மத்திய அரசு அறிவித்துள்ள வாடகைக்கு 18 சதவீத ஜிஎஸ்டிக்கு எதிரான அடுத்த கட்ட போராட்டங்கள் குறித்தும் தீர்மானம் நிறைவேற்றம்

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் திருச்சி சென்னை பைபாஸ் ரோட்டில் உள்ள தனியார் ஹோட்டலில் 41வது மாநில பொதுக்குழு கூட்டம் மாநில தலைவர் விக்ரமராஜா தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். இந்த பொதுக்குழு கூட்டத்தில் வணிகர்கள் தற்போது சந்தித்து வரும் பல்வேறு சிக்கல்கள், ஜிஎஸ்டியில் நிழவி வரும் குழப்பங்கள் மேலும், மத்திய அரசு அறிவித்துள்ள வாடகைக்கு 18 சதவீத ஜிஎஸ்டிக்கு எதிரான அடுத்த கட்ட போராட்டங்கள் குறித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாநில தலைவர் விக்ரமராஜா பேசுகையில்:- இன்று நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானமானது வியாபாரிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது ஜிஎஸ்டி வரி விகிதம், ஆகியவற்றை எதிர்த்து போராடும் சூழலுக்கு வியாபாரிகள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, ஜிஎஸ்டி சம்பந்தப்பட்ட அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த உள்ளோம்.

மேலும் வருகின்ற மே 5ம் தேதி வணிகர் தினம் மாநில மாநாடு செங்கல்பட்டில் “வணிகர் அதிகார பிரகடன மாநாடு”என்ற தலைப்பில் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு வியாபாரிகளின் வாழ்வாதாரத்துக்காக நடத்தப்படுகிறது.மத்திய மாநில அரசுகள் எங்களை அழைத்து பேச வேண்டும். இந்த நிலை தொடருமானால் வியாபாரிகள் கடை அடைப்பு நடத்தும் அறிவிப்பை ஏற்படுத்தும் நிலை ஏற்படும். ஜிஎஸ்டி வரி விதிப்பில் 1.5 கோடி வியாபாரம் செய்யும் வியாபாரிகள் 1 சதவிதம் இணக்கம் வரியை வியாபாரி கட்டுகின்றனர். அதனை திரும்ப பெற வேண்டும். ஜிஎஸ்டி குளறுபடிகளை வைத்துக்கொண்டு அதிகாரிகள் அத்துமீறலில் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில் நோட்டீஸ் அனுப்பி வருகின்றனர். எங்க நிலைப்பாடுகளை அரசு புரிந்து கொண்டு சட்ட விதிகள் எளிமைப்படுத்த வேண்டும். மாநில அரசு கட்டிட வரி விதிப்பு, லைசன்ஸ் கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும்,  வணிகர்கள் சங்க பிரதிநிதிகளை வைத்து சீரமைப்பு அமல்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

NTTadmin

ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

Related Posts

வெற்றி! வெற்றி! திருப்பராய்த்துறை மக்கள் தொடர்பு முகாம் வெற்றி!அதிரடி அமைச்சர் ரமேஷ் – அள்ளிக் கொடுத்த நலத்திட்டம்!வாரிக் கொடுத்த வள்ளல்கள் – வழிகாட்டும் அதிகாரிகள் – திருப்பராய்த்துறையில் நலத்திட்ட அள்ளல்!பட்டா முதல் ஆண்ட்ராய்டு மொபைல் வரை 164 பேருக்கு ரூ.73.56 லட்சம் உதவிகள்

திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் திருவிழா போல் களைகட்டியது. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் நடைபெற்ற இந்த முகாமில் 164 பயனாளிகளுக்கு ரூ.73 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட…

84 ஆண்டுகால மர்மக் கோட்டை நொறுங்கியது! தபோவனத்தில் புகுந்த BDO அண்ணாதுரை… அநீதிக்கு முடிவு கட்டிய கிருஷ்ண அவதாரம்! வரி ஏய்ப்பு சாம்ராஜ்யத்திற்குப் பூட்டு… தமிழகத்தை அலறவிட்ட BDO-வின் தர்ம யுத்தம்!

மகாபாரதத்தில் அஸ்தினாபுரத்து சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு, “ஊசி முனை நிலத்தைக் கூட பாண்டவர்களுக்குத் தர மாட்டேன்!” என்று துரியோதனன் பிடிவாதம் பிடித்தானே… அதே போன்ற ஒரு சாம்ராஜ்ய ஆணவமும், 84 ஆண்டு கால அநீதியும் திருச்சிராப்பள்ளி மண்ணில் சுக்குநூறாக உடைந்து நொறுங்கியிருக்கிறது!…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *