திருப்பராய்த்துறை சிவன் கோயில் செயல் அலுவலர் பிரபாகரனைக் கண்டு கொலை நடுங்கும் ராமகிருஷ்ண தபோவன சுவாமிகள். காரணம் என்ன? அதிர்ச்சி ரிப்போர்ட். ராமகிருஷ்ண தபோவன ஃபைல்ஸ் 1/22 , உபயம்:RTI

திருவாசகம்:”நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!”

திருப்பராய்த்துறை திருக்கோயிலில் பல ஆண்டுகளாக திட்டமிட்டு பதுக்கப்பட்டிருந்த, அமைதியாக கிடந்த கோப்புகள், ஒரு அதிகாரியின் வருகையால் உயிர் பெற்றதாகக் கூறப்படுகிறது. செயல் அலுவலர் பிரபாகரன் பொறுப்பேற்ற பிறகு, பல ஆண்டுகளாக தொடப்படாமல் இருந்த கோயில் சொத்துகள், குத்தகைகள், ஆவணங்கள், வருவாய் பதிவுகள் அனைத்தும் மீளாய்வுக்குட்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு காலத்தில் “யாராலும் எதுவும் செய்ய முடியாது” என்ற நம்பிக்கையில் இருந்த பல தரப்பினருக்கு, சட்டப்படி எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் எதிர்பாராத அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

“அரனடி சேர்ந்தார்க்கு அஞ்சல் இல்லை!” முதல் அதிர்ச்சி – 30ஆண்டுகளாக கட்டுப்பாட்டில் இருந்த சுடுகாட்டு தோப்பு பொதுஏலத்தில்!

பிரபாகரன் என்ற பெயர் வைத்தாலே ஒரு ஆளுமை வந்துவிடும் போல, ஈழத்தமிழன் வேலுப்பிள்ளை பிரபாகரன் போல திருப்பராய்த்துறை செயலாளர் பிரபாகரன் இன்று வரை ராமகிருஷ்ணன் தபோவனம் பார்த்திராத செயல் அலுவலராக இருந்து வருகிறார்.

வந்தவுடன் அவர் செய்த காரியம் 30ஆண்டுகளுக்கு மேலாக ராமகிருஷ்ண தபோவனம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த, தன்னுடையது என்று நினைத்திருந்த சுடுகாட்டு மாந்தோப்பை பொது ஏலம் விட்டதுதான்,அதுவும் அவர் செய்தது என்னவென்றால் நியாயமான முறைப்படி ஏலம் நடத்தி கோவிலூரில் வசிக்கும் ஒரு ஏழை விவசாயிக்கு அந்த தோப்பை வழங்கியதுதான்.

இதை சற்றும் எதிர்பாராத ராமகிருஷ்ணன் தபோவனம் அறநிலையத்துறையில் தனக்குத் தெரிந்த எல்லா அதிகாரிகளின் கதவையும் தட்டியது ஆனால் சட்டப்படி நிகழ்வு நடந்ததால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

ராமகிருஷ்ண தபோவனத்திற்கான சற்றும் எதிர்பாராத முதல் அதிர்ச்சி தோல்வி. சென்னையில் உள்ள அறநிலையத்துறை அதிகாரிகள் கல்யாணி , ஜெயராமன் மற்றும் பல ஐஏஎஸ் அதிகாரிகளால் ஒன்றும் செய்ய முடியவில்லை, ஏனென்றால் இங்கு நடப்பது ஜோசப் விஜயின் சர்க்கார்.

நந்தவனத்திற்கு நீதி கிடைக்க தொடங்கியது. 16வருடமாக நந்தவனத்தில் ஏழைகள் எந்த ஒரு அடிப்படை வசதியும் இன்றி வாழ்ந்து வரும் போது, அதே சர்வே நம்பரில் திருட்டுத்தனமாக ஐந்திற்கும் மேற்பட்ட மின்சார கனெக்சன் வைத்திருந்தார்கள் ராமகிருஷ்ண தபோவனத்தினர், விவசாய ரூம், மோட்டார் ரூம், ஆசாரி ரூம் என பல அறைகளும் வைத்திருந்தார்கள்.சட்டப்படி நடவடிக்கை எடுத்து அந்த ரூமை அறநிலையத்துறை வசப்படுத்தினார் .

