
திருச்சி: ஜனநாயக சமூக நல கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் சமூகப் போராளி தோழர் சம்சுதீனின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம், 28.08.2026 அன்று மாலை 6 மணியளவில் திருச்சி தில்லை நகரில் உள்ள ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
நினைவேந்தல் கூட்டத்திற்கு ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் (DLF) மாநிலத் தலைவர் தோழர் செந்தில் தலைமை வகித்தார். நிகழ்வில் தோழர் சம்சுதீனின் உருவப்படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தப்பட்டதுடன், ஒரு நிமிடம் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில், தோழர் சம்சுதீனின் சமூகப் பணிகள் மற்றும் மக்கள் நலனுக்காக அவர் மேற்கொண்ட போராட்டங்கள் குறித்து சமூக நல கூட்டமைப்பைச் சேர்ந்த தோழர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் உரையாற்றினர்.

இதில் தமிழக விவசாயிகள் சங்கம் (கட்சி சார்பற்றது) தலைவர் ஐயா சின்னதுரை, மூத்த வழக்கறிஞர் தோழர் கென்னடி, ரெட் பிளாக் கட்சியின் மாநிலத் தலைவர் தோழர் ஏ.சி. ராமலிங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த தோழர் விடுதலை விக்கி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டத் தலைவர் தோழர் ராயல் ராஜா, பத்திரிக்கையாளர் கோபிநாத், தேசிய மருதம் மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த தோழர் எம்.பி. செல்வம், சாமானிய மக்கள் கட்சியின் மத்திய மண்டல செயலாளர் தோழர் ஜோசப், தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் தோழர் கமலக்கண்ணன், மாநகரத் தலைவர் தோழர் வின்சென்ட், ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில இணைச் செயலாளர் தோழர் ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

மேலும், வழக்கறிஞர் ரஞ்சித், மக்கள் உரிமை இயக்கத்தைச் சேர்ந்த தோழர் பஷீர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டர் அணி மாநில துணைச் செயலாளர் தோழர் தில்லை முரசு, நாம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் தோழர் முபாரக், வழக்கறிஞர் கமுர்தீன், தமிழ் புலிகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் ரமணா உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் (DLF) மாநில பொதுச் செயலாளர் தோழர் ஜீவா சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள், ஜனநாயக சக்திகள் மற்றும் தோழமைக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டு தோழர் சம்சுதீனுக்கு நினைவஞ்சலி செலுத்தினர்.

நிகழ்ச்சியின் இறுதியில், திருச்சி மண்டல ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்டத் தலைவர் தோழர் முத்து நன்றி உரையாற்றினார்.
இடம்:
ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (DLF), மாநில தலைமை அலுவலகம், தில்லை நகர், திருச்சி..






