
ராணுவ வீரர்களின் தியாகம்… விலையில்லாச் சொத்து! முப்படைத் தளபதி பதக்க வீரர்களுக்கு தமிழக முழுவதும் கட்டணமில்லா பேருந்து பயணம் வழங்கக் கோரிக்கை.
திருச்சி: நாட்டின் எல்லையில் விழித்திருந்து தாய்நாட்டைக் காக்கும் முப்படை வீரர்களின் தியாகத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில், முப்படைத் தளபதிகளின் உயரிய பதக்கங்களைப் பெற்ற ராணுவ வீரர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களுக்கு *தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகளில் தமிழக முழுவதும் கட்டணமில்லா பயண வசதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.ராணுவ வீரர்களின் கோரிக்கைக்கு செவி சாய்ப்பாரா தமிழக முதல்வர்?

உயிரைக் கொடுத்து… நாட்டைக் காக்கும் வீரர்கள்!
“யானை இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன் ” என்பார்கள். அதுபோல, நாட்டுக்காக உயிரையும் உடைமையையும் துச்சமாகக் கருதும் முப்படை வீரர்களின் தியாகத்துக்கு விலை நிர்ணயிக்க முடியுமா?
பணியில் இருக்கும் போதும், ஓய்வு பெற்ற பின்னரும், நாட்டின் பாதுகாப்பு, வளர்ச்சி மற்றும் மக்களின் நல்வாழ்வே தங்களது தலையாய கடமை என்ற எண்ணத்துடன் வாழ்பவர்கள் நமது முப்படை வீரர்கள்.
அவர்களது வீரத்தையும், தியாகத்தையும், துணிச்சலையும் போற்றும் வகையில் வழங்கப்படும் பதக்கங்கள் வெறும் உலோகப் பதக்கங்கள் அல்ல. வீரத்தின் அடையாளம்… தியாகத்தின் சின்னம்… தேசத்தின் பெருமை!

பதக்கம் என்பது சாதாரண அங்கீகாரம் அல்ல!
உயிரைப் பணயம் வைத்து நாட்டின் மானம் காக்கும் கடினமான பணிகளில் ஈடுபட்டு, வீரதீரச் செயல்களைப் புரிந்தவர்களுக்கே உயரிய ராணுவப் பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.இத்தகைய பதக்க வீரர்களை கௌரவிக்கும் வகையில், உத்தரபிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் அரசு பேருந்துகளில் இலவசப் பயண வசதிகள் வழங்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

முப்படைத் தளபதிகளின் பெருமைமிகு பதக்கங்கள்!
சாதாரண நிகழ்வுகளில் கிடைக்கும் அங்கீகாரம் அல்ல முப்படைத் தளபதிகளின் பதக்கங்கள். உயிரைப் பணையம் வைத்து, நாட்டின் மானம் காக்கும் சவாலான பணிகளில் ஈடுபடும் வீரர்களுக்கு மட்டுமே இத்தகைய உயரிய பதக்கங்கள் தேடிவரும். இத்தகைய வீரதீரச் செயல்களைப் புரிந்தவர்களைத் தகுந்த முறையில் கௌரவிக்கும் விதமாக, வட இந்திய மாநிலங்களில் குறிப்பாக உத்தரபிரதேசத்தில் , முப்படைத் தளபதிகளால் பதக்கம் வழங்கப்பட்ட முப்படை வீரர்களுக்கு அம்மாநில அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பேருந்து பயணம் மாநிலம் முழுவதும் வெற்றிகரமாக வழங்கப்பட்டு வருகிறது.

தமிழக முதல்வருக்குப் பெருமிதக் கோரிக்கை!
உத்தரபிரதேசத்தின் இந்த முற்போக்கு மற்றும் தேசப்பற்று மிக்க திட்டத்தை முன்மாதிரியாகக் கொண்டு, நம் தாய் தமிழகத்திலும் முப்படைத் தளபதிகளின் பதக்கங்களைப் பெற்ற அனைத்து ராணுவ வீரர்களுக்கும் மற்றும் முன்னாள் படைவீரர்களுக்கும் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளிலும் கட்டணமில்லாப் பயணச் சீட்டு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வலுப்பெற்றுள்ளது.
தமிழகத்திலும் அமல்படுத்தப்படுமா?
இந்த முன்மாதிரியைப் பின்பற்றி, தமிழகத்திலும் முப்படைத் தளபதிகளின் உயரிய பதக்கங்களைப் பெற்ற அனைத்து ராணுவ வீரர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களுக்கும் , மாநிலம் முழுவதும் இயக்கப்படும் அனைத்து அரசு பேருந்துகளிலும் கட்டணமில்லா பயண வசதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

எல்லையில் காத்த வீரர்களுக்கு… எல்லையில்லா மரியாதை!
நாட்டுக்காக நின்றவர்களுக்கு… நன்றியுடன் துணை நிற்போம்!
தேசத்தின் பாதுகாப்புக்காக உயிரையே துச்சமாக நினைத்து பணியாற்றிய வீரர்களுக்கு, அவர்களது சொந்த மண்ணில் அரசு செலுத்தும் நன்றிக்கடனாக இந்தத் திட்டம் அமையும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முதல்வர் மனம் வைப்பாரா?
ராணுவ வீரர்களின் நலனில் அக்கறை காட்டி, இந்த தேசநலன் சார்ந்த கோரிக்கையை தமிழக அரசு பரிசீலித்து விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்பதே வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
“வீரனின் தியாகம் மறக்கப்படக்கூடாது…
வீரத்தின் பெருமை மங்கக்கூடாது…
தேசத்தைக் காத்தவர்களுக்கு அரசு கரம் நீட்ட வேண்டும்!”
ராணுவ வீரர்களின் இந்தக் கோரிக்கைக்கு தமிழக முதல்வர் செவிசாய்ப்பாரா?
வீரர்களின் தியாகத்திற்கு தமிழகத்தின் மரியாதை இலவசப் பயணமாக மலருமா?
என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.*






