செய்தியாளர்கள் மீதான கொலைவெறி தாக்குதல் – வல்லூறு ஆசிரியர் சமூக ஆர்வலர் முனைவர் மோகன்ராம் கண்டனம்

வல்லூறு பத்திரிகை குழுமம் வன்மையாக கண்டிக்கிறது ✍️✍️…
தமிழக அரசே பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு கொடு….
விதிமீறல் குவாரியை படம் பிடிக்க சென்ற திருச்சி நியுஸ் தமிழ் 24×7 பத்திரிகையாளரை தாக்க 50 பேருடன் வந்து ஸ்ரீரங்கம் தொகுதிதிமுக MLA பழனியாண்டி ….

கரூரில் கனிம வளங்கள் கொள்ளை போவதை தடுப்பதற்காகவும் – அதனை மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் வெளிச்சம் போட்டு காட்டுவதற்காகவும் துணிச்சலுடன் களத்திற்கு சென்ற நியுஸ் தமிழ் 24×7 திருச்சி நிருபர் கதிரவன். கரூர் மாவட்டத்தில் வரும் இந்த

குவாரியை திமுக எம்.எல்.ஏ. பழனியாண்டி விதி மீறி நடத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது

செய்தி சேகரிப்பதை அறிந்து திமுக எம்.எல்.ஏ. பழனியாண்டி நேரில் வந்ததாக தகவல்

50 பேருடன் வந்த பழனியாண்டி நிருபரை பார்த்து ஆவேசமாக சீறியதாக கூறப்படுகிறது .

எம்.எல்.ஏ. ஆவேசம் அடைந்ததால், அந்த கும்பல் நிருபரை தூக்கிச் சென்று தாக்குதல் நடத்தியுள்ளது.
ஜனநாயகத்தின் தூணான ஊடகத்துறை மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
வல்லூறு பத்திரிகை குழுமம் இதனை வன்மையாக கண்டிக்கிறது.
இந்த தாக்குதலுக்கு உள்ளான நியுஸ் தமிழ் 24×7 செய்தியாளர் கதிரவன் நம்மோடு இணைந்து பல்வேறு மக்கள் பிரச்சனைகளை வெளி கொண்டு வந்தவர். திருச்சி மாவட்டத்தின் அனுபவம் வாய்ந்த – திறமை மிகுந்த பன்பட்ட ஒரு ஊடகவியலாளர்.
அவர் தாக்கப்பட்டுள்ளது பத்திரிகை துறையையே தாக்கியது போலாகும்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர் MLA வாக இருந்தாலும் அவர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கவும் – தாக்கப்பட்ட செய்தியாளர் கதிரவன் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் வல்லூறு பத்திரிகை குழுமம் சார்பாக தமிழக அரசையும் – திருச்சி மாவட்ட நிர்வாகத்தையும் இதன் மூலம் கேட்டுக் கொள்கிறோம்.
இந்த சம்பவத்திற்கு பிறகாவது பத்திரிகையாளர்கள் அணைவரும் வேறுபாடுகளை களைந்து ஒன்றினைந்து இதனை கண்டிப்போம்.
இது போன்ற தாக்குதல் சம்பவங்களை கண்டிக்க தவறினால் இனி நாம் எதிர்காலத்தில் பத்திரிகையாளர் என்று சொல்லி வெளியே நடமாடக்கூட முடியாத நிலை ஏற்படும். எனவே இனிமேலாவது இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க
நமக்கு உயிர் பாதுகாப்பு வழங்க அரசை வலியுறுத்தி ஒன்று கூடுவோம். வாரீர் – வாரீர்.
என்றும் பத்திரிகையாளர்களின் நலனுக்கான பாடுபடும்
வல்லூறு பத்திரிகை குழுமம் – தமிழ்நாடு.
தொடர்புக்கு -9952875881.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    திருச்சி – கரூர் புதிய தடத்தில் பசுமை சாலை & திருச்சி வடக்கு வட்ட சாலை திட்டங்களுக்கு புதிய திட்ட மதிப்பீடு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது! துரை வைகோ எம்.பி கோரிக்கை ஏற்பு!

    திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட தற்போதைய திருச்சி – கரூர் தேசிய நெடுஞ்சாலை மிகவும் குறுகலாகவும், அதிக வளைவுகள் கொண்டதாகவும் உள்ளது. மேலும், ஒருபுறம் காவிரி ஆறும் மறுபுறம் ரயில்வே இருப்புப் பாதையும் இருப்பதால், இந்த சாலையை அகலப்படுத்துவது சாத்தியமற்ற நிலை…

    சௌராஷ்ட்ரா சங்க பரிசளிப்பு விழா

    திருச்சிராப்பள்ளி சௌராஷ்ட்ரா வாலிபர் சங்கம் சார்பாக கடந்த ஜனவரி மாதத்தில் நடைபெற்ற மகளீர்களுக்கு சமையல் போட்டி, கோலப்போட்டி மற்றும் பள்ளி மாணாகர்களுக்கு நடைபெற்ற ஓவிய போட்டி, கட்டுரை போட்டி, பேச்சு போட்டிக்கான பரிசளிப்பு விழா நேற்று 22.02.2026 மாலை 6:30 மணியளவில்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *