84 ஆண்டுகால மர்மக் கோட்டை நொறுங்கியது! தபோவனத்தில் புகுந்த BDO அண்ணாதுரை… அநீதிக்கு முடிவு கட்டிய கிருஷ்ண அவதாரம்! வரி ஏய்ப்பு சாம்ராஜ்யத்திற்குப் பூட்டு… தமிழகத்தை அலறவிட்ட BDO-வின் தர்ம யுத்தம்!

மகாபாரதத்தில் அஸ்தினாபுரத்து சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு, “ஊசி முனை நிலத்தைக் கூட பாண்டவர்களுக்குத் தர மாட்டேன்!” என்று துரியோதனன் பிடிவாதம் பிடித்தானே… அதே போன்ற ஒரு சாம்ராஜ்ய ஆணவமும், 84 ஆண்டு கால அநீதியும் திருச்சிராப்பள்ளி மண்ணில் சுக்குநூறாக உடைந்து நொறுங்கியிருக்கிறது!

84 ஆண்டுகால இருட்டு ராஜ்ஜியத்திற்கு ஆப்பு! ‘சகுனி’ தந்திரத்தை உடைத்தெறிந்த ‘கிருஷ்ண’ அண்ணாதுரை!

ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை வருவாய் கிராமத்தின் மையப்பகுதியில் அமைந்திருக்கிறது ‘ராமகிருஷ்ண தபோவனம்’ என்னும் பிரம்மாண்டமான தனியார் அறக்கட்டளை. தமிழ்நாடு முழுக்கவும் கிளைகளைப் பரப்பியுள்ள இந்த தபோவனத்திற்குள் திருப்பராய்த்துறையில் 5 பள்ளிகள், குருகுல ஹாஸ்டல், அஞ்சலகம், பிரிண்டிங் பிரஸ், ரைஸ் மில், மாட்டுப் பண்ணை,பண்ணை விவசாயம், தேங்காய் வியாபாரம் மற்றும் ஆசிரிய-ஊழியர் குடியிருப்புகள் என ஒரு குட்டி அரசாங்கமே இயங்கி வருகிறது. ஆனால், சுதந்திர இந்தியாவில் கடந்த 84 ஆண்டுகளாக இந்த சாம்ராஜ்யம் ஊராட்சிக்குச் செலுத்த வேண்டிய ஒரு பைசா சொத்து வரியையும், தண்ணீர் வரியையும் செலுத்தாமல், சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்துக் கொண்டே இருந்தது!

துரியோதனனின் அக்கிரமங்களைக் கண்டு அஸ்தினாபுரத்து பீஷ்மரும் துரோணரும் வாய மூடி அமைதி காத்தது போல, இத்தனை காலமாக எந்த அதிகாரியும் இந்த அறக்கட்டளையின் கதவைத் தட்டவே பயந்து நடுங்கினர். ஆனால், பாண்டவர்களுக்கு உரிமையைப் பெற்றுத் தரத் தர்மத்தின் உருவமாய் பேரமைதியை உடைத்துக் கொண்டு கிருஷ்ணன் களமிறங்கியது போல, இப்போது அந்தநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை அதிரடியாகக் களத்தில் குதித்து அதிகார வர்க்கத்தையே அதிர வைத்துள்ளார்!

தமிழக முதல்வரின் முகவரி இணையதளத்திற்குச் சென்ற புகார்களின் அடிப்படையில், அதிகாரி BDOஅண்ணாதுரை எடுத்த அந்த ‘அக்னி’ நடவடிக்கைதான் இப்போது தமிழகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கிறது.

இரும்புக்கதவுகளால் சூழப்பட்ட தபோவனத்தின் எல்லைக்குள் துணிச்சலாக நுழைந்த அண்ணாதுரை, நிலங்களை நேரில் அளந்து, ஆவணங்களை அலசி ஆராய்ந்து, ஆன்லைனில் டிமாண்ட் ரைஸ் செய்து வசூல் வேட்டையைத் தொடங்கியுள்ளார்.

சகுனியின் சூழ்ச்சி போல இத்தனை காலம் மறைக்கப்பட்டிருந்த வரி ஏய்ப்புப் பூதம் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கர்ணன் கொடை வள்ளலாகப் பெயர் பெற்றிருந்தாலும், தர்மத்தின் முன் அனைவரும் சமமே என்பதை நிருபித்து, ஊரின் பொது வளர்ச்சிக்குச் சேர வேண்டிய வரியை வசூலிக்கும் இந்த வரலாற்றுச் சாதனையை அண்ணாதுரை நிகழ்த்தியுள்ளார்.

சுதந்திர இந்தியாவின் வரலாற்றிலேயே இதுவரை எந்த அதிகாரியும் செய்யத் துணியாத இந்த அதிரடி வேட்டை, அந்தநல்லூர் பஞ்சாயத்திற்குப் பெரும் பலத்தையும் நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு புதிய விடியலையும் கொடுத்துள்ளது.

இந்தியாவின் பிரதம மந்திரி திரு மோடி அவர்கள் ராமேஸ்வரம் வருகையின்போது தங்கும் அளவுக்கு செல்வாக்கு கொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்த அறக்கட்டளையை எதிர்கொள்வது என்பது ஒன்றும் அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல. கடந்த வாரத்தில், 22/08/2026 அன்று கூட இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி திரு ராம்நாத் கோவிந்த் அவர்கள் ராமகிருஷ்ண தபோவனத்திற்கு வருகை புரிவதாக இருந்தது ஏனோ தெரியவில்லை கடைசி நேரத்தில் அந்த நிகழ்வு நடக்க முடியாமல் போனது என்பது குறிப்பிடத்தக்கது.

“அநீதியின் சாம்ராஜ்யங்கள் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், தர்மத்தின் சக்கரமும் சட்டத்தின் கையும் அதைத் தண்டித்தே தீரும்!” என்பதை உரக்கச் சொல்லியிருக்கிறார் இந்த ரியல் சிங்கம் அண்ணாதுரை!

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    திருச்சியில் கிரடாய் பேர்புரோ கண்காட்சி; அமைச்சர் ரமேஷ் தொடங்கி வைத்தார் – 48 அரங்குகளில் வீடுகள், மனைகள் காட்சிப்படுத்தல்!

    திருச்சியில் கிரடாய் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள், தனி வீடுகள் மற்றும் வீட்டுமனைகள் தொடர்பான பேர்புரோ – 2026 விற்பனை கண்காட்சி இன்று தொடங்கியது. திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் நடைபெற்று வரும் இந்தக் கண்காட்சி, நாளை மறுநாள் வரை தொடர்ந்து 3…

    வெற்றி! வெற்றி! திருப்பராய்த்துறை மக்கள் தொடர்பு முகாம் வெற்றி!அதிரடி அமைச்சர் ரமேஷ் – அள்ளிக் கொடுத்த நலத்திட்டம்!வாரிக் கொடுத்த வள்ளல்கள் – வழிகாட்டும் அதிகாரிகள் – திருப்பராய்த்துறையில் நலத்திட்ட அள்ளல்!பட்டா முதல் ஆண்ட்ராய்டு மொபைல் வரை 164 பேருக்கு ரூ.73.56 லட்சம் உதவிகள்

    திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் திருவிழா போல் களைகட்டியது. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் நடைபெற்ற இந்த முகாமில் 164 பயனாளிகளுக்கு ரூ.73 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *