சிவன் சொத்து குல நாசம் – ஏய்ப்பவர்கள் ஈசனின் நெற்றிக்கண் திறப்பில் சாம்பலாவது உறுதி. – மந்திரியால் என்ன செய்ய இயலும் என ஆணவமாக பேசுபவரின் அகம்பாவத்தை ஈசன் அடக்குவான்

ராஜகோபுர ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடங்கி
திருப்பராய்த்துறை சிவன் திருக்கோயில் மேம்பாட்டிற்கு 16 அம்ச கோரிக்கை
“கோயில் காக்க… கொள்கை வகுக்க… பக்தர் வாழ… பாரம்பரியம் நிலைக்க…”

“தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!” – திருவாசகம்.

ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அவர்கள் தலைமையில், 07.07.2026 அன்று சிறுகமணியில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், திருப்பராய்த்துறை சிவன் திருக்கோயிலின் வளர்ச்சி, நிர்வாக வெளிப்படைத் தன்மை, பணியாளர் நலன், பக்தர்கள் வசதி மற்றும் கோயில் சொத்துகள் பாதுகாப்பை வலியுறுத்தும் 16 அம்ச கோரிக்கை மனு நேரடியாக வழங்கப்பட்டது.

“கோயில் வளம் பெருக… பக்தர் நலம் மலர… பணியாளர் வாழ்வு உயர… பாரம்பரியம் பாதுகாக்க…” என்ற உயரிய நோக்கத்துடன் முன்வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கைகள்:

1.சிப்பந்திகளுக்கு குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 500ரூபாயாவது சம்பளம். தற்பொழுது சம்பளம் 100-200 ரூபாய்.உள்ளூரைச் சார்ந்த 16 பேத்துக்கு கோயிலில் நிரந்தர வேலை.
2.கோயிலில் பணிபுரியும் கோயில் நிர்வாக அதிகாரி,அர்ச்சகர்கள்,சிப்பந்திகளுக்கு திருப்பராய்த்துறையில் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டி உள்ளூரிலேயே தங்குவதற்கு வசதி செய்து தர வேண்டும்.
3.திருப்பராய்த்துறை சிவன் கோயிலில் கழிப்பறை வசதி செய்து தர வேண்டும்
4.நூற்றுக்கால் மண்டபத்திற்கு எதிரே இருந்த மூடப்பட்ட வழியை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்
5.ராஜகோபுரத்தின் இரண்டாவது மாடத்தில் ராமகிருஷ்ணன் தபோவனத்தால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு ஏற்படுத்தப்பட்டுள்ள சுவாமி சித்பவானந்தர் திடீர் வழிபாட்டு இடத்தை நீக்க வேண்டும்.
6.புற்றுநோய் நீக்கும் பராய் மரத்தின் இலைக்கு என தனியாக ரசீது ஏற்படுத்த வேண்டும்
7.பல வருடங்களாக நடக்காமல் இருக்கும் வைகாசி விசாக தேர்த் திருவிழாவை வரும் வருடங்களில் நடத்த வேண்டும்
8.வாடகை கொடுக்காமல் இருக்கும் நபர்களின் பெயர்கள் மற்ற கோவில்களில் உள்ளது பெரிய பேனரில் திருக்கோயில் வளாகத்தில் வைக்க வேண்டும்.
9.மரபு சாராத பரம்பரை அறங்காவலர் அல்லாத ஒருவரை திருக்கோயிலுக்கு அறங்காவலராக நியமிக்க வேண்டும்.
10.அனைவருக்கும் நியாய வாடகை ஒரே மாதிரியாக நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.
11.அம்பேத்கார் நகர் எக்ஸ்டென்ஸ் அண்ட் பிரிவில் உள்ளது போல் காலியாக உள்ள கோயில் இடங்களை வாடகை விடாமல் இருக்கப்படும் அனைத்து இடங்களையும் கையகப்படுத்தி உரிய ஏலம் விட்டு திருக்கோயிலுக்கு வருவாயை பெருக்க வேண்டும்.
12.1927 ஆம் ஆண்டு ரிசெட்டில்மெண்ட் ரிஜிஸ்டரை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து பெற்று திருப்பராய்த்துறை வருவாய் கிராமம் சம்பந்தமான திருக்கோயில் சொத்துகளை கண்டறிந்து கையகப்படுத்த வேண்டும்.
13.போலி ஆவணங்கள் மூலம் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது கோயில் நிலத்தை மீட்க வேண்டும்
14. 20 கோடிக்கு உள்ள மேல் வாடகை பாக்கிய வசூலிக்க வேண்டும்.
15.நூற்றுக்கால் மண்டபம் ஆக்கிரமிப்பை நீக்க வேண்டும்.

  1. சிறப்பாக செயல்படும் திருப்பராய்த்துறை கோயில் நிர்வாக அதிகாரிக்கு உயர் அதிகாரிகளால் கொடுக்கப்படும் மிரட்டல்கள் அழுத்தங்களில் இருந்து பாதுகாப்பு வழங்க வேண்டும்.

“சொத்து காக்க… சமயம் காக்க… சம்பிரதாயம் காக்க… சமூகம் வளர்க்க…” என்ற எண்ணத்தில் முன்வைக்கப்பட்டுள்ள இந்த 16 அம்ச கோரிக்கைகள், திருப்பராய்த்துறை சிவன் திருக்கோயிலின் ஆன்மிகப் பெருமையையும், நிர்வாகத் திறனையும், வருவாய் வளத்தையும் மேலும் உயர்த்தும் என பக்தர்களும் பொதுமக்களும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

“ஆலயம் வளமானால் அறம் வளரும்; அறம் வளர்ந்தால் மக்கள் வளரும்; மக்கள் வளந்தால் நாடு செழிக்கும்.”

“சிவாலயம் செழித்தால் சமூகம் செழிக்கும்; திருக்கோயில் தழைத்தால் திருப்பராய்த்துறை தழைக்கும்.”

இந்த 16 அம்ச கோரிக்கைகள் விரைவில் நடைமுறைக்கு வந்து, திருப்பராய்த்துறை சிவன் திருக்கோயில் ஆன்மிகப் பெருமை, பாரம்பரிய மகிமை மற்றும் நிர்வாகச் சிறப்பில் புதிய வரலாறு படைக்கும் என்ற நம்பிக்கையுடன் பக்தர்கள் எதிர்நோக்குகின்றனர்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    பல்வேறு கோரிக்கைகளோடு இரயில்வே பொது மேலாளரை சந்தித்த துரை வைகோ எம்.பி

    இன்று (21.08.2026) மாலை 5.30 மணி அளவில் திருச்சியில் உள்ள ரயில்வே கோட்ட மேலாளர் (DRM – Trichy) அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து, திருச்சி மக்களின் சார்பில் பல்வேறு முக்கிய ரயில்வே கோரிக்கைகள் தொடர்பாக விரிவாக எடுத்துரைத்தார் துரை வைகோ…

    முன்னாள் பாரதப்பிரதமர் பாரத ரத்னா அமரர் ராஜீவ்காந்தி பிறந்த தினம்

    அமரர் பாரத ரத்னா ராஜீவ்காந்தி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் முரளி அவர்களின் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் சத்தியநாதன், பட்டேல், செந்தமிழ்செல்வன், கோட்ட தலைவர்கள்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *