சாமியார்களா குண்டர்களா? ஆசிரியர்களா கூலிப்படையா?நேர்மையான மக்களின் மனம் கவர்ந்த TVK ஆட்சிக்கு அவப்பெயரை உருவாக்க சதியா!

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை கிராமத்தில் உள்ள சிவன் கோயிலின் நூற்றுக்கால் மண்டபத்தின் பூட்டுகள் உடைக்கப்பட்டு கூலிப் படைகளால், குண்டர்களால் திறக்கப்பட்டுள்ளது.

பட்டப்பகலில் காலையில் கல்லான சிவபெருமான் முன்னே, பள்ளி குழந்தைகள் முன்னே, பெற்றோர்கள் முன்னே, பொதுமக்கள் முன்னே, சிவன் கோயிலின் நூற்றுக்கால் மண்டபம் உடைத்து திறக்கப்படுகிறது.சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தின் மீதோ ஆசிரியர்கள் மீதோ எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை . கோயில் நிர்வாகமும் காவல்துறையும் என்ன செய்கிறது .

பள்ளி நடத்துவதற்கு பள்ளி குழந்தைகள் படிப்பதற்கு வவ்வால்கள் தொங்கும், துர்நாற்றம் வீசும், எப்பொழுது வேணாலும் விழுந்து விடக்கூடிய நிலையில் உள்ள 1000 வருடம் பழமையான, நூற்றுக்கால் மண்டபம் பாதுகாப்பானதா?

திருப்பராய்த்துறை விவேகானந்தா நர்சரிப் பள்ளிக்கு எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் பல வருடங்களாக பள்ளி நடந்து வருகிறது, பள்ளிக்கல்வித்துறை என்ன செய்கிறது?.

கோயிலுக்கு பலகோடி ரூபாய் வாடகை பாக்கி, போலி ஆவணங்கள் மூலம் கோயில் நிலம் பெயர் மாற்றம் போன்ற ஊழல்களை மறைப்பதற்காக நடத்தப்படும் நாடகமா!?

சிவபெருமான் கோயிலின் நூற்றுக்கால் மண்டபத்தின் கதவுகள் உடைக்கப்பட்டது, தவறு செய்கிறோமே என்ற அச்சம் இல்லை, வெட்கமில்லை, சட்டத்தின் மீதும், நேர்மையின் மீதும், தர்மத்தின் மீதும் பயம் இல்லை.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்கவில்லை, தர்மம் குப்பையில் போடப்பட்டுள்ளது.

சிவபெருமான் முன்னே அரங்கேறிய இந்த ஆவணச் செயலுக்கு சிவபெருமான் தான் தண்டனை கொடுக்க வேண்டும், இல்லை அவரும் கல்லா? காலம் பதில் சொல்லுமா? அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் அப்படியா? பொறுத்திருந்து பார்ப்போம்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    திருச்சியில் கிரடாய் பேர்புரோ கண்காட்சி; அமைச்சர் ரமேஷ் தொடங்கி வைத்தார் – 48 அரங்குகளில் வீடுகள், மனைகள் காட்சிப்படுத்தல்!

    திருச்சியில் கிரடாய் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள், தனி வீடுகள் மற்றும் வீட்டுமனைகள் தொடர்பான பேர்புரோ – 2026 விற்பனை கண்காட்சி இன்று தொடங்கியது. திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் நடைபெற்று வரும் இந்தக் கண்காட்சி, நாளை மறுநாள் வரை தொடர்ந்து 3…

    வெற்றி! வெற்றி! திருப்பராய்த்துறை மக்கள் தொடர்பு முகாம் வெற்றி!அதிரடி அமைச்சர் ரமேஷ் – அள்ளிக் கொடுத்த நலத்திட்டம்!வாரிக் கொடுத்த வள்ளல்கள் – வழிகாட்டும் அதிகாரிகள் – திருப்பராய்த்துறையில் நலத்திட்ட அள்ளல்!பட்டா முதல் ஆண்ட்ராய்டு மொபைல் வரை 164 பேருக்கு ரூ.73.56 லட்சம் உதவிகள்

    திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் திருவிழா போல் களைகட்டியது. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் நடைபெற்ற இந்த முகாமில் 164 பயனாளிகளுக்கு ரூ.73 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *