கர்நாடக அரசின் நடவடிக்கைகள்- துரை வைகோ எம்.பி அறிக்கை

கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு தடுப்பு அணை கட்ட மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டி சபை ஒத்திவைப்பு தீர்மானத்தை முன்மொழிந்தேன்.

தமிழ்நாடு கர்நாடகா இடையே பல ஆண்டுகளாகவே இருக்கும் முக்கியமான பிரச்சினை காவிரி நீர் பங்கீடு. அதில் இடையூறு விளைவித்து தமிழ் நாட்டிற்கு அநீதி இழைக்க கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு தடுப்பு அணை கட்ட பெருமுயற்சி மேற்கொண்டுவருகிறது.

இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்த போதிலும், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு எதிராக கர்நாடக மாநில அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதை எடுத்துரைத்து,

அத்துடன், தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஜூன் 19ஆம் தேதி மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தனி தீர்மானம் ஒன்றை முன்மொழிந்து, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி,

1956 நதிநீர் தாவா சட்டப்படி காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு வழங்கப்பட்ட இறுதி தீர்ப்பு, நடுவர் மன்றம்
அளித்த இறுதித் தீர்ப்பு ஆகியவற்றையும் குறிப்பிடப்பட்டு,

கர்நாடக மாநிலம் தம் விருப்பப்படி புதிய அணைகள் கட்டிக் கொள்ள காவிரி நடுவர் மன்றம் அனுமதிக்க வில்லை என்பதையும் குறிப்பிட்டு,

உச்ச நீதிமன்றம் நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பையே உறுதி செய்திருப்பதை எடுத்துக்காட்டி,

மேகதாது அணை கட்டவே கூடாது; அவ்வாறு கட்டப்பட்டால் காவிரியில் தமிழ்நாடு பெற்று வருகிற நீர் குறைவதோடு காவிரிப் படுகை மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும் .

தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமையை பறிக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தை மீறி செயல்படும் கர்நாடக மாநிலத்திற்கு துணைபோகாமல், மேகதாட்டு தடுப்பு அணை அமைப்பதற்கு ஒன்றிய அரசு நீர்வளத்துறை ஆணையம், சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அனுமதியை அளிக்கக் கூடாது என குறிப்பிட்டு சபை ஒத்திவைப்பு தீர்மானத்தை இன்று (21.07.2026) நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தேன்.

அன்புடன்
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி)
மறுமலர்ச்சி திமுக
21.07.2026
புதுடெல்லி

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    84 ஆண்டுகால மர்மக் கோட்டை நொறுங்கியது! தபோவனத்தில் புகுந்த BDO அண்ணாதுரை… அநீதிக்கு முடிவு கட்டிய கிருஷ்ண அவதாரம்! வரி ஏய்ப்பு சாம்ராஜ்யத்திற்குப் பூட்டு… தமிழகத்தை அலறவிட்ட BDO-வின் தர்ம யுத்தம்!

    மகாபாரதத்தில் அஸ்தினாபுரத்து சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு, “ஊசி முனை நிலத்தைக் கூட பாண்டவர்களுக்குத் தர மாட்டேன்!” என்று துரியோதனன் பிடிவாதம் பிடித்தானே… அதே போன்ற ஒரு சாம்ராஜ்ய ஆணவமும், 84 ஆண்டு கால அநீதியும் திருச்சிராப்பள்ளி மண்ணில் சுக்குநூறாக உடைந்து நொறுங்கியிருக்கிறது!…

    பல்வேறு கோரிக்கைகளோடு இரயில்வே பொது மேலாளரை சந்தித்த துரை வைகோ எம்.பி

    இன்று (21.08.2026) மாலை 5.30 மணி அளவில் திருச்சியில் உள்ள ரயில்வே கோட்ட மேலாளர் (DRM – Trichy) அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து, திருச்சி மக்களின் சார்பில் பல்வேறு முக்கிய ரயில்வே கோரிக்கைகள் தொடர்பாக விரிவாக எடுத்துரைத்தார் துரை வைகோ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *