தமிழக பாஜக சிறுபான்மை அணி மாநில துணைத்தலைவர் ஏ ஆர் பாட்ஷா திடீர் ராஜினாமா

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி மாநில துணைத்தலைவர் திருச்சி ஏ ஆர் பாஷா.

இவர் பாரதிய ஜனதா கட்சியின் தவிர்க்க முடியாத இளைஞர் சக்தியில் ஒருவராக திகழ்ந்தார். சமூக ஊடகங்களிலும் செய்தி தொலைக்காட்சிகளிலும் இவருடைய அனல் பறக்கும் பேட்டிகள் மிகவும் பிரபலம். இவருடைய அதிரடியான அரசியலுக்காகவும் இவர் செய்யக்கூடிய பொது நலன் சார்ந்த செயல்களுக்காகவும் இவரை பின்பற்றும் இளைஞர்கள் ஏராளம். பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை பிரிவை பலம் வாய்ந்த ஒரு அமைப்பாக மாற்றியதில் இவரின் பங்கும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக அண்ணாமலை அவர்கள் நியமனம் செய்யப்பட்ட பொழுது அன்றிலிருந்து தொடங்கிய இவரது வேகம் இன்று வரை எந்த இடத்திலும் தடைபடாமல் விறுவிறுப்பாகவே செயலாற்றிக் கொண்டு இருந்தது.

திருச்சியில் திரும்பிய இடமெல்லாம் பாரதிய ஜனதா கட்சியின் பிளக்ஸ் பேனர்களும் சுவர் விளம்பரங்களும் இருக்கின்றது என்றால் அதில் ஏ ஆர் பாஷாவின் பங்கும் மிக மிக முக்கியமான ஒன்றாகும்.

திருச்சி மாவட்டத்தில் பாஜகவில் திமுகவை எதிர்த்து குரல் கொடுக்கக்கூடிய ஒரு சிலரின் ஏ ஆர் பாஷாவின் குரல் என்றைக்குமே ஓங்கி ஒலிக்கும். இவர் வசிக்கும் பகுதியான தென்னூர் ஏரியாவில் திமுக மிகவும் பலம் வாய்ந்த இடத்தில் இருக்கும் பொழுதும் இவர் சார்ந்த இவருடைய சமூகத்திலேயே இவருக்கு பல எதிர்ப்புகள் எழுந்த பொழுதும் அத்தனையும் தவிடு பொடியாக்கி அவர் சார்ந்த சமூக மக்களிடம் பாஜகவின் மீது அளப்பரிய மதிப்பையும் அன்பையும் உருவாக்கி பல இஸ்லாமிய சகோதரர்களை பாஜகவின் பால் கொண்டு வந்தவர் தான் இந்த ஏ ஆர் பாஷா.

இன்று இவர் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை அவர்களுக்கும் திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகர் அவர்களுக்கும் சமர்ப்பித்துள்ளதாக நமக்கு வாட்ஸ் அப் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

அவருடைய இந்த விலகல் முடிவு நிச்சயமாக தமிழக பாஜகவில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்பது சர்வ நிச்சயம்

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    மாண்புமிகு தேசிய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை ஒன்றிய இணை அமைச்சர் திரு. ஹர்ஸ் மல்ஹோத்ரா அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளித்த துரை வைகோ எம்.பி

    மாண்புமிகு தேசிய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை ஒன்றிய இணை அமைச்சர் திரு. ஹர்ஸ் மல்ஹோத்ரா அவர்களை அவரது அலுவலகத்தில் இன்று (03.06.2026) சந்தித்தேன். அப்போது எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மூன்று முக்கிய கேரிக்கைகளுக்கான கடிதம் வழங்கி, அதற்கான…

    எதற்காக போர் வீரர்களை தயார் செய்தோமோ…எதற்காக வீரர்களை போர்க்களத்திற்கு அழைத்து சென்றோமோ..எதற்காக போரிட்டோமோ…அதற்கான காரணத்தை, போரை வழிநடத்துபவர்கள் மறுத்து/மறந்து போனால்… -அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன்

    அன்பார்ந்த கழக நிர்வாகிகளுக்கும், நலம் விரும்பிகளுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் என் மனமார்ந்த வணக்கங்கள். என்னுடைய பெற்றோர் எனக்கு அளித்த வரமாக நான் பெருமிதம் கொள்ளும் நிமிர் நெஞ்சமும், நேர்கொண்ட பார்வையுமாக, மனசாட்சிக்கு எள்ளளவும் பயப்படாமல், எனது கடமையை இது நாள் வரை சமரசம்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *