குடிகள் மாநாட்டில் VAOக்குகழிப்பிட வசதி செய்து தர கோரிக்கை. அறநிலையத்துறை அமைச்சரின் தொகுதியில் பெண் கிராம நிர்வாக அதிகாரிக்கு கழிப்பிட வசதி இல்லை.

குடிகள் மாநாட்டில் VAOக்குகழிப்பிட வசதி செய்து தர கோரிக்கை.
அறநிலையத்துறை அமைச்சரின் தொகுதியில் பெண் கிராம நிர்வாக அதிகாரிக்கு கழிப்பிட வசதி இல்லை.

வெளியே சொன்ன வெட்கக்கேடு சொந்த கட்டிடம் கூட கிடையாது.
தற்காலிக கழிப்பிட வசதியுடன் வீடு வாடகைக்கு பிடித்து தர கோரிக்கை.

குடிகள் மாநாடு – ஜமாபந்தி – வருவாய் தீர்வாயம்.ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகம் -23.06.2026. தலைமை- மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் துணை ஆட்சியர் திருமதி.அமுதா .

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், 1435-ஆம் பசலி ஆண்டிற்கான – 2025-2026- வருவாய் தீர்வாயம் – ஜமாபந்தி- அனைத்து வட்டங்களிலும், 16.06.2026 முதல் தொடங்கி 23.06.2026 வரை நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் வட்டத்திற்குட்பட்ட கிராமங்களுக்கு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் துணை ஆட்சியர் திருமதி.அமுதா அவர்கள் தலைமையில் பொதுமக்களிடமிருந்து பட்டா மாறுதல், வீட்டுமனைப் பட்டாக்கள், பிறப்பு-இறப்புச் சான்றிதழ், சாதிச்சான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ், வருமானச் சான்றிதழ், குடும்ப அட்டை, மாதாந்திர உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இயற்கை மரணம், விபத்து நிவாரணத்தொகை, நலிந்தோர் உதவித்தொகை, நிலம், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.

23/06/2026, இறுதி நாளில் தகுதி உடைய பயனாளிகளுக்கு பட்டா மாறுதலுக்கு உத்தரவு வாரிசுச் சான்றிதழ் போன்ற ஆவணங்கள் உடனடியாக வழங்கப்பட்டன. மற்றவைகள் உரிய நடவடிக்கைக்கு துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த குடிகள் மாநாட்டில் பொதுமக்கள் தெரிவித்த சில கோரிக்கைகள், திருப்பராய்த்துறை கிராம நிர்வாக அதிகாரிக்கு கழிப்பிட வசதியுடன் கூடிய அலுவலகம் மற்றும் வீடு கட்டி தருவதற்கும், அந்தநல்லூர் வருவாய் அதிகாரிக்கு கழிப்பிட வசதியுடன் அலுவலகமும் மற்றும் வீடும் கட்டித் தருவதற்கு கோரிக்கை வைக்கப்பட்டது. அதில் தற்பொழுது ஜீயபுரத்தில் உள்ள அந்தநல்லூர் வருவாய் அதிகாரியின் பழைய கட்டிடம் இடித்து புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளதாகவும். திருப்பராய்த்துறை கிராம நிர்வாக அலுவலருக்கு கழிப்பிட வசதியுடன் கூடிய அலுவலகம் விரைவில் ஏற்பாடு செய்து தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

திருச்சிராப்பள்ளி மாவட்டம், 11 வட்டங்களில் 5-வது நாளாக நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) மொத்தம் 525 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள தொட்டியம், மருங்காபுரி, திருச்சிராப்பள்ளி (கிழக்கு), மணப்பாறை, இலால்குடி, துறையூர், திருச்சிராப்பள்ளி (மேற்கு), மண்ணச்சநல்லூர், முசிறி, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர் ஆகிய 11 வட்டங்களுக்குட்பட்ட கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் (16.06.2026) முதல் நடைபெற்று வருகிறது.

அதன்படி, ஐந்தாவது நாளான 23/06/2026, இன்றைய தினம் இலால்குடி வருவாய் கோட்டாட்சியர் திரு.ஸ்ரீதர் அவர்கள் தலைமையில் இலால்குடி வட்டத்திற்குட்பட்ட தச்சங்குறிச்சி, மகிழம்பாடி, நெய்குப்பை வடக்கு, நெய்குப்பை தெற்கு (கீழ்மாரி மங்கலம் உட்பட), நெருஞ்சலக்குடி, வாளாடி, எசனக்கோரை, த.வளவனூர், திருமணமேடு மேற்கு, திருமணமேடு கிழக்கு, பம்பரம்சுத்தி ஆகிய வருவாய் கிராமங்களுக்கு நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் 94 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

முசிறி சார் ஆட்சியர் செல்வி.சுஷ்ரி சுவாங்கி குந்தியா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் துறையூர் வட்டத்திற்குட்பட்ட விசாலாட்சியம்மாள் சமுத்திரம், கொட்டையூர், கலிங்கமுடையான்பட்டி, சேனப்பநல்லூர், வீரமச்சான்பட்டி, பொன்னுசங்கம்பட்டி, கண்ணனூர், ஆதனூர், வடக்குவெளி, சொக்கநாதபுரம், பகளவாடி, நடுவலூர் ஆகிய வருவாய் கிராமங்களுக்கு நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் 265 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

உதவி ஆணையர் கலால் திரு.சிவா அவர்கள் தலைமையில் முசிறி வட்டத்திற்குட்பட்ட திருத்தலையூர், டி.புதுப்பட்டி, கரட்டாம்பட்டி, திண்ணனூர், புலிவலம், மண்பறை, திருத்தியமலை, வேங்கை மண்டலம், மூவானூர், பெரமங்கலம், காட்டுக்குளம் ஆகிய வருவாய் கிராமங்களுக்கு நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் 67 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் திருமதி.அமுதா அவர்கள் தலைமையில் ஸ்ரீரங்கம் வட்டத்திற்குட்பட்ட பழூர், முத்தரசநல்லூர், பனையபுரம், உத்தமர்சீலி, கிளிக்கூடு, கம்பரசம்பேட்டை, மேலூர், வெள்ளிதிருமுத்தம், கொண்டையம்பேட்டை, திருவளர்சோலை, திம்மராயசமுத்திரம் ஆகிய வருவாய் கிராமங்களுக்கு நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் 99 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

இன்றையதினம் நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) பொதுமக்களிடமிருந்து பட்டா மாறுதல், வீட்டுமனைப் பட்டாக்கள், பிறப்பு-இறப்புச் சான்றிதழ், சாதிச்சான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ், வருமானச் சான்றிதழ், குடும்ப அட்டை, மாதாந்திர உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இயற்கை மரணம், விபத்து நிவாரணத்தொகை, நலிந்தோர் உதவித்தொகை, நிலம், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 525 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களுக்கு உடனடி தீர்வு வழங்கிட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்நிகழ்வில், வட்டாட்சியர்கள் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

‘குடிகள் மாநாடு’:
வருவாய் தீர்வாயத்தின் (ஜமாபந்தி) நிறைவு நாளில் மாவட்ட அல்லது கோட்ட ஆட்சியரின் தலைமையில் நடைபெறும் பொதுக்கூட்டமே ‘குடிகள் மாநாடு’ என்று அழைக்கப்படுகிறது. இதில் பொதுமக்கள் தங்கள் கிராமத்தின் சார்பில் கோரிக்கை மனுக்களை அளித்து தீர்வு பெறலாம்.

இந்த மாநாட்டின் முக்கிய செயல்பாடுகள்:மனுக்கள் தீர்வு: ஜமாபந்தி காலத்தில் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் தீர்வுகள் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.நலத்திட்ட உதவிகள்: முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, மற்றும் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் தகுதியான பயனாளிகளுக்கு நேரில் வழங்கப்படும்.

பொதுமக்கள் கருத்து: கிராம மக்கள் தங்கள் குறைகளை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் நேரடியாகத் தெரிவிப்பதற்கான இறுதி வாய்ப்பாக இது அமைகிறது.வருவாய்த் துறை தொடர்பான கூடுதல் விவரங்களை அறியவும், உங்கள் மாவட்டத்தின் அறிவிப்புகளைச் சரிபார்க்கவும் தமிழ்நாடு அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை வலைதளத்தைப் பார்வையிடலாம்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    வெற்றி! வெற்றி! திருப்பராய்த்துறை மக்கள் தொடர்பு முகாம் வெற்றி!அதிரடி அமைச்சர் ரமேஷ் – அள்ளிக் கொடுத்த நலத்திட்டம்!வாரிக் கொடுத்த வள்ளல்கள் – வழிகாட்டும் அதிகாரிகள் – திருப்பராய்த்துறையில் நலத்திட்ட அள்ளல்!பட்டா முதல் ஆண்ட்ராய்டு மொபைல் வரை 164 பேருக்கு ரூ.73.56 லட்சம் உதவிகள்

    திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் திருவிழா போல் களைகட்டியது. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் நடைபெற்ற இந்த முகாமில் 164 பயனாளிகளுக்கு ரூ.73 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட…

    84 ஆண்டுகால மர்மக் கோட்டை நொறுங்கியது! தபோவனத்தில் புகுந்த BDO அண்ணாதுரை… அநீதிக்கு முடிவு கட்டிய கிருஷ்ண அவதாரம்! வரி ஏய்ப்பு சாம்ராஜ்யத்திற்குப் பூட்டு… தமிழகத்தை அலறவிட்ட BDO-வின் தர்ம யுத்தம்!

    மகாபாரதத்தில் அஸ்தினாபுரத்து சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு, “ஊசி முனை நிலத்தைக் கூட பாண்டவர்களுக்குத் தர மாட்டேன்!” என்று துரியோதனன் பிடிவாதம் பிடித்தானே… அதே போன்ற ஒரு சாம்ராஜ்ய ஆணவமும், 84 ஆண்டு கால அநீதியும் திருச்சிராப்பள்ளி மண்ணில் சுக்குநூறாக உடைந்து நொறுங்கியிருக்கிறது!…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *