ஆறு மாதப் போராட்டங்களுக்குப் பின்பு ரஷ்யா – உக்ரைன் போர்க்களத்தில் இருந்து கிஷோர் சரவணன் மீட்கப்பட்டார்
மியான்மரில் சித்ரவதைக்கு உள்ளான தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 இளைஞர்கள் காப்பாற்றப்பட்டனர்.
நெஞ்சுக்கு நிம்மதி
கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணத்தைச் சேர்ந்த கிஷோர் சரவணன் மருத்துவம் படிப்பதற்காக ரஷ்யா நாட்டிற்குச்
சென்றார். இதனிடையே ரஷ்யா – உக்ரைன் போர் உச்சம் அடைந்ததையொட்டி, இந்தியாவில் இருந்து படிப்பதற்குச் சென்ற கிஷோர் சரவணன் ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்டு, ரஷ்யா – உக்ரைன் போரில் ஈடுபடுத்தப்பட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த அவரது பெற்றோர் பலகட்ட முயற்சி மேற்கொண்டும், அவரைக் காப்பாற்றுவதற்கு வழி தெரியவில்லை.
பலமாதங்களுக்குப் பின்பு 26.07.2025 அன்று, திருச்சியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு வந்து, அவரது பெற்றோர் கண்ணீர் மல்க துரை வைகோ MP யிடம் தனது மகனை மீட்டுத்தர உதவிடுமாறு கேட்டனர்.
தன்னால் முடிந்த மட்டும் உங்களது மகனைக் காப்பாற்ற முயற்சிக்கிறேன். உங்கள் கவலையில் பங்கேற்கிறேன் என்று ஆறுதலாக உறுதியளித்தார் துரை வைகோ.
இதனைத் தொடர்ந்து 28.07.2025 அன்று, இந்திய ஒன்றிய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் மாண்புமிகு டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்களை நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து, கிஷோர் சரவணன் அவர்களை பத்திரமாக மீட்டு இந்தியா அழைத்துவர கோரிக்கைக் கடிதம் வழங்கினார்.
28.07.2025 அன்று நடைபெற்ற நாடாளுமன்ற விவாதத்தில் நான் கலந்து கொண்டு பேசும்போதும் இப்பிரச்சனையை எழுப்பினார் துரை வைகோ.
31.07.2025 அன்று வெளியுறவுத் துறை செயலாளர் திரு.விக்ரம் மிஸ்ரி அவர்களை நேரில் சந்தித்து, கிஷோர் சரவணனை ரஷ்யா அரசு உக்ரைன் போர்முனைக்கு தள்ளப்படும் வாய்ப்பு உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினார்.
மேலும், 04.08.2025 அன்று மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களை நாடாளுமன்ற அலுவலகத்தில் நேரில் சந்தித்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த கிஷோர் சரவணன் மற்றும் ஆயிரக்கணக்கான இளைஞர்களை ரஷ்யாவின் பிடியில் இருந்து மீட்பதற்கு, இந்தியா முழுவதும் உள்ள 15 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 68 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டக் கடிதத்தை வழங்கி வேண்டுகோள் விடுத்தார் துரை வைகோ.
06.08.2025 அன்று ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் மாண்புமிகு டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்களை மீண்டும் அவரது அலுவலகத்தில் சந்தித்து, கிஷோர் சரவணனை மீட்டுத்தர வலியுறுத்தினார்.
12.08.2025 அன்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு.ராகுல்காந்தி அவர்களை, அவரது நாடாளுமன்ற அலுவலகத்தில் சந்தித்து, மருத்துவ மாணவர் கிஷோர் சரவணன் அவர்களை மீட்பதற்கு உங்களது தலையீட்டின் அவசியத்தை வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.
12.08.2025 அன்று இந்தியாவுக்கான ரஷ்யா கூட்டமைப்பின் துணைத் தூதர் திரு.ரோமன் பபுசுகின் அவர்களை, அவரது புதுதில்லியில் உள்ள ரஷ்யா தூதரகத்தில் சந்தித்து, இந்திய குடிமக்களில் ஒருவரான கிஷோர் சரவணன் மற்றும் ஆயிரக்கணக்கானவர்கள் ரஷ்யா இராணுவத்தில் சேர நிர்பந்திக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்த தனது கவலையைத் தெரிவித்தார் துரை வைகோ.
21.08.2025 இரண்டாவது முறையாக மீண்டும் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களை, அவரது அலுவலகத்தில் சந்தித்து மீண்டும் கிஷோர் சரவணன் மீட்பது தொடர்பாக வலியுறுத்தினார்.
21.08.2025 அன்றைய நாளிலேயே வெளியுறவு அமைச்சகத்திற்கும் நேரில் சென்று, வெளியுறவுத் துறை செயலாளர் திரு. விக்ரம் மிஸ்ரி அவர்களையும் சந்தித்து, இந்த விவகாரத்தின் அப்போதைய நிலை குறித்து எனது கோரிக்கை கடிதத்துடன் விரிவாகப் பேசினார் துரை வைகோ.
12.12.2025 அன்று மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்களை நாடாளுமன்றத்தில் நேரில் சந்தித்து. ரஷ்யாவில் போர் முனைக்கு நிர்பந்தமாக அழைத்துச் செல்லப்பட்ட இந்திய மருத்துவ மாணவர் கிஷோர் சரவணன், தற்போது பக்முத் பகுதி முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதை எடுத்துரைத்து, வெளியுறவு அமைச்சகத்தின் அவசர தலையீட்டைக் கோரினார்.
அவரும், அவரது அலுவலகமும் மருத்துவக் கல்லூரி மாணவர் கிஷோர் சரவணனின் மீட்புக்காக இரவு, பகலாக தொடர்ந்து செயல்பட்டனர். ஒவ்வொரு முறையும் அந்த இளைஞர் வேதனையுடன் தொடர்பு கொண்டபோது, உடனடியாக மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுத்தனர்.
தொடர்ந்து துரை வைகோ மேற்கொண்ட இந்த முயற்சிகளின் பலனாக ரஷ்யா இராணுவ நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணைக்குப் பின்னர், ரஷ்யா இராணுவத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு, அந்த இளைஞர் போர்க்களத்தில் இருந்து திரும்ப அழைக்கப்பட்டு தற்போது ரஷ்யாவிற்கு திரும்பியுள்ளார். சட்ட நடைமுறைகள் நிறைவடைந்ததும் அவர் விரைவில் இந்தியா திரும்புவார்.
மருத்துவ மாணவர் கிஷோர் சரவணன் உயிருடன் மீட்கப்படுவதற்கு துரை வைகோ எடுத்த முயற்சிகள் தோற்றுவிடக் கூடாது. தன்னுடைய அரசியல் பொதுவாழ்வில் கிடைத்த நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பொறுப்பை பயன்படுத்தி, ஒரு உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற அவரின் உள்ள உறுதிக்கு இந்தச் செய்தி நிம்மதியைத் தருகின்றது. மருத்துவ மாணவர் கிஷோர் சரவணனின் பெற்றோர் இன்று (27.01.2026) துரை வைகோ MP அவர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர். தமது மகனைக் காண்பதற்கு அவரது பெற்றோர்களைப் போல, தானும் ஆர்வமாக உள்ளதாக கூறினார்.
அதேபோல, இன்னொரு மகிழ்வான செய்தியையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
தூத்துக்குடி மாவட்டம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த மதன்ராஜ், சித்திரை செல்வகுமார் மற்றும் நவீன்குமார் ஆகிய மூன்று தமிழ் இளைஞர்களை, 11.10.2025 அன்று கம்போடியாவில் வேலை என்ற பெயரில் ஏமாற்றி அழைத்துச் செல்லப்பட்டு, தாய்லாந்து வழியாக மியான்மருக்கு கடத்தப்பட்டு அங்கு குற்றச் செயல்களில் ஈடுபடுத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து கவலையடைந்த அவர்களின் பெற்றோர் 01.11.2025 அன்று, திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் துரை அவர்களை சந்தித்து தங்களது பிள்ளைகளைக் காப்பாற்றிடுமாறு வேண்டுகோள் விடுத்தனர்.
அன்றைய தினமே இந்த விவகாரம் பொதுமக்களுக்கும், அரசின் கவனத்திற்கும் செல்ல வேண்டும் என்பதற்காக, அவரது அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பு நடத்தி இதுபோன்ற மனிதக் கடத்தல் சம்பவங்களில் இனி யாரும் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதையும், அந்த மூவரையும் உடனடியாக மீட்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து மியான்மரில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அந்த மூன்று தமிழ் இளைஞர்களின் முழு விபரங்களையும் இணைத்து ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் மற்றும் அமைச்சகத்திற்கும் மின்னஞ்சல் மூலம் மனு அளித்து, அவர்களின் உயிருக்கு ஏற்பட்டிருந்த ஆபத்தை சுட்டிக்காட்டி, உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.
பின்னர் 12.12.2025 அன்று மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் மாண்புமிகு டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்களை நாடாளுமன்றத்தில் நேரில் சந்தித்து, நான் ஏற்கனவே 19.11.2025 அன்று அனுப்பிய மின்னஞ்சலை நினைவூட்டி இந்த விவகாரத்தின் அவசர அவசியத்தை உணர்த்தி, மூன்று தமிழ் இளைஞர்களை மீட்டுத்தர வலியுறுத்தி கோரிக்கை மனு வழங்கினார் துரை வைகோ.
இதன் தொடர்ச்சியாக ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சகம் விரைந்து நடவடிக்கை எடுத்து, மியான்மரில் உள்ள நமது இந்தியத் தூதரகத்தின் தொடர் முயற்சியாலும், உள்ளூர் மியான்மர் அதிகாரிகளின் ஒத்துழைப்புடனும் அந்த மூவரையும் பத்திரமாக மீட்டுள்ளனர். இதை 13.12.2025 அன்று ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் அலுவலகத்தில் பணியாற்றும் நேருதவிச் செயலர் திரு.பிபூதி நாத் பாண்டே அவர்கள் அனுப்பிய அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் மூலம், அந்த மூன்று தமிழ் இளைஞர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு விரைவில் இந்தியா அழைத்துவர உள்ள விபரத்தைக் குறிப்பிட்டிருந்தனர்.
உடனடியாக மூன்று இளைஞர்களின் குடும்பத்தினருக்கும் இந்த நல்ல செய்தியைக் கூறி மகிழ்ந்தார்.
27.01.2026 இன்று, அந்த மூன்று தமிழ் இளைஞர்களும், அவர்தம் பெற்றோருடன் திருச்சியில் உள்ள அலுவலகத்தில் துரை வைகோ அவர்களை சந்தித்தனர். செய்தியாளர் சந்திப்பில் மூன்று இளைஞர்களையும் அறிமுகப்படுத்தி வைத்தார் துரை வைகோ.
பல மாதங்களாக அச்சத்திலும், வேதனையிலும் இருந்த அந்த குடும்பத்தினரின் மகிழ்வைக் கண்டு நெகிழ்வதாக கூறினார்.
அவர் மேற்கொண்ட இதுபோன்ற மனிதாபிமான நடவடிக்கைகள் பலவாகும்.
திருச்சி தொகுதியைச் சேர்ந்த புதுக்கோட்டை மாவட்டம், பெருங்களூர் மட்டயான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த உடல் நலம் பாதிக்கப்பட்ட வினோத் என்பவரை பத்திரமாக சொந்த ஊர் வருவதற்கு ஏற்பாடு செய்தார்.
இதேபோல, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த உடல் நலிவுற்ற நல்லுசாமி, பினாங்கு மகாணத்தில் விபத்தில் சிக்கிய தூத்துக்குடி மாவட்டம், குருவிகுளம் ஒன்றியம், இளையரசேனந்தல் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரை மீட்டுக் கொண்டு வந்தார்.
திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து அயல் நாடுகளுக்குச் சென்று உயிரிழந்த கே.கே.நகரைச் சேர்ந்த நிவாஸ் என்பவரது உடலை, தென்னாப்பிரிக்கா நாடு – தான்சானியாவில் இருந்தும், துவாக்குடியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரது உடலை குவைத்தில் இருந்தும், புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகேயுள்ள பெரியகோட்டையைச் சேர்ந்த முருகேசன் நாராயணன் உடலை, கத்தார் நாட்டில் இருந்தும் மீட்டுக் கொண்டு வருவதற்கு ஏற்பாடு செய்தார்.
மேலும், தமிழ்நாடு முழுவதும் பலருக்கும் மனிதநேய உதவிகளைச் செய்து வருகின்றார் நமது மாண்புமிகு துரை வைகோ MP.
விருதுநகர் மாவட்டம், இராசபாளையம் அருகில் உள்ள சிவலிங்கபுரத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் உடலை ஆப்பிரிக்காவின் சாம்பியாவில் இருந்தும், இராசபாளையம் அருகில் உள்ள கலங்கபேரி புதூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்பவரது உடலை கத்தார் நாட்டில் இருந்தும், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், இளையரசனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசு என்பவரது உடலை மலேசியாவில் இருந்து கொண்டு வருவதற்கும் ஏற்பாடு செய்தார்.
இப்படி அயல்நாடுகளில் உயிருக்குப் போராடுகின்றவர்களை பத்திரமாக மீட்டு வருவதற்கும், பிழைப்புக்காக வெளிநாடு செல்கின்ற இடத்தில் உயிரிழந்தவர்களை மீட்பதற்கும் நான் வகிக்கின்ற இந்தப் பொறுப்பு, ஒரு கருவியாக இருப்பதால் எவ்வளவோ வலியும், வேதனையும் மிகுந்த அரசியல் உலகில் போதிய ஆறுதலைப் பெற்று, தன்னை வலிமையாக்கிக் கொண்டு ஓடிக்கொண்டே இருக்கின்றார் இந்த மாமனிதர் மனிதாபிமானத்தின் கடல்.





