மின்வாரிய பணியாளர்கள் மரணம்- அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என உறவினர்கள் போராட்டம்

திருச்சி கே.கே.நகர் அருகே ஓலையூர் ரிங் ரோடு பகுதியில் நேற்று காலை மின் வாரிய ஒப்பந்த ஊழியர் மருங்காபுரியை சேர்ந்த உறவினர்களான கலாமணி (42) மற்றும் மாணிக்கம் (37) ஆகியோர் உயர் மின் அழுத்த கோபுரத்தில் பணியாற்றி கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் கலைமாமணி என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகிய நிலையில் உயிரிழந்தார்.இந்த சமயத்தில் கீழிருந்து மேல் ஏறிக் கொண்டிருந்த மாணிக்கம் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட மாணிக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கே.கே. நகர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மின்கம்பத்தில் உயிரிழந்து தொங்கிய நிலையில் இருந்த கலாமணியை மீட்டனர்.இச்சம்பவம் குறித்து கே.கே. நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து அரசு மருத்துவமனையில் இறந்த இருவரின் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக நேற்று மாலை கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் அவர்கள் இறந்ததற்கு முக்கிய காரணம் மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியம் ஆகும். ஆகையால் இந்த சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி திருச்சி அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இறந்தவர்களில் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர் தொடர்ந்து போராட்டக்காரர்கள் சாலை மறியலை கைவிட்டனர்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    மாண்புமிகு தேசிய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை ஒன்றிய இணை அமைச்சர் திரு. ஹர்ஸ் மல்ஹோத்ரா அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளித்த துரை வைகோ எம்.பி

    மாண்புமிகு தேசிய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை ஒன்றிய இணை அமைச்சர் திரு. ஹர்ஸ் மல்ஹோத்ரா அவர்களை அவரது அலுவலகத்தில் இன்று (03.06.2026) சந்தித்தேன். அப்போது எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மூன்று முக்கிய கேரிக்கைகளுக்கான கடிதம் வழங்கி, அதற்கான…

    எதற்காக போர் வீரர்களை தயார் செய்தோமோ…எதற்காக வீரர்களை போர்க்களத்திற்கு அழைத்து சென்றோமோ..எதற்காக போரிட்டோமோ…அதற்கான காரணத்தை, போரை வழிநடத்துபவர்கள் மறுத்து/மறந்து போனால்… -அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன்

    அன்பார்ந்த கழக நிர்வாகிகளுக்கும், நலம் விரும்பிகளுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் என் மனமார்ந்த வணக்கங்கள். என்னுடைய பெற்றோர் எனக்கு அளித்த வரமாக நான் பெருமிதம் கொள்ளும் நிமிர் நெஞ்சமும், நேர்கொண்ட பார்வையுமாக, மனசாட்சிக்கு எள்ளளவும் பயப்படாமல், எனது கடமையை இது நாள் வரை சமரசம்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *