முக்கொம்பில் தீயணைப்பு நிலையம்! பல மாமாங்கக் கோரிக்கைக்கு முற்றுப்புள்ளி – அமைச்சர் ரமேஷ் அதிரடி

திருச்சி:

திருச்சி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான முக்கொம்பில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. இதனால், முக்கொம்பு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நீண்டகாலமாக நிலவி வந்த அவசரகால பாதுகாப்புக் குறைபாட்டுக்கு தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஆற்றில் ஆபத்து… உயிருக்கு உத்தரவாதம் இல்லை!
முக்கொம்பு பகுதியில் காவிரி ஆற்றில் ஆண்டுதோறும் ஏராளமானோர் குளிக்கவும், சுற்றுலா செல்லவும் வருகின்றனர். இந்நிலையில், ஆற்றில் எதிர்பாராத விபத்துகள் ஏற்பட்டு சிலர் நீரில் மூழ்கியும், வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டும் உயிரிழக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன.

“ஆபத்து வந்தால் ஓட்டம்… அவசரம் என்றால் தாமதம்” என்ற நிலையே இதுவரை இருந்து வந்ததாக பொதுமக்கள் வேதனை தெரிவித்து வந்தனர்.

பெட்டவாய்த்தலை முதல் குடமுருட்டி வரை… நிலையமே இல்லை!
பெட்டவாய்த்தலை முதல் குடமுருட்டி வரையிலான பகுதிகளில் தனியான தீயணைப்பு நிலையம் இல்லாததால், அவசர நேரங்களில் அருகிலுள்ள குளித்தலை, முசிறி அல்லது திருச்சி பகுதிகளில் இருந்து தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் வர வேண்டிய சூழல் நிலவி வந்தது.

இதனால், விபத்து நடந்த இடத்தை அடைவதில் ஏற்படும் ஒவ்வொரு நிமிட தாமதமும் உயிருக்கு விலையாகும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்தனர்.

82 ஏக்கர் அரசுப் புறம்போக்கு நிலத்தில் நிலையம்!

இந்த நீண்டநாள் கோரிக்கைக்கு தற்போது செயல்வடிவம் கிடைத்துள்ளது.

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், அந்தநல்லூர் வருவாய் கிராமத்தில் சர்வே எண் 186-ல் உள்ள 82 ஏக்கர் அரசாங்கப் புறம்போக்கு நிலத்தில் முக்கொம்பு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் அமைய உள்ளது. இதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட தீயணைப்பு நிலையம் முக்கொம்பில் அமைய இருப்பது அப்பகுதி மக்களிடையே வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

“அமைச்சர் என்றாலும்… மக்களின் சேவகர்!”
ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி மக்களின் நீண்டகால தேவைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படும் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷின் முயற்சியால் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதாக ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

“ஊருக்கே ராஜா ஆனாலும், வீட்டுக்கு புள்ள” என்ற பழமொழியைப் போல, தமிழகத்தின் அறநிலையத்துறை அமைச்சராக இருந்தாலும் தனது தொகுதி மக்களின் அடிப்படை தேவைகளில் நேரடியாக கவனம் செலுத்தி வருகிறார் என்ற பாராட்டும் எழுந்துள்ளது.

கோரிக்கை குரல்… இன்று செயல் குரல்!

பல ஆண்டுகளாக ஒலித்த “முக்கொம்பில் தீயணைப்பு நிலையம் வேண்டும்” என்ற கோரிக்கைக்கு தற்போது செயல் வடிவம் கிடைத்துள்ளது.

கோரிக்கை எழுந்தது… குரல் கொடுத்தனர்… காலம் கடந்தது… இப்போது கட்டமைப்பு உருவாகிறது!

முக்கொம்பில் தீயணைப்பு நிலையம் செயல்பாட்டுக்கு வந்தால், முக்கொம்பு மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமங்களுக்கும் அவசர காலங்களில் விரைவான தீயணைப்பு மற்றும் மீட்புச் சேவை கிடைக்கும் என்பதால், இந்தத் திட்டம் பொதுமக்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    திருச்சியில் கிரடாய் பேர்புரோ கண்காட்சி; அமைச்சர் ரமேஷ் தொடங்கி வைத்தார் – 48 அரங்குகளில் வீடுகள், மனைகள் காட்சிப்படுத்தல்!

    திருச்சியில் கிரடாய் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள், தனி வீடுகள் மற்றும் வீட்டுமனைகள் தொடர்பான பேர்புரோ – 2026 விற்பனை கண்காட்சி இன்று தொடங்கியது. திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் நடைபெற்று வரும் இந்தக் கண்காட்சி, நாளை மறுநாள் வரை தொடர்ந்து 3…

    வெற்றி! வெற்றி! திருப்பராய்த்துறை மக்கள் தொடர்பு முகாம் வெற்றி!அதிரடி அமைச்சர் ரமேஷ் – அள்ளிக் கொடுத்த நலத்திட்டம்!வாரிக் கொடுத்த வள்ளல்கள் – வழிகாட்டும் அதிகாரிகள் – திருப்பராய்த்துறையில் நலத்திட்ட அள்ளல்!பட்டா முதல் ஆண்ட்ராய்டு மொபைல் வரை 164 பேருக்கு ரூ.73.56 லட்சம் உதவிகள்

    திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் திருவிழா போல் களைகட்டியது. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் நடைபெற்ற இந்த முகாமில் 164 பயனாளிகளுக்கு ரூ.73 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *