திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை வருவாய் கிராமத்தில் சுடுகாட்டுக்கு என ஒதுக்கப்பட்ட இடம் மற்றும் சாலை சர்வே எண் 175 & 176/2 ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தை மீட்டு பொது மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

தற்போது, திருப்பராய்த்துறை ஊராட்சியில் ஊராட்சிக்கு என தனியாக போதுமான வசதிகளுடன் மெயின் ரோட்டில் ஊராட்சி அலுவலகமோ, கிராம நிர்வாக அலுவலகமோ இல்லை. 18 சென்ட் சுடுகாட்டு இடத்தை மீட்டு அந்த இடத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான அலுவலகங்கள், திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது.







