“மக்கள் ரோட்டில் தவழ… கண்டுகொள்ளாத மக்கள் பிரதிநிதிகளும் அரசும் அதிகாரிகளும் அரசு இயந்திரமும் ஸ்ரீரங்கம் தொகுதியின் எம்எல்ஏ அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் நடவடிக்கை எடுப்பாரா ?மாமாங்க கால பாதையை மூடியது பாதுகாப்புக்கா? மனிதநேயத்தைப் புதைப்பதற்கா?”

திருச்சி–கரூர் தேசிய நெடுஞ்சாலையில், முருங்கப்பேட்டை பகுதியில் நூற்றாண்டுகளாக மக்கள் பயன்படுத்தி வந்த பொதுப்பாதையை ரயில்வே நிர்வாகம் திடீரென மூடியதால், பொதுமக்கள் அவதி. மக்கள் ரோட்டில் தவழ… கண்டுகொள்ளாத மாநில நெடுஞ்சாலை துறை உட்பட மற்ற அதிகாரிகள். ரயில்வேயின் அராஜக மற்றும் மனிதநேயமற்ற செயல்.

மக்கள் ரோட்டில் தவழ… கண்டுகொள்ளாத அதிகாரிகள்! மக்கள் ரோட்டில் தவழ்ந்தால் அது மக்களின் அவமானமல்ல; அதைப் பார்த்தும் மவுனமாக இருக்கும் நிர்வாகத்தின் அவமானம்.

“யாவர்க்கும் ஆம் இறைவற்கு ஒரு பச்சிலை;
யாவர்க்கும் ஆம் பசுவுக்கு ஒரு வாயுறை;
யாவர்க்கும் ஆம் உண்ணும் போது ஒரு கைப்பிடி;
யாவர்க்கும் ஆம் பிறர்க்கு இன்னுரை தானே.”
— திருவாசகம் கூட “பிறர்க்கு இன்னுரை” சொல்லச் சொல்கிறது. ஆனால் இன்றைய அதிகாரிகள், இன்னுரையைக் கூட மறந்து, இன்னலையே மக்களுக்கு வழங்குகிறார்களா? என்ற கேள்வி எழுகிறது.

மக்கள் கேட்டது மாளிகை அல்ல… மரியாதையுடன் நடக்கும் ஒரு பாதைதான்.
மக்கள் கேட்டது சலுகை அல்ல… சட்டப்படி கிடைக்க வேண்டிய உரிமைதான்.

“பாதையைத் திறங்கள்; மக்களின் வாழ்க்கையை முடக்காதீர்கள்.
பாதுகாப்பைக் காப்போம்; மனிதநேயத்தையும் காப்போம்.”

மக்கள் நலன், மக்கள் வழி, மக்கள் உரிமை — இம்மூன்றையும் புறக்கணித்தால், அது நிர்வாகத்தின் தவறு மட்டுமல்ல; நம்பிக்கையின் முறிவு என்றும் பொதுமக்கள் எச்சரிக்கின்றனர். பாதுகாப்பும் வேண்டும்; அதைவிட மக்கள் வாழ்வும் வேண்டும். ரயில் செல்லட்டும்; ஆனால் மக்களின் பாதை அடைக்கப்படக்கூடாது.

“பொன்னார் மேனியனே…” என்ற திருவாசகத் தெய்வ மொழி ஒலிக்கும் இந்த மண்ணிலே, மக்கள் காலால் நடக்க வேண்டிய வழியே இன்று கம்பிக்குள் சிக்கி, கை தாங்கியும், கால் தாங்கியும், தவழ்ந்தும் செல்லும் துயர நிலை உருவாகியுள்ளது.

பாதையை மூடினார்கள்… பரிதாபத்தைத் திறந்துவிட்டார்கள்.
வேலியை அமைத்தார்கள்… வேதனையை வளர்த்தார்கள்.
பாதுகாப்பு என்றார்கள்… பொதுமக்களை தவழ வைத்தார்கள்.

திருச்சி–கரூர் தேசிய நெடுஞ்சாலையில், முருங்கப்பேட்டை பகுதியில் நூற்றாண்டுகளாக மக்கள் பயன்படுத்தி வந்த பொதுப்பாதையை ரயில்வே நிர்வாகம் திடீரென மூடியதால், இன்று முதியவர்கள், பெண்கள், பள்ளி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் என அனைவரும் இரும்புக் கம்பிகளுக்குள் புகுந்து தவழ்ந்து செல்லும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இது பாதுகாப்பா? இது பராமரிப்பா? இது திட்டமிடலா?
அல்லது மனிதநேயமற்ற நிர்வாகத்தின் முகமா?

ரயில்வே பாதுகாப்பு மிகவும் முக்கியமானது என்பதில் மக்களுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் பாதுகாப்பு என்ற பெயரில் பொதுமக்களின் வாழ்வாதாரப் பாதையை மூடிவிட்டு, மாற்றுப் பாதையே இல்லாமல் தவிக்க விடுவது எந்த சட்டத்தில் உள்ளது? எந்த மனிதநேயத்தில் உள்ளது?

குடமுருட்டி முதல் பெட்டவாய்த்தலை வரை லெவல் கிராசிங் மூடப்பட்டு சுரங்கப்பாதை அமைக்கப்பட்ட பல இடங்களில், பொதுமக்கள் நடந்து செல்ல தனிப்பாதை வழங்கப்பட்டுள்ளது. முருங்கப்பேட்டையில் மட்டும் ஏன் முழுமையாகப் பாதை அடைக்கப்பட்டது? இதற்கு யார் பதில் சொல்வார்கள்?

கண்டுகொள்ளாத மாநில நெடுஞ்சாலைத் துறை… கேட்காத பிற துறைகள்…
கருணையற்ற சில அதிகாரிகள்… காரணமில்லா தாமதம்…
கஷ்டப்படும் பொதுமக்கள்… இந்த நிலையை மாற்றுவது யாருடைய கடமை?

ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏவும் அறநிலையத்துறை அமைச்சருமான ரமேஷ், தமிழக முதலமைச்சர், மத்திய ரயில்வே அமைச்சர், மாநில நெடுஞ்சாலைத் துறை, ரயில்வே அதிகாரிகள் மற்றும் பாரதப் பிரதமர் ஆகியோர் உடனடியாக தலையிட்டு இந்த மனிதநேயப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மக்களின் நியாயமான கோரிக்கைகள்
1. நூற்றாண்டு கால பாதையை மீண்டும் திறத்தல்:
பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, திடீரென மூடப்பட்ட முருங்கப்பேட்டை பேருந்து நிறுத்தம் செல்லும் நூற்றாண்டு கால பொதுப்பாதையை நடந்து செல்வதற்காக உடனடியாகத் திறந்துவிட உத்தரவிட வேண்டும்.
2. ரோலிங் தடுப்பு அமைப்பு – Rolling Barrier System ஏற்படுத்துதல்.
ரயில்வே பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், அதே நேரத்தில் வாகனங்கள் கனரக வாகனங்கள் சாலைப் பயனீட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பாகப் பயணம் செய்வதற்கும் ஏதுவாக, மான்சிங் பங்களா முதல் பழூர் வரை ரயில்வே துறை அமைத்துள்ள இரும்பு கம்பிகளுக்கு இடையே ரோலிங் தடுப்பு அமைப்பை ஏற்படுத்தித் தர வேண்டும். இதேபோல், குடமுருட்டி முதல் பெட்டவாய்த்தலை வரை எங்கெல்லாம் ரயில்வே துறை இத்தகைய கம்பிகளை நட்டு பாதுகாப்பு அரண் அமைத்துள்ளதோ, அங்கெல்லாம் இந்த ரோலிங் தடுப்பு அமைப்பை உருவாக்க வேண்டும்.
3. தரமான கான்கிரீட் கட்டமைப்பு மற்றும் பழைய வேலிகளை அகற்றுதல்:
தற்போது அமைக்கப்பட்டு வரும் பாதுகாப்பு வேலிகள் பார்ப்பதற்குப் பளபளப்பாக மின்னுகிறதே தவிர, வலிமையாக இல்லை. மிகவும் லேசான, தரமற்ற உலோகக் கம்பிகளைப் பயன்படுத்தி ஏனோதானோ என்று இந்த வேலி அமைக்கப்படுகிறது. எனவே, நல்ல தரமான பொருட்களைக் கொண்டு, தூண்களுக்கு அடியில் வலுவான கான்கிரீட் போட்டு இந்த பாதுகாப்பு அரணை அமைக்க வேண்டும். மேலும், ஏற்கனவே உடைந்து ஆபத்தான நிலையில் அந்தப் பகுதியில் உள்ள மற்ற பழைய இரண்டு வேலிகளையும் உடனடியாக அகற்ற வேண்டும்.
4. பொதுப்பாதைகளை மீட்டெடுத்தல்:
இப்பகுதியில் பாரம்பரியமாக எங்கெல்லாம் பொதுமக்கள் நடந்து செல்வதற்கான பாதைகள் இருந்தனவோ, தயவுசெய்து அந்தப் பாதைகள் அனைத்தையும் மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்துவிட உரிய அதிகாரிகளுக்கு ஆணையிட வேண்டும்.

மக்கள் ரோட்டில் தவழ்ந்து செல்லும் அவலநிலை மாற்ற மற்றும் மாமாங்க கால பாதையை திறந்து விட கோரிக்கை ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ அறநிலையத்துறை அமைச்சர் முதலமைச்சர் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ரயில்வே அதிகாரிகள் பாரதப் பிரதமர் தேசிய ரயில்வே அமைச்சர் என அனைவருக்கும் பொதுமக்கள் கோரிக்கை அனுப்பியுள்ளனர்.

அதனால் தான், “ரோட்டில் தவழும் மக்களின் அவலநிலை மாற வேண்டும்; மாமாங்கக் காலப் பாதை மீண்டும் திறக்கப்பட வேண்டும்” என்ற கோரிக்கை இன்று முருங்கப்பேட்டை முதல் தலைநகரம் வரை ஒலிக்கிறது. இந்தக் கோரிக்கையை மாண்புமிகு அரசும், சம்பந்தப்பட்ட துறைகளும் உடனடியாகக் கவனத்தில் எடுத்து, மக்கள் நடக்க வேண்டிய பாதையை மக்களுக்கு மீட்டுத் தர வேண்டும் என்பதே அனைவரின் ஒரே வேண்டுகோள்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    அதிகார பலம் கொண்ட தபோவனத்துடன் மோத தயாராகும் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்”குட்டிப்புலி ஜெயிக்குமா?… காட்டின் ராஜாவை வெல்லுமா? காலம்தான் தீர்ப்பு சொல்லும்!”

    அறம் வளர்க்கும் மடமா? மக்களின் வாழ்வை முடக்கும் தடமா? — மோதலில் அமைச்சர் ரமேஷ்!“குட்டிப்புலி கர்ஜிக்கிறது… காட்டின் ராஜாவை வெல்லுமா? காலம்தான் தீர்ப்பு சொல்லும்!” திருப்பராய்த்துறையில் அறநிலையத்துறைக்கு சொந்தமான வரலாற்றுச் சிறப்புமிக்க நூற்றுக்கால் மண்டபம், மர்மமாக ராமகிருஷ்ணன் தபோவனத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்றதாக…

    திரையை மிஞ்சிய நிஜம்! 5 ரூபாய் கொள்ளைக்கு 18,000 ரூபாய் ‘பளார்’அபராதம்!

    திரையை மிஞ்சிய நிஜம்! 5 ரூபாய் கொள்ளைக்கு 18,000 ரூபாய் ‘பளார்’அபராதம்!கரூர் அதிகாரிகளின் அதிரடி சவுக்கடி!ரீல் ஹீரோ காட்டிய வழி… ரியல் ஹீரோக்கள் செய்த அதிரடி! அன்று… ‘தமிழன்’ திரைப்படத்தில் வக்கீல் சூர்யாவாக வந்த விஜய், பயணிகளிடம் 25 பைசா கூடுதல்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *