தமிழக கவர்னர் RN. ரவி திருவானைக்காவல் ஸ்ரீரங்கம் கோவில்களில் சுவாமி தரிசனம்.

ஸ்ரீரங்கம் ஜன 29

தமிழக கவர்னர் ஆர் என் ரவி நேற்று பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக காலை 10:15 மணியளவில் திருச்சிராப்பள்ளி விமான நிலையம் வந்தடைந்தார். திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் சரவணன் மற்றும் அரசு அதிகாரிகள் பூச்செண்டு கொடுத்து அவரை வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து அவர் பாரதிதாசன் பல்கலைக்கழகம் சென்றார்

விழா முடிந்த பிறகு மாலை சரியாக 3:30 மணி அளவில் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலுக்கு தனது மனைவியுடன் வருகை புரிந்தார். அவரையும் அவரது மனைவியையும் ஸ்ரீரங்கம் திருக்கோவில் இணை ஆணையர் சிவராம் குமார் தலைமை பட்டாச்சாரியார் சுந்தர் பட்டர் மற்றும் கோவில் அலுவலர்கள் பூரண கும்ப மரியாதை உடன் வரவேற்றனர்.

ரங்கா ரங்கா கோபுரம் வழியாக திருக்கோவிலுக்குள் சென்ற கவர்னர் சுவாமி சன்னதி மற்றும் தாயார் சன்னதியில் சிறப்பு தரிசனம் செய்தார்.

பிறகு சுமார் 4:20 மணியளவில் ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து வெளியில் வந்த அவர் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில் சென்றார். அங்கு அவரை கோவில் உதவி ஆணையர் சுரேஷ் மற்றும் தலைமை குருக்கள் ஆகியோர் பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்று சுவாமி தரிசனம் செய்ய அழைத்துச் சென்றனர். சுவாமி சன்னதி மற்றும் அம்பாள் சன்னதிக்கு சென்று மனமுருக பிரார்த்தனை செய்த அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு நினைவு பரிசு வழங்கி கௌரவித்தனர்.

கோவிலில் இருந்து வெளியில் வந்தவர் பின்னர் கார் மூலம் திருச்சி விமான நிலையம் சென்றடைந்தார்.

கவர்னர் வருகையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோவில் மற்றும் திருவானைக்காவல் கோவில்களில் ஸ்ரீரங்கம் காவல்துறை சார்பாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    வெற்றி! வெற்றி! திருப்பராய்த்துறை மக்கள் தொடர்பு முகாம் வெற்றி!அதிரடி அமைச்சர் ரமேஷ் – அள்ளிக் கொடுத்த நலத்திட்டம்!வாரிக் கொடுத்த வள்ளல்கள் – வழிகாட்டும் அதிகாரிகள் – திருப்பராய்த்துறையில் நலத்திட்ட அள்ளல்!பட்டா முதல் ஆண்ட்ராய்டு மொபைல் வரை 164 பேருக்கு ரூ.73.56 லட்சம் உதவிகள்

    திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் திருவிழா போல் களைகட்டியது. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் நடைபெற்ற இந்த முகாமில் 164 பயனாளிகளுக்கு ரூ.73 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட…

    84 ஆண்டுகால மர்மக் கோட்டை நொறுங்கியது! தபோவனத்தில் புகுந்த BDO அண்ணாதுரை… அநீதிக்கு முடிவு கட்டிய கிருஷ்ண அவதாரம்! வரி ஏய்ப்பு சாம்ராஜ்யத்திற்குப் பூட்டு… தமிழகத்தை அலறவிட்ட BDO-வின் தர்ம யுத்தம்!

    மகாபாரதத்தில் அஸ்தினாபுரத்து சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு, “ஊசி முனை நிலத்தைக் கூட பாண்டவர்களுக்குத் தர மாட்டேன்!” என்று துரியோதனன் பிடிவாதம் பிடித்தானே… அதே போன்ற ஒரு சாம்ராஜ்ய ஆணவமும், 84 ஆண்டு கால அநீதியும் திருச்சிராப்பள்ளி மண்ணில் சுக்குநூறாக உடைந்து நொறுங்கியிருக்கிறது!…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *