திருச்சி இரண்டாம் தலைநகரம் உள்ளடக்கிய ஆறு கோரிக்கைகளை வலியுறுத்தி துரை வைகோ எம்பி கனிமொழி எம்பியிடம் கோரிக்கை மனு

இன்று (16.02.2026) திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளரும், 2026 சட்டமன்றத் தேர்தல் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுத் தலைவருமான மாண்புமிகு கனிமொழி எம்.பி. அவர்களை துரை வைகோ எம்.பி சந்தித்து, வரவிருக்கும் திமுக தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டிய ஆறு முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்.

அதில்,
🔹 திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு தனி TNSTC போக்குவரத்துப் பிரிவு உருவாக்கம்.

🔹 திருச்சியை தமிழ்நாட்டின் இரண்டாம் தலைநகரமாக அறிவித்தல்.

🔹 திருச்சிக்கு மெட்ரோ ரயில் சேவை அமைப்பதில் முன்னுரிமை.

🔹 திருச்சியில் பல்கலைக்கழக நகரம் அமைத்தல்.

🔹 திருச்சி–மணப்பாறை சிப்காட்டை உலகளாவிய மின்னணு மற்றும் உற்பத்தி மையமாக மேம்படுத்தல்.

🔹 தலைநகர் டெல்லியில், டெல்லி பல்கலைக்கழகம் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பயில வரும் சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள தமிழக மாணவ/ மனைவியருக்கு தனி விடுதி அமைத்து தரவும் மற்றும் இலவச மடிக்கணினி வழங்கல்
ஆகிய கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், மாணவர்களின் முன்னேற்றத்திற்கும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும் இவை மிகவும் அவசியமான திட்டங்கள்.

இந்த கோரிக்கைகளை மாண்புமிகு கனிமொழி MP அவர்கள் கவனமாக கேட்டறிந்து, திமுக தேர்தல் அறிக்கையில் சேர்க்க பரிசீலனை செய்ய உறுதியளித்ததற்கு மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொண்டார் துரை வைகோ எம்.பி

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    திருச்சியில் கிரடாய் பேர்புரோ கண்காட்சி; அமைச்சர் ரமேஷ் தொடங்கி வைத்தார் – 48 அரங்குகளில் வீடுகள், மனைகள் காட்சிப்படுத்தல்!

    திருச்சியில் கிரடாய் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள், தனி வீடுகள் மற்றும் வீட்டுமனைகள் தொடர்பான பேர்புரோ – 2026 விற்பனை கண்காட்சி இன்று தொடங்கியது. திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் நடைபெற்று வரும் இந்தக் கண்காட்சி, நாளை மறுநாள் வரை தொடர்ந்து 3…

    வெற்றி! வெற்றி! திருப்பராய்த்துறை மக்கள் தொடர்பு முகாம் வெற்றி!அதிரடி அமைச்சர் ரமேஷ் – அள்ளிக் கொடுத்த நலத்திட்டம்!வாரிக் கொடுத்த வள்ளல்கள் – வழிகாட்டும் அதிகாரிகள் – திருப்பராய்த்துறையில் நலத்திட்ட அள்ளல்!பட்டா முதல் ஆண்ட்ராய்டு மொபைல் வரை 164 பேருக்கு ரூ.73.56 லட்சம் உதவிகள்

    திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் திருவிழா போல் களைகட்டியது. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் நடைபெற்ற இந்த முகாமில் 164 பயனாளிகளுக்கு ரூ.73 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *