துணை முதல்வர் பிறந்தநாள் பொதுக்கூட்டம் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உரை

திருச்சி தெற்கு மாவட்டம் கிழக்கு மாநகரம் மார்க்கெட் பகுதி கழகத்தின் சார்பாக தமிழ்நாடு துணை முதல்வர் திராவிட முன்னேற்றக்கழக இளைஞரணி செயலாளர் அவர்களின் 47வது பிறந்தநாள் விழா
47 நிகழ்வுகளின் வரிசையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு தலைமை பகுதி கழகச் செயலாளர்
ஆர்.ஜி பாபு

சிறப்புரை
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ்.
மாநகரக் கழகச் செயலாளர் மு மதிவாணன்.
திராவிடர் கழக துணை பொதுச்செயலாளர் மதிவதனி.

கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் வண்ணை அரங்கநாதன் மாவட்டத் துணைச் செயலாளர் லீலாவேலு தலைமைக் கழக பேச்சாளர் உதயகுமார் வட்டக் கழகச் செயலாளர்கள் சுருளி ராஜன், செந்தில்குமார், மகேஷ், பைரவன், மற்றும் பகுதி, நகர, மாவட்ட, கழககழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

பொதுக் கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உரையாற்றியதாவது நமது துணை முதலமைச்சர் பிறந்த நாளை நாம் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடி வருகிறோம்

நமக்கான ஒரு இளம் தலைவராக தமிழினத்தை பாதுகாக்க கூடிய ஒரு தலைவராக தமிழக முதல்வரின் கரத்தை வலுப்படுத்தக்கூடிய ஒரு தலைவராக நாம் பார்ப்பதாகவும்

மேலும் அவரை நாம் ஏன் பாராட்டுகிறோம் என்றால் இந்த திராவிட இனத்தை உயர்த்திப் பிடிக்க நமக்கான ஒரு பாதுகாவலர் வேண்டும் என்பதற்காகத்தான் என்றும் திமுக அரசில் உள்ள அமைச்சர்கள் இறுமாப்பு உள்ளவர்கள் அல்ல என்றும் பேரறிஞர் அண்ணா கூறியது போல் நாங்கள் சாமானியர், மிக மிக எளிமையானவர்கள் என்றும் ஏனென்றால் தமிழக முதல்வர் அவர்கள் அப்படித்தான் எங்களை வளர்த்து வருகிறார் என்றும்

நமது மாநில உரிமைகள் யாரிடம் இருக்கிறது என்றால் ஒன்றியத்தில் ஆண்டு கொண்டிருக்கக் கூடிய பிஜேபி அரசிடம் தான் உள்ளது என்றும் குறிப்பாக நமது உழைப்பில் ஒரு ரூபாய் மத்திய அரசுக்கு வரி செலுத்தி வருவதாகவும் ஆனால் நமக்கு மத்திய அரசு கொடுப்பது வெறும் 29 பைசா மட்டுமே என்றும் இதை தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தோல் உரித்து வெட்ட வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவர் மாண்புமிகு தமிழக துணை முதல்வர் தான் என்றும்

மேலும் இதற்கு உதாரணமாக கூற வேண்டும் என்றால் நமது கழுத்தை ஒருவர் நெறிக்கிறார் அந்த ஆதங்கத்தை நாம் கூறும் பொழுது அவரே நம் பாதுகாப்பிற்கு வென்டிலேட்டர் வைக்கிறார் என்றால் அது வேண்டாம் எங்கள் கழுத்தை நெரித்து நீங்கள் கொடுக்க வேண்டாம் தமிழகத்தில் உள்ள ஒரு பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தர வேண்டிய 37,000 கோடியை தராமல் அதற்கு பதிலாக வெறும் 200 கோடியை கொடுக்கிறது பாஜக அரசு 2014 ஆம் ஆண்டு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை இன்று வரை கட்டப்படாத நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து செங்கலை உயர்த்தி காட்டியவர் தான் துணை முதலமைச்சர் என்றும் இன்றைய ஒன்றிய அரசுக்கு சவாலாக இருக்கக்கூடியவரும் துணை முதல்வர் என்றும்

மேலும் நான் பொறுப்பு அமைச்சராக இருப்பதால் நாகப்பட்டினத்தில் உள்ள வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு உடனடியாக முதல்வரின் உத்தரவின் பேரில் அந்தந்த அமைச்சர்கள் அந்தந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அவரவர்கள் தொகுதியில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு அதற்கு உண்டான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்

மேலும் இதே போல் எனது திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியிலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிகாரிகளை அழைத்து விரைவாக பணியை முடிக்குமாறு கூறிவிட்டு வந்துள்ளதாக எடுத்துரைத்தார்‌

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    மாண்புமிகு தேசிய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை ஒன்றிய இணை அமைச்சர் திரு. ஹர்ஸ் மல்ஹோத்ரா அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளித்த துரை வைகோ எம்.பி

    மாண்புமிகு தேசிய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை ஒன்றிய இணை அமைச்சர் திரு. ஹர்ஸ் மல்ஹோத்ரா அவர்களை அவரது அலுவலகத்தில் இன்று (03.06.2026) சந்தித்தேன். அப்போது எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மூன்று முக்கிய கேரிக்கைகளுக்கான கடிதம் வழங்கி, அதற்கான…

    எதற்காக போர் வீரர்களை தயார் செய்தோமோ…எதற்காக வீரர்களை போர்க்களத்திற்கு அழைத்து சென்றோமோ..எதற்காக போரிட்டோமோ…அதற்கான காரணத்தை, போரை வழிநடத்துபவர்கள் மறுத்து/மறந்து போனால்… -அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன்

    அன்பார்ந்த கழக நிர்வாகிகளுக்கும், நலம் விரும்பிகளுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் என் மனமார்ந்த வணக்கங்கள். என்னுடைய பெற்றோர் எனக்கு அளித்த வரமாக நான் பெருமிதம் கொள்ளும் நிமிர் நெஞ்சமும், நேர்கொண்ட பார்வையுமாக, மனசாட்சிக்கு எள்ளளவும் பயப்படாமல், எனது கடமையை இது நாள் வரை சமரசம்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *