
புதுக்கோட்டை மாவட்டம்
விராலிமலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 20.12.2024 அன்று அடையாளம் தெரியாத விராலிமலை டூ மணப்பாறை ரோட்டில் கோடாலி குடி ஊரில் செந்தூர் பேக்கரியில் இருந்து 100 மீ தொலைவில் கண்மாய் கரை ரோட்டில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்ததாக காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது அதன் பேரில் பிரேத பரிசோதனை செய்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் இறந்து போன நபர் நாகேஸ்வரன் மணச்சநல்லூரை சேர்ந்த நபர் என்று தெரியவந்தது. அவர் திருவானைக்காவல் ஒரு ஆயில் மில்லில் கணக்கு பிள்ளை யாக பணி செய்து வந்ததும் தெரிய வந்தது.அவர் ஸ்ரீரங்கம் பேருந்து நிலையத்திலிருந்து ரெகுலராக ஆயில் சப்ளை செய்யும் கடைகளில் வாரம் ஒரு முறை பணம் வசூலித்து செல்வது வழக்கம்.இதை தெரிந்து கொண்ட திம்மராய சமுத்திரம் பகுதியில் இருக்கும் ஒரு கும்பல் இதை தெரிந்து கொண்டு அவரை மணப்பாறையில் ஆட்டோவில்கடத்தி கொலை செய்து பணத்தை பிடுங்கிக் கொண்டு உடலை விராலிமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோடாலி குடி என்னும் ஊரில் போட்டுவிட்டு தப்பி சென்று இருப்பதை சிசிடிவி புட் ஏஜ் மூலம் ஆய்வு செய்து தெரிந்து கொண்டு,
புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. வந்தித்தா பாண்டே ஐபிஎஸ் அவர்களின் உத்தரவின் பேரில்
இலுப்பூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்
திரு. முத்துராஜ் அவர்களின் தலைமையில்
விராலிமலை காவல் ஆய்வாளர் திரு. சந்திரசேகர் அவர்கள்
விராலிமலை உதவி ஆய்வாளர்
திரு.அன்பழகன் அவர்கள்
விராலிமலை முதல் நிலைக் காவலர்
திரு.சுரேஷ்
தனிப்படை காவலர்கள் இலுப்பூர் உட்கோட்டம்
1) Gr1 திரு. செந்தில்குமார் அவர்கள்
2)Gr1 திரு.பிரவீன் குமார் அவர்கள்
அடங்கிய தனி படையினர் சிசிடிவி ஃபுட்டேஜ் ஆய்வு செய்து மர்டர் பார்க் கெயின் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள்,
1)பிரகாஷ்
S/o கலியமூர்த்தி
திம்மராய சமுத்திரம், திருவானைக்காவல் திருச்சி.
2) விவேக்
S/o ராஜவேல்
கிழக்குறிச்சி, திருவரம்பூர் போஸ்ட்,
திருச்சி.
3) சிவக்குமார் @ சோனி
S/o முருகேசன்
திம்மராய சமுத்திரம் திருவானைக்கோவில், திருச்சி.
ஆகிய மூன்று நபர்களையும் 31/12/2024 அன்று
விராலிமலை காவல் நிலைய குற்ற எண்:404/24 U/S 311,103BNS ல் கைது செய்து புதுக்கோட்டை மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் இதே வழக்கில் முக்கிய குற்றவாளிகளான
1)சந்தோஷ்
S/o சேது ராஜ்
திம்மராய சமுத்திரம் திருவானை கோவில், திருச்சி.
2) ஆனந்த்
S/o மதியழகன்
திம்மராய சமுத்திரம் திருவானைக்கோவில் திருச்சி.
ஆகிய குற்றவாளிகளை தேடி வருகிறோம் என்பதனை இந்த குழுவில் பதிவு செய்து கொள்கிறேன். இவர்களைப் பற்றிய மேலும் தகவல் ஏதேனும் இருந்தால் தெரிவிக்கவும். நன்றி,வணக்கம்.