திரையை மிஞ்சிய நிஜம்! 5 ரூபாய் கொள்ளைக்கு 18,000 ரூபாய் ‘பளார்’அபராதம்!

திரையை மிஞ்சிய நிஜம்! 5 ரூபாய் கொள்ளைக்கு 18,000 ரூபாய் ‘பளார்’அபராதம்!
கரூர் அதிகாரிகளின் அதிரடி சவுக்கடி!
ரீல் ஹீரோ காட்டிய வழி… ரியல் ஹீரோக்கள் செய்த அதிரடி!

அன்று… ‘தமிழன்’ திரைப்படத்தில் வக்கீல் சூர்யாவாக வந்த விஜய், பயணிகளிடம் 25 பைசா கூடுதல் கட்டணம் வாங்கிய நடத்துனருக்கு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து 10,000 ரூபாய் அபராதம் வாங்கி கொடுத்து தியேட்டரையே அதிர வைத்தார்.

இன்று… அதே பாணியில், தமிழக முதல்வர் விஜயின் ஆட்சியில் நிஜத்தில் ஒரு ‘பகீர்’ சம்பவம் அரங்கேறியுள்ளது! சினிமா கதையை மிஞ்சும் வகையில், பயணிகளிடம் வெறும் 5 ரூபாய் கூடுதலாக வாங்கிய தனியார் பேருந்துகளுக்கு, 18,000 ரூபாய் அபராதம் விதித்து நெஞ்சை நிமிர்த்தியுள்ளது தமிழக போக்குவரத்து துறை!.

வளைத்துப்பிடித்த வண்டிகள்… அம்பலமான பகல் கொள்ளை!
திருச்சி கரூர் மார்க்கத்தில் தங்கு தடையின்றி இயங்கி வந்தன *VKA மற்றும் KAS ஆகிய தனியார் பேருந்துகள். மகாதானபுரத்தில் இருந்து திருச்சி புதிய பேருந்து நிலையத்திற்கு (பஞ்சப்பூர்) செல்ல அரசு நிர்ணயித்த கட்டணம் வெறும் ₹40 மட்டுமே! ஆனால், இந்த பேருந்துகளோ தங்களின் ‘அடாவடி ஆட்டத்தை’ காட்டி, பயணிகளிடம் ₹45 வசூலித்து வந்துள்ளன.

கேட்டதற்கு அலட்சியம்… கிடைத்ததோ அதிர்ச்சி வைத்தியம்!
மற்ற பேருந்துகள் நேர்மையாக ₹40 வாங்க, இந்த பேருந்து நடத்துனர்களோ எக்ஸ்ட்ரா ₹5 வாங்கியுள்ளனர். இதைப் பற்றி பயணிகள் தட்டிக்கேட்டபோது, நடத்துனர்கள் மதிக்காமல், உரிய பதிலளிக்காமல் ‘திமிராக’ தட்டிக்கழித்துள்ளனர்.

ஆன்லைனில் தட்டிய புகார்… ஆன்ஃபீல்டில் இறங்கிய அதிகாரி!
பாதிக்கப்பட்ட பயணிகள் சும்மா இருக்கவில்லை! உடனடியாக ‘முதல்வரின் முகவரி’ இணையதளம் வாயிலாக ஆன்லைனில் புகாரைப் பறக்கவிட்டனர்.

புகார் வந்த அடுத்த கணமே, கரூர் வட்டார போக்குவரத்து அலுவலர் களத்தில் குதித்தார்! சத்தம் போடாமல், ரகசியமாக களப்பணி செய்து விசாரணை நடத்தியதில், தனியார் பேருந்துகள் செய்த ‘பகல் கொள்ளை’ அப்பட்டமாக நிரூபணமானது.

விளைவு? “ஐந்து ரூபாய் கொள்ளைக்கு… பதினெட்டாயிரம் ரூபாய் ஃபைன்!” என அதிரடி தீர்ப்பு எழுதி, தனியார் பேருந்து முதலாளிகளின் பாக்கெட்டை பதம் பார்த்துள்ளனர் அதிகாரிகள்!

இன்னும் ஆட்டம் முடியல… தொடரும் வேட்டை!
“இனிமேல் எந்தவொரு தனியார் பேருந்திலாவது ஒரு பைசா கூடுதலாக வசூலித்தால், சவுக்கடி இன்னும் பலமாக இருக்கும்!” என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மேலும், அந்த வழித்தடத்தில் கரூர் வட்டார போக்குவரத்து அலுவலக களப்பணியாளர்கள் தொடர்ந்து ரகசிய ஆய்வு மேற்கொண்டு, மேல் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற தகவல் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகளின் இந்த ‘மின்னல் வேக’ நடவடிக்கையைக் கண்டு, பொதுமக்களும் பயணிகளும் “சபாஷ்… சரியான சவுக்கடி!” என தமிழக போக்குவரத்து துறையை பாராட்டி தள்ளி வருகின்றனர்!

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    திருச்சியில் கிரடாய் பேர்புரோ கண்காட்சி; அமைச்சர் ரமேஷ் தொடங்கி வைத்தார் – 48 அரங்குகளில் வீடுகள், மனைகள் காட்சிப்படுத்தல்!

    திருச்சியில் கிரடாய் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள், தனி வீடுகள் மற்றும் வீட்டுமனைகள் தொடர்பான பேர்புரோ – 2026 விற்பனை கண்காட்சி இன்று தொடங்கியது. திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் நடைபெற்று வரும் இந்தக் கண்காட்சி, நாளை மறுநாள் வரை தொடர்ந்து 3…

    வெற்றி! வெற்றி! திருப்பராய்த்துறை மக்கள் தொடர்பு முகாம் வெற்றி!அதிரடி அமைச்சர் ரமேஷ் – அள்ளிக் கொடுத்த நலத்திட்டம்!வாரிக் கொடுத்த வள்ளல்கள் – வழிகாட்டும் அதிகாரிகள் – திருப்பராய்த்துறையில் நலத்திட்ட அள்ளல்!பட்டா முதல் ஆண்ட்ராய்டு மொபைல் வரை 164 பேருக்கு ரூ.73.56 லட்சம் உதவிகள்

    திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் திருவிழா போல் களைகட்டியது. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் நடைபெற்ற இந்த முகாமில் 164 பயனாளிகளுக்கு ரூ.73 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *