
தமிழக முதல்வராக திரு ஜோசப் விஜய் பதவி ஏற்றவுடன் லஞ்சம் வாங்கும் ஊழல் அதிகாரிகளுக்கு வயிற்றில் புளியை கரைக்க ஆரம்பித்து விட்டது. இதனால் லஞ்சம் முற்றிலும் மறையத் தொடங்கியுள்ளது.
கடந்த மூன்று வாரத்தில் மட்டும் திருப்பராய்த்துறையில் தற்காலிக உதவி மின் பொறியாளராக பணிபுரியும் கார்த்திகேயன் அவர்கள் ஜீயபுரம், பெருகமணி, திருப்பராய்த்துறை கடியாகுறிச்சி போன்ற ஏரியாக்களில் 06க்குமேற்பட்ட மின்சார இணைப்புகள் லஞ்சம் இல்லாமல் புரோக்கர்கள் தலையீடு இல்லாமல் வழங்கி சாதனை படைத்துள்ளார். புரோக்கர்கள் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்க ஆரம்பித்துள்ளார்கள் என்பது ஒரு நல்ல ஆரம்பத்தின் தொடக்கம் போல் உள்ளது.

லஞ்சம் கொடுத்து, கொடுத்து கொடுக்க பணம் இல்லாமல், பல மாதமாக, வருடக்கணக்காக மின்சார இணைப்பிற்காக கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த, தவித்துக் கொண்டிருந்த மக்கள் சமூக ஆர்வலர் ஒருவர் மூலம் உரிய ஆவணங்களுடன் EB AE கார்த்திகேயனை அணுகினார்கள், அவர் உடனடியாக சட்டப்படி கிடைக்க வேண்டிய மின்சார இணைப்பு கிடைக்க வழி செய்தார். மின்சாரம் கொடுக்க சென்ற மின்சார வாரிய ஊழியர்கள் கஸ்டமர் வாங்கி கொடுத்த டீயை கூட குடிக்கவில்லை என்பதுதான் ஹைலைட்.

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், திருப்பராய்த்துறை மின்சார வாரிய அலுவலகம், இங்கு மின்சாரத்தை வழங்குவதை விட, மக்களின் வயிற்றில் லஞ்சத் தீயைத்தான் பற்றவைத்துக் கொண்டிருக்கிறது! இங்கே கரண்ட் எரியுதோ இல்லையோ, புரோக்கர்களின் கொள்ளைக் கொட்டம் ஜோராக எரிகிறது. மின்சார வாரியத்தில், திருப்பராய்த்துறை மின்சார வாரிய அலுவலகத்தில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது . மின்சார வாரியத்தில் ஏரியா வாரியாக உள்ள புரோக்கர்கள் மக்களிடம் கண்ணா பின்னா என்று பணம் வாங்குகிறார்கள் என்பதுதான் வேதனையான விஷயம்.

திருப்பராய்த்துறை மின்சார வாரிய அலுவலகமா? இல்லை லஞ்சத்தின் ‘பவர்’ ஹவுஸா?!
‘கரண்ட்’ பில்லை விட எகிறும் லஞ்சப் பில்! – கதறவிடும் கள நிலவரம்!
குற்றச்சாட்டாக பரவும் ‘லஞ்ச ரேட் லிஸ்ட்’ படத்தில் இடம்பெற்றுள்ள பட்டியலின்படி, பல்வேறு பணிகளுக்காக பின்வரும் தொகைகள் கேட்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
லஞ்ச ரேட் லிஸ்ட் – திருப்பராய்த்துறை EB ஆஃபீஸ்
புதிய வீட்டு மின் இணைப்பிற்கு 30,000 ரூபாய்.
ஒரு போஸ்ட் மாற்ற 40,000 ரூபாய்.
சிங்கிள் பேஸ் வீட்டு மின்சார இணைப்புக்கு 30,000 ரூபாய்.
த்ரீ பேஸ் வீட்டு மின்சார இணைப்புக்கு 70,000 ரூபாய்.
கம்பரசம்பேட்டை முத்தரசநல்லூர் போன்ற ஏரியாவில் பில்டர்கள் வீடு கட்டுவதற்கு தற்காலிக இணைப்பிற்கு 80,000 ரூபாய்.

நிரந்தர இணைப்பிற்கு 30,000 ரூபாய்.
நேரடியாக நிரந்தர இணைப்பு வாங்கினாள் ஒன்றரை லட்சம் ரூபாய் நீங்க பணம் கொடுத்தீங்கன்னா,அன்னைக்கு அப்பயே கனெக்சன் கிடைச்சுடும்.
பணம் கொடுக்கலைன்னா ஏதாவது சொல்லி உங்களை சுத்த விட்டுவிடுவார் கில்லாடி யோக்கிய மாதிரி இருக்கிற மிகப்பெரிய மகா திருடன் AE.
விவசாய கனெக்சனுக்கு 2 இலட்சம் ரூபாய்.
போஸ்டர் மாத்தி போடுறதுக்கு EBக்கு கட்டுவது இல்லாமல் ஒரு போஸ்ட்க்கு 40,000ரூபாய் மத்த செலவெல்லாம் நீங்கதான் பண்ணிக்கணும்.
பெயர் மாற்ற உரிய ஆதாரங்கள் இருந்தால் பத்தாயிரம் ரூபாய்.
பெயர் மாற்ற உரிய ஆதாரங்கள் இல்லை என்றால் 50 ஆயிரம் ரூபாய் யார் பேர்ல மாத்திக்கலாம்.
மேலும் பல சேவைகளுக்கும் தனித்தனி தொகைகள் வசூலிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.இந்தப் பட்டியல் அதிகாரப்பூர்வமானதா? அல்லது யாரோ உருவாக்கியதா? என்பதையும் சம்பந்தப்பட்ட துறை விளக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்துகின்றனர்.

கார்த்திகேயனின் கவலையும், ஜெய்கணேஷின் கணக்கும்!
தற்போது தற்காலிக உதவி மின் பொறியாளராக வந்துள்ள கார்த்திகேயன் லஞ்சத்தை ஒழிக்கத் துடிக்கிறார், புரோக்கர்களுக்கு முட்டுக்கட்டை போட முயல்கிறார் என்பது ஆறுதலான விஷயம். ஆனால், “இவர் தற்காலிகம்தானே?” என்ற நியாயமான கவலை மின் பயனீட்டாளர்களின் நெஞ்சை வாட்டுகிறது.
இதற்கு முன்பு திருப்பராய்த்துறை உதவி மின் பொறியாளராகஇருந்த ஜெய்கணேஷ் , மேலதிகாரிகளை, மேற்பார்வை பொறியாளர் செந்தாமரை , செயற்பொறியாளர் கணேசன் அவர்களை ‘நன்றாகக் கவனித்துவிட்டு’, பொதுமக்களைக் கசக்கிப் பிழிவதில் கில்லாடியாக விளங்கினார். லஞ்சம் அங்கு தங்குதடையின்றி சரளமாக ஓடியது. இப்போது அவர் இடமாற்றம் பெற்றுவிட்டாலும், அந்த ஊழலின் வேர்கள் இன்னும் ஆழமாகவே பதிந்துள்ளன!
சிலேடையும் சீண்டலும்: கரன்சியும் கரண்ட்டும்!
“இங்கு மின்சாரம் கிடைக்க வேண்டுமென்றால் கை நடுக்கம் இருக்கக் கூடாது, கைநீட்டுபவர்களுக்குக் கொடுக்கப் பணமும் குறையக்கூடாது! ஏனென்றால், இந்த அலுவலகத்தில் யாருக்கும் ‘கரண்ட்’ (Current) அடிப்பது கிடையாது; மாறாக ‘கரன்சி’ (Currency) தாங்க அடிக்குது!”
ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்ற அரசாணை அமலில் பல காலம் ஆனாலும், திருப்பராய்த்துறையில் அந்தச் சட்டம் குப்பைத் தொட்டியில் கிடக்கிறது. ஏரியா வாரியாக வலம்வரும் புரோக்கர்களின் பைகளில் புகுந்துதான் மனுக்கள் வெளியே வருகின்றன. புரோக்கர்களின் பரிசோதனை: பேப்பரில் விண்ணப்பம் எழுதி புரோக்கர்களிடம் கொடுத்து, அவர்கள் ‘ஓகே’ செய்த பின்னர்தான் ஆன்லைனில் ஏற்றப்படுகிறது.
புலிப்பால் விநோதம்: நேரடியாக மனுக்களைக் கொண்டு சென்றால், மனுக்கள் மூலையில் வீசப்படுகின்றன; இல்லையென்றால் “புலிப்பால் கொண்டு வா!” என்று ஏளனம் செய்கிறார்கள். நாங்கள் என்ன ஐயப்பன் சாமி ? அல்லது இவர்களின் பசியை அடக்க காவடி எடுக்க வேண்டுமா?
ஹோல்ட் ராஜ்யம்: உரிய ஆவணங்களுடன் மனு கொடுத்தாலும், லஞ்சம் தட்டாவிட்டால் உடனே ‘கோல்டில்’ போட்டு மக்களை அலைய விடுகிறார்கள். பல மனுக்கள் வருடக்கணக்காக கோல்டில் இருந்துள்ளன ஏனென்றால் இவர்களை கேட்பதற்கு யாரும் இல்லை. பல மாதங்களாகியும் பலருக்கு வீட்டு மின் இணைப்பு எரிகிறதா அல்லது இருண்டு கடக்கிறதா என்பதே கேள்விக்குறி!
பெயரைக் காணோம்: மக்களுக்குச் சேவையாற்ற வேண்டிய இந்த அலுவலகத்திற்கு வெளியே ஒரு தகவல் பலகையோ, முறையான அறிவிப்போ கிடையாது. போர்டு இல்லாத போக்கிரித்தனமான இடமாகவே இது இயங்குகிறது.
லஞ்ச ஒழிப்புத் துறையின் எச்சரிக்கை மணி!
அரசு அலுவலகங்களில் லஞ்சப் பேய்கள் தாண்டவமாடினால், அடிபணியாமல் உடனடியாகத் தட்டித் கேளுங்கள்! லஞ்ச ஒழிப்புத்துறை உங்கள் குரலுக்குக் காது கொடுக்கக் காத்திருக்கிறது:
வாட்ஸ்அப் எண்: 94981 80936 ஆதாரங்களுடன் உங்கள் புகாரைத் அனுப்பலாம்!
மின்னஞ்சல் முகவரி: dvac@nic.in
நேரடி தொடர்பு: சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை அலுவலகத்தையோ அல்லது திருச்சி மாவட்டத்திலுள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தையோ நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம்.





