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பல மத்திய, மாநில பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். பொதுச் செயலாளர் அறிக்கையும் பொருளாளர் அறிக்கையையும் கூட்டம் ஏகமனதாக ஏற்றுக் கொண்டது.

பின்னர் நடைபெற்ற தொண்டர் பாராட்டு விழாவில் 55 கிளைகளைச் சார்ந்த 466 தொண்டர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
இந்த ஆண்டில் இருந்து அகில பாரத ஐயப்ப சங்கத்தின் சார்பாக சபரிமலையில்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.


1.சபரிமலையில் பல ஆண்டுகளாக சங்க தொண்டர்கள் மூலமாக செய்து வந்த ஸ்ட்ரெச்சர் சேவை பழைய படி சங்கத்திற்கு வழங்க வேண்டும்.

  1. சங்கம் நடத்தி வந்த அன்னதான சேவைகளை மீண்டும் துவங்க கேரள அரசும், சபரிமலை தேவசம் போர்டும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
  2. சபரிமலையில் பக்தர்கள் நீண்ட நேரம் கியூ வரிசையில் நிற்பதை தவிர்த்து திருப்பதியில் உள்ளது போல் பக்தர்கள் அமர்ந்து சென்று சாமி தரிசனம் செய்வதற்கு சபரிமலை தேவஸ்தான போர்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  1. பல மணி நேரம் கியூ வரிசையில் நிற்கக்கூடிய பக்தர்களுக்கு சரியான முறையில் குடிநீரும் உணவும் வழங்கப்பட வேண்டும்.
  2. விழாக்களங்களில் சபரிமலையில் பணி செய்ய வரக்கூடிய போலீஸ் ஐயப்பன்மார்கள் பக்தர்களிடம் கனிவுடன் மனிதநேயத்துடன் பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும்.
  3. நிலக்கலிலிருந்து பம்பைக்கு அரசு பேருந்தில் வரக்கூடிய பக்தர்களுக்கு சரியான முறையில் க்யூ வரிசை ஏற்படுத்தி பேருந்தில் பயணிக்க உதவி செய்ய வேண்டும்.
  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    வெற்றி! வெற்றி! திருப்பராய்த்துறை மக்கள் தொடர்பு முகாம் வெற்றி!அதிரடி அமைச்சர் ரமேஷ் – அள்ளிக் கொடுத்த நலத்திட்டம்!வாரிக் கொடுத்த வள்ளல்கள் – வழிகாட்டும் அதிகாரிகள் – திருப்பராய்த்துறையில் நலத்திட்ட அள்ளல்!பட்டா முதல் ஆண்ட்ராய்டு மொபைல் வரை 164 பேருக்கு ரூ.73.56 லட்சம் உதவிகள்

    திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் திருவிழா போல் களைகட்டியது. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் நடைபெற்ற இந்த முகாமில் 164 பயனாளிகளுக்கு ரூ.73 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட…

    84 ஆண்டுகால மர்மக் கோட்டை நொறுங்கியது! தபோவனத்தில் புகுந்த BDO அண்ணாதுரை… அநீதிக்கு முடிவு கட்டிய கிருஷ்ண அவதாரம்! வரி ஏய்ப்பு சாம்ராஜ்யத்திற்குப் பூட்டு… தமிழகத்தை அலறவிட்ட BDO-வின் தர்ம யுத்தம்!

    மகாபாரதத்தில் அஸ்தினாபுரத்து சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு, “ஊசி முனை நிலத்தைக் கூட பாண்டவர்களுக்குத் தர மாட்டேன்!” என்று துரியோதனன் பிடிவாதம் பிடித்தானே… அதே போன்ற ஒரு சாம்ராஜ்ய ஆணவமும், 84 ஆண்டு கால அநீதியும் திருச்சிராப்பள்ளி மண்ணில் சுக்குநூறாக உடைந்து நொறுங்கியிருக்கிறது!…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *