திருச்சி மொராய்ஸ் சிட்டியில் பிரம்மாண்டமாகத் தொடங்கிய “மொரைஸ் கார்னிவல்” – பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்பு!

திருச்சி மொரைஸ் சிட்டியில் ஆகஸ்ட் 14, 15 மற்றும் 16 ஆகிய மூன்று நாட்களுக்கு “மொரைஸ் கார்னிவல்” திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
விழாவின் முதல் நாளான நேற்று (ஆகஸ்ட் 14), மொரைஸ் சிட்டி நிர்வாக இயக்குநர் லெரோன் மொரைஸ் நிகழ்வைத் தொடங்கி வைத்தார். இத்திருவிழாவில் சிறப்பு விருந்தினர்களாகப் புகழ்பெற்ற திரைப்பட நடிகர் ரியோ ராஜ் மற்றும் நடிகை பிரார்த்தனா ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.

இரண்டாம் நாளான இன்று (ஆக.15) பிரபல பின்னணிப் பாடகர் ஷ்யாம் விஷால் மற்றும் சரத் மேத்யூ ஆகியோரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மூன்றாம் நாளான நாளை (ஆக.16) விஜய் டிவி புகழ்பெற்ற நகைச்சுவைக் கலைஞர் மதுரை முத்து கலந்து கொள்ள உள்ளார்.

இந்த மூன்று நாள் திருவிழாவில் பார்வையாளர்களைக் கவரும் வகையில் மேஜிக் ஷோ, மிமிக்ரி, இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள். கரகாட்டம், சிலம்பாட்டம் மற்றும் பொய்க்கால் குதிரை ஆட்டம் உள்ளிட்ட நாட்டுப்புறக் கலைகள் என பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

50-க்கும் மேற்பட்ட உணவு வகைகள், வணிகம் மற்றும் ஃபேஷன் (Fashion) சார்ந்த அரங்குகள். பார்வையாளர்களின் பார்வைக்காகப் பிரத்யேக ஸ்போர்ட்ஸ் பைக்குகள் மற்றும் கார்கள் இடம்பெற்றுள்ளன.
சிறுவர்கள் மகிழ்ச்சியாக விளையாட மூன்று நாட்களும் பிரத்யேக விளையாட்டுத் திடல் அமைக்கப்பட்டுள்ளது. இவ்விழாவிற்கான அனுமதி முற்றிலும் இலவசம் ஆகும். குடும்பத்துடன் வந்து கலந்துகொண்டு மகிழுமாறு விழாக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    திருச்சியில் கிரடாய் பேர்புரோ கண்காட்சி; அமைச்சர் ரமேஷ் தொடங்கி வைத்தார் – 48 அரங்குகளில் வீடுகள், மனைகள் காட்சிப்படுத்தல்!

    திருச்சியில் கிரடாய் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள், தனி வீடுகள் மற்றும் வீட்டுமனைகள் தொடர்பான பேர்புரோ – 2026 விற்பனை கண்காட்சி இன்று தொடங்கியது. திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் நடைபெற்று வரும் இந்தக் கண்காட்சி, நாளை மறுநாள் வரை தொடர்ந்து 3…

    வெற்றி! வெற்றி! திருப்பராய்த்துறை மக்கள் தொடர்பு முகாம் வெற்றி!அதிரடி அமைச்சர் ரமேஷ் – அள்ளிக் கொடுத்த நலத்திட்டம்!வாரிக் கொடுத்த வள்ளல்கள் – வழிகாட்டும் அதிகாரிகள் – திருப்பராய்த்துறையில் நலத்திட்ட அள்ளல்!பட்டா முதல் ஆண்ட்ராய்டு மொபைல் வரை 164 பேருக்கு ரூ.73.56 லட்சம் உதவிகள்

    திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் திருவிழா போல் களைகட்டியது. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் நடைபெற்ற இந்த முகாமில் 164 பயனாளிகளுக்கு ரூ.73 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *