இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷின் ‘சத்தம் இல்லாத சக்கர வியூகம்’

அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷின் ‘சத்தம் இல்லாத சக்கர வியூகம்’
₹180 கோடி சிவன் சொத்தை மீட்க அதிரடி களப்பணி தொடக்கம்!
அதிர்ச்சியில் அதிகார வர்க்கம், ஆடிப்போன அஸ்திவாரம்.
திருடனுக்கு தேள் இல்லை இல்லை  நட்டுவாக்கிளி கொட்டியுள்ளது.

பல தசாப்தங்களாகத் திட்டமிட்டுத் திருடப்பட்டுக் கொண்டிருந்த திருவரங்கம் வட்டம், திருப்பராய்த்துறை அருள்மிகு தாருகாவனேஸ்வரர் திருக்கோயில் சொத்துக்களை மீட்க, அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அவர்கள் கையில் எடுத்துள்ள ‘சக்கர வியூக யுத்தம்’ அதிகார வர்க்கத்தைப் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

30 ஆண்டுகாலப் பகல் கொள்ளை அம்பலம்! அதிகார வர்க்கத்தின் அஸ்திவாரம் ஆட்டம்!
ஏழைகளை ‘ஆக்கிரமிப்பாளர்கள்’ எனக் கூறி அதிகார துஷ்பிரயோகம் மூலம் வெளியேற்றிய அறநிலையத்துறை அதிகாரிகள், மறுபுறம் செல்வாக்கு மிக்க பணக்காரர்களுடன் கைகோர்த்துக்கொண்டு கோயில் நிலங்களைத் தாரை வார்த்துள்ளனர். இந்தத் துரோகத்தால் இக்கோயில் சந்தித்துள்ள இழப்புகள் மலைக்க வைக்கின்றன

ஆண்டு வருவாய் இழப்பு: ₹1.5 கோடி முதல் ₹2.5 கோடி வரை.
வாடகை பாக்கி: கடந்த 30 ஆண்டுகளில் குவிந்துள்ள நிலுவைத் தொகை சுமார் ₹15 கோடி!
12ஏக்கர் ஆக்கிரமிப்பு & 6ஏக்கர் பட்டா மாற்றம் விஸ்தாரணம்: சுமார் ₹180 கோடி & 18 ஏக்கர் பரப்பளவிலான கோயில் நிலங்கள் தற்போது பட்டா மாற்றம் / ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியுள்ளன.

அதிகாரிகளின் ‘இருட்டடிப்பு’ இனி செல்லாது!
விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி, நரேந்திர வித்யாலயா பள்ளி, ஆசிரியர் குடியிருப்புகள், கனரா வங்கி, அஞ்சலகம் மற்றும் வணிக ரீதியிலான கட்டிடங்கள் எனப் பல பெயர்களில் கோயில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பு/ சுருட்டப்பட்டுள்ளன. இத்தனை காலமும் கண்டும் காணாமல் இருந்த அதிகாரிகளுக்கு, தற்போது சிறப்பு நில சர்வேயர்கள் களமிறங்கியுள்ளது, ‘திருடனுக்குத் தேள் கொட்டிய கதையாக’ மாறியுள்ளது.

அதிரடி களப்பணி தொடக்கம்!
ஜூலை 11, 2026 முதல், திருவரங்கம் வட்டத்தில் அதிரடி மாற்றங்கள் தொடங்கியுள்ளன. கோயில் நிலங்களைச் சட்டப்பிரிவு 78-ன் கீழ் மீட்கவும், முறையான வாடகை வசூலிக்கவும் சிறப்பு நில சர்வேயர்கள் தீவிர கள ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ள இடங்கள் 6 ஏக்கருக்கு மேல். ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இடங்களில் தற்போதைய நிலை. விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி,நரேந்திர வித்யாலயா பள்ளி,சாரதா நகர்,பணியாளர் குடியிருப்புகள்,வணிக ரீதியிலான அஞ்சலகம், அளவீடு செய்யப்பட வேண்டிய நஞ்சை நிலங்கள்.

மக்கள் கேட்கும் கேள்வி: “இது தொடருமா?”
“கோயிலின் சொத்துக்களைத் தன் கையில் பதுக்கி வந்த கயவர்களின் கோட்டை சரிந்து வருகிறது,” எனச் சமூக ஆர்வலர்கள் அமைச்சரின் இந்த நடவடிக்கையை வரவேற்கின்றனர். அதேசமயம், “மீட்கப்படும் நிலங்கள் மீண்டும் ஆக்கிரமிக்கப்படாமல் இருக்குமா? அல்லது இதுவும் வெறும் கண்துடைப்பு நாடகமாக முடிந்துவிடுமா?” என்பதுதான் பொதுமக்களின் தற்போதைய அச்சம் கலந்த எதிர்பார்ப்பு.

அமைச்சரின் இந்தச் சக்கர வியூகம், இறைவனின் சொத்துக்களைப் பாதுகாப்பதில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாக அமையுமா அல்லது அதிகாரிகளின் தந்திரங்களில் மீண்டும் சிக்கிக் கொள்ளுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    திருச்சியில் கிரடாய் பேர்புரோ கண்காட்சி; அமைச்சர் ரமேஷ் தொடங்கி வைத்தார் – 48 அரங்குகளில் வீடுகள், மனைகள் காட்சிப்படுத்தல்!

    திருச்சியில் கிரடாய் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள், தனி வீடுகள் மற்றும் வீட்டுமனைகள் தொடர்பான பேர்புரோ – 2026 விற்பனை கண்காட்சி இன்று தொடங்கியது. திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் நடைபெற்று வரும் இந்தக் கண்காட்சி, நாளை மறுநாள் வரை தொடர்ந்து 3…

    வெற்றி! வெற்றி! திருப்பராய்த்துறை மக்கள் தொடர்பு முகாம் வெற்றி!அதிரடி அமைச்சர் ரமேஷ் – அள்ளிக் கொடுத்த நலத்திட்டம்!வாரிக் கொடுத்த வள்ளல்கள் – வழிகாட்டும் அதிகாரிகள் – திருப்பராய்த்துறையில் நலத்திட்ட அள்ளல்!பட்டா முதல் ஆண்ட்ராய்டு மொபைல் வரை 164 பேருக்கு ரூ.73.56 லட்சம் உதவிகள்

    திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் திருவிழா போல் களைகட்டியது. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் நடைபெற்ற இந்த முகாமில் 164 பயனாளிகளுக்கு ரூ.73 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *