திருவெறும்பூர் அருகே சமுத்தி குள பாசன விவசாயிகள் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் நவல்பட்டு விஜிக்கு நன்றிகளை தெரிவித்ததோடு விரைவில் சமுதிக்குள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற கோரிக்கை விடுத்துள்ளனர்

திருச்சி திருவெறும்பூர் அருகே கிருஷ்ணசமுத்திரம் பகுதியில் 214 ஏக்கர் பரப்பளவில் சமுத்தி குளம் உள்ளது இதன் மூலம் 478 ஏக்கர் விவசாய நிலம் பாசனம் பெறுகின்றன. இதில் தனிநபர்கள் வீடுகள் கட்டி ஆக்கிரமித்து வருவதாகவும் மேலும் அங்கு பிளாட் போட்டு விற்பனை செய்வதாகவும் சுமார் 50க்கும் மேற்பட்ட ஏக்கர்கள் ஆக்கிரமிப்பில் இருப்பதாகவும் இது குறித்து திருவெறும்பூர் தாசில்தார் மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சியரிடமும் சமுத்தி குள பாசன விவசாயிகள் போராட்டம் நடத்தி மனு அளித்த நிலையில் இந்தக் குளம் நீர்வளத்துறைக்கு சொந்தமான குளம் என்றும் இதில் ஆக்கிரமிப்பு செய்தால் மூன்று மாத சிறை தண்டனையும் ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் தண்டிக்கப்படுவார்கள் என்று ஆற்று பாதுகாப்பு பிரிவு சார்பில் சம்பந்தபட்ட குளம், விஏஓ அலுவலகம், பஞ்சாயத்து அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நோட்டிஸ் ஒட்டப்பட்டது. இதனால் அப்பகுதியை சேர்ந்த பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து கூத்தைப்பார் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழா நடைபெற்றது அதில் சிறப்பு விருந்தினராக சட்டமன்ற உறுப்பினர் நாவல்பட்டு விஜி கலந்து கொண்டு திறந்து வைத்தார் அப்போது அங்கு பாசன விவசாயிகள் அவரை சந்தித்து நன்றிகளை தெரிவித்தனர். மேலும் சமுத்தி குள பாசன விவசாயிகள் அரசு அதிகாரிகளுக்கும் நன்றிகளை தெரிவிதத்ததோடு விரைவில் சமுத்தி குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற கோரிக்கை விடுத்துள்ளனர்

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    நூற்றுக்கால் மண்டபத்தில் நர்சரி… குழந்தைகளின் உயிருடன் யார் விளையாடினார்கள்? “ஆயிரம் ஆண்டு கோவில்… அனுமதியில்லா பள்ளி… யார் கொடுத்த தைரியம்?”

    திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், திருப்பராய்த்துறை வருவாய் கிராமத்தில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோவிலின் நூற்றுக்கால் மண்டபம், வழிபாட்டு மரபின் சின்னமாக இல்லாமல், பல ஆண்டுகளாக அனுமதியின்றி இயங்கிய மழலையர் பள்ளியின் வகுப்பறையாக மாற்றப்பட்டிருந்தது கல்வித்துறையின் ஆய்வில் வெளிச்சத்துக்கு…

    திருச்சி டவுன் பஸ்களின் திமிர் அடங்குமா?பஞ்சப்பூர் வழித்தடத்தில் பயணிகளை படுத்தும் பாடு!

    திருச்சி டவுன் பஸ்களின் திமிர் அடங்குமா?பஞ்சப்பூர் வழித்தடத்தில் பயணிகளை படுத்தும் பாடு! பயணிகள் அலறல்.. பஸ் உரிமையாளர்கள் மிரட்டல்.. போக்குவரத்து துறை தூங்குவது ஏன்? “பச்சக்கிளி முத்துச்சாரம்.. பார்க்காத பூமி ஏதம்!” ஆனால், திருச்சியில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மீறி, தனியார்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *