
நேற்று திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் (DRM) அவர்களை துரை வைகோ MP அவரது அலுவலகத்தில் சந்தித்தை தொடர்ந்து இன்று (30.01.2026) தென்னக ரயில்வே பொது மேலாளர் (General Manager, Southern Railway) அவர்களை அவரது சென்னை அலுவலகத்தில் சந்தித்தார் துரை வைகோ MP.

இன்றைய சந்திப்பு, திருச்சி மாநகரின் 16 ஆண்டுகால கோரிக்கையான G Corner பகுதியில் நிலவி வரும் போக்குவரத்து ஒழுங்கின்மையும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க உயர்மட்ட சுழல் பாலம் அமைக்க வேண்டும் என்பதை பிரதான குறிக்கோளாக கொண்டு துரை வைகோவின் தொடர் முயற்சியின் அடுத்த நகர்வாக, அவருடைய ஒருங்கிணைப்பில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திருச்சி மண்டல திட்ட இயக்குநர் (Project Director, NHAI Trichy), திட்ட ஆலோசகர் (Project Consultant, NHAI) மற்றும் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் (DRM, Trichy) ஆகியோரை தென்னக ரயில்வே பொது மேலாளர் அவர்களுடன் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. இன்றைய கூட்டம் காலை 11 மணி அளவில் தொடங்கி மதியம் 1 மணி வரை சென்றது. நமது எதிர்பார்ப்புகள் விரைவில் நிறைவேறும் விதமாகவே இந்த கூட்டமானது அமைந்தது.

இந்தச் சந்திப்பின்போது, 07615/07616 திருச்சிராப்பள்ளி – ஹஜூர் சாஹிப் நாண்டெட் (வாராந்திர) சிறப்பு ரயில் சேவையை மேலும் நீட்டிக்க வேண்டும் என்ற துரை வைகோ தனது கோரிக்கையை குறித்து எடுத்துரைத்தார். இதற்காக, 26.01.2026 அன்று ரயில்வே வாரியத் தலைவர் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் முன்பே கோரிக்கை வைத்திருந்த்தை சுட்டிக்காட்டினார். .
.

இந்த ரயில் சேவை வரும் நாட்களிலும் தொடர அனுமதி வழங்கப்பட்டது குறித்து நேற்றே அவரிடம் DRM தெரிவித்தார், அந்த ரயில் திருச்சி – சார்லபல்லி சேவையாக 03.02.2026 முதல் தொடர இருப்பதாகவும், இதுகுறித்த அறிவிப்பு தென் மத்திய ரயில்வே மூலம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது என்ற மகிழ்ச்சியான தகவலும் GM அவர்களால் இன்று தெரிவிக்கப்பட்டது.
மேலும், தற்போது வாரத்திற்கு 5 நாட்கள் சிறப்பு ரயிலாக இயக்கப்படும் 06190/06191 திருச்சிராப்பள்ளி – தாம்பரம் ரயில் சேவையை நிரந்தர ரயிலாக மாற்ற வேண்டும் என்ற துரை வைகோவின் கோரிக்கையையும் வலியுறுத்தப்பட்டது.
இதுதொடர்பாக, 10.12.2025 அன்று மதிப்பிற்குரிய மத்திய ரயில்வே அமைச்சர் அவர்களுக்கு துரை வைகோ ஏற்கனவே கடிதம் வழங்கியிருந்தார். இது தொடர்பாக GM அவர்களுக்கும் தனது கோரிக்கை கடிதத்தை இன்று வழங்கினார்.

இந்த கோரிக்கைகள் குறித்தும் நேற்று மற்றும் இன்று நடைபெற்ற சந்திப்பில் பேசுகையில், 31.01.2026 வரை இயக்கப்படுவதாக இருந்த இந்த சிறப்பு ரயில் சேவை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது என்றும், அதனை நிரந்தர சேவையாக மாற்றுவது தொடர்பான பரிசீலனையும் தற்போது நடைபெற்று வருவதாக GM அவர்கள் தெரிவித்தார்.
மேலும், புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் தற்போது Amrit Bharat திட்டத்தில் மேற்கொள்ளபட்டு வரும் மேம்பாட்டு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் மற்றும் தற்போது ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் கழிவறை ஆகியவற்றில் உள்ள குறைபாடுகள் குறித்து பொது மேலாளரின் கவனத்திற்கு எடுத்து சென்றார் துரை வைகோ. இது குறித்து அங்கு இன்று வந்திருந்த மதுரை கோட்ட ரயில்வே மேலாளரை அழைத்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார் மேலும் Amrit Bharat மேம்பாட்டு பணிகள் பிப்ரவரி மாதத்திற்குள் முடிக்கபடும் என்று உறுதியளித்தார்.
மேலும், தற்போது வாரத்திற்கு மூன்று முறை இயக்கப்படும் சிலம்பு விரைவு ரயிலை தினசரியாக இயக்க வேண்டும் என்ற கோரிக்கை கடிதத்திற்கு பதிலளிக்கையில் இதுகுறித்தும் பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தார்.
திருச்சி மற்றும் புதுக்கோட்டை மக்களின் பயண தேவைகளை கருத்தில் கொண்டு, இந்த கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர்ந்து முயற்சி மேற்கொள்வதாக துரை வைகோ MP குறிப்பிட்டார்.