பிரபாகரனை கண்டு ராமகிருஷ்ண தபோவனம் அஞ்ச சில காரணங்கள்

  1. 30 ஆண்டுகளாக மிகக் குறைந்த குத்தகைக்கு வைத்திருந்த சுடுகாட்டு தோப்பை மீட்டு கோவிலூர் ஏழை விவசாயி கருப்பையாவுக்கு அதிக குத்தகைக்கு ஏலம் விட்டது .
  2. நந்தவனத்தில் சட்டம் என்பது அனைவருக்கும் பொது அரசனாக இருந்தாலும் ஆண்டியாக இருந்தாலும் என நந்தவனத்தில் 16வருடமாக திருட்டுத்தனமாக பயன்படுத்தி வந்திருந்த 05மின்சார இணைப்புகளை நீக்கியதும், அங்கு இருந்த ராமகிருஷ்ண தபோவனத்தின் மூட்டை முடிச்சுகளை தூக்கிக் கொண்டு ஓட செய்தது.

3.1000 கோடி சந்தை மதிப்புள்ள திருக்கோயில் நிலங்களை ராமகிருஷ்ணன் தபோவனம் போலி ஆவணங்கள் மூலம் பெயர் மாற்றம் செய்திருந்ததை உறுதிசெய்து, மீட்பதற்காக உரிய ஆவணங்களுடன் மாவட்ட வருவாய் அலுவலருக்கு கடிதம் எழுதியது.

  1. *கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக ராமகிருஷ்ண தபோவனம் கோயிலுக்கு சொந்தமான பல இடங்களுக்கு *சட்டத்துக்கு புறம்பான முறையில் உள்வாடகைக்கு விட்டும் வாடகை கட்டாமல் இருப்பதை அறிந்து, அதற்கான கோப்புகளை துரிதப்படுத்தி 15 கோடிக்கு மேல் வாடகை பாக்கிய உறுதி செய்தது.*

5.முறையாக வாடகை நிர்ணயம் செய்தால், ராமகிருஷ்ணன் தபோவனம் தற்போது உள்ள ஆவண தயாரிப்புகளின் படி மாதம் 15லட்சம், ஒரு வருடத்திற்கு 1.80கோடி ரூபாய் திருக்கோயிலுக்கு வாடகையாக செலுத்த வேண்டி இருக்கும்.

6.ராமகிருஷ்ண தபோவனம் கோயில் நிலங்களை ஆக்கிரமித்து கோயிலுக்கு வாடகை கட்டாமலே உள்வாடைக்கு விட்டு கனரா வங்கி, அஞ்சலகம், ஆசிரியர்கள் குடியிருப்பு என போலி ஆவணங்கள் மூலம் மாதம் 50ஆயிரத்திற்கும் மேல் சம்பாதிப்பதை உறுதி செய்து அதை மீட்பதற்கான நடவடிக்கையை தொடங்கியது.

7.கோயிலுக்குள் நடக்கும் பள்ளிகளுக்கு குறிப்பாக நரேந்திர வித்யாலயா பள்ளிக்கு அனுமதி இல்லை என்பதை அறிந்து குழந்தைகளின் பாதுகாப்பைக் கருதி அதற்கான அனுமதியை கேட்டது.

  1. பச்சிளம் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் பாதுகாப்பு கருதி, பள்ளிக் கல்வித்துறைக்கு கோயிலுக்குள் பள்ளிகள் அனுமதி இல்லாமல் நடப்பது சம்பந்தமாக கோரிக்கை அனுப்புவதற்கான கோப்புகளை தயார் செய்தது.

9.ராஜ கோபுர ஆக்கிரமிப்பை அகற்று சொன்னது

  1. திருக்கோயில் நிலத்தில், கோயில் திருக்குளத்தில் கழிவறை நீர் கலப்பதை தடுப்பதற்கும் அதன் புனிதத் தன்மையை காப்பாற்றுவதற்கும் நடவடிக்கை எடுத்தது.
  2. ஈசன் முன்னால் அனைவரும் சமம், தபோவன சாமியார்கள் வரும்வரை காத்திருக்காமல் பூஜை, புனஸ்காரங்கள் யாருக்காகவும் காத்திருக்காது என்பதை உறுதிசெய்து நேரப்படி பூஜைகள் நடக்க செய்தது.

அழுத்தங்களும்… மிரட்டல்களும்…?
இந்த நடவடிக்கைகளுக்குப் பிறகு பல்வேறு தரப்பிலிருந்து அழுத்தங்கள், எதிர்ப்புகள், மிரட்டல்கள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
எனினும், சட்ட நடைமுறைகளின்படி கோப்புகள் முன்னெடுக்கப்பட்டு, மேலதிகாரிகளிடம் அனுப்பப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பழைய கோப்புகள்… புதிய பரபரப்பு! நந்தவனத்தில் சட்டமே அரசன்!
நந்தவனத்திற்கு களப்பணிக்கு சென்ற திருப்பராய்த்துறை செயல் அலுவலர் பல உண்மைகளை அறிந்து கொண்டு, மாதக்கணக்கில் இராப்பகலாக அலுவலகத்தில் தங்கி பழைய ஆவணங்களை கோப்புகளை அலசத் துவங்கினார், விளைவு ராமகிருஷ்ணன் கோயில் நிலங்களை பல இடங்களில் தனது பெயரில் பட்டா மாற்றி வைத்திருப்பதும், 50-60 வருடங்களாக திருக்கோயில் நிலங்களை ஆக்கிரமித்து வைத்திருப்பதும், உரிய முறையில் வாடகை நிர்ணயம் செய்யாமல் இடங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது தெரிந்து கொண்டவர் இதற்கான நடவடிக்கை தொடங்கினார், அவரை பல உள்ளூர் கைத்தடிகளையும், கைக்கூலிகளை வைத்து மிரட்டத் துவங்கினர் ராமகிருஷ்ண தபோவன சாமியார்கள். எதற்கும் அஞ்சாத பிரபாகரன் கோப்புகளை துரிதமாக நடத்தி மேல் நடவடிக்கை அனுப்பிவிட்டார்.

தற்பொழுது அவரை பழிவாங்கும் நோக்கில் பல செயல்களை செய்து வருகின்றனர் ராமகிருஷ்ணன் தபோவனத்தினர். ஆனால் பிரபாகரன் சத்தமில்லாமல் தனது பணியை செவ்வனே செய்து முடித்து விட்டார்.

எப்படியாவது திருப்பராய்த்துறை செயல் அலுவலர் பிரபாகரனை மாற்றத் துடிக்கும் சாமியார்களுக்கு தெரியவில்லை அவரை பணியிடம் மாற்றம் செய்தால், மற்றொரு கோயிலுக்கு செயல் அலுவலராக தான் செல்வர் என்று.

ஆனால் ராமகிருஷ்ணன் தபோவனம் ஆக்கிரமிப்பு நிலங்களை விட்டே ஆக வேண்டும், மாதம் 15 லட்சத்துக்கு குறைவில்லாமல் வாடகை கட்டத்தான் வேண்டும், சிவபெருமானுக்கான சொத்து சிவனுக்கு சேரும்படி செய்துவிட்டார் பிரபாகரன்.

பழிவாங்கும் முயற்சிகளா?
தற்போது செயல் அலுவலருக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
ஆனால், அதிகாரப்பூர்வ கடமைகளை அமைதியாக நிறைவேற்றியதாக அவரை ஆதரிப்பவர்கள் கூறுகின்றனர்.

திருவாசக நிறைவு: “தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!”

திருக்கோயில் சொத்துகள், வருவாய், ஆவணங்கள் மற்றும் நிர்வாகம் தொடர்பான அனைத்து விவகாரங்களும் உரிய அரசு அமைப்புகள் மற்றும் நீதிமன்றங்களின் இறுதி முடிவுகளுக்குட்பட்டவை. சம்பந்தப்பட்ட தரப்பினரின் விளக்கங்களும், அதிகாரப்பூர்வ விசாரணைகளும் முழுமையாக வெளிவரும் வரை எந்த குற்றச்சாட்டும் நிரூபிக்கப்பட்டதாக கருதப்பட முடியாது.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    சாமியார்களா குண்டர்களா? ஆசிரியர்களா கூலிப்படையா?நேர்மையான மக்களின் மனம் கவர்ந்த TVK ஆட்சிக்கு அவப்பெயரை உருவாக்க சதியா!

    திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை கிராமத்தில் உள்ள சிவன் கோயிலின் நூற்றுக்கால் மண்டபத்தின் பூட்டுகள் உடைக்கப்பட்டு கூலிப் படைகளால், குண்டர்களால் திறக்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் காலையில் கல்லான சிவபெருமான் முன்னே, பள்ளி குழந்தைகள் முன்னே, பெற்றோர்கள் முன்னே, பொதுமக்கள் முன்னே, சிவன்…

    ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த நூற்றுக்கால் மண்டபத்தை ஆக்கிரமித்த நர்சரி பள்ளி!நெற்குவியலுக்கு நடுவே பிஞ்சுக் குழந்தைகள்: அறநிலையத்துறை அதிகாரியை மிரட்டும் அத்துமீறல்!

    திருப்பராய்த்துறை அறநிலையத்துறைக்கு சொந்தமான , வரலாற்றுச் சிறப்புமிக்க ஆயிரம் ஆண்டுகள் பழமையான நூற்றுக்கால் மண்டபத்தை, எவ்வித அரசு அனுமதியும் இன்றி ‘நரேந்திரா வித்யாலயா’ என்ற நர்சரி பள்ளி ஆக்கிரமித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பள்ளி திருப்பராய்த்துறை, ராமகிருஷ்ண தபோவன…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *