
கோவை
12 – 02 – 2025
யாருக்கும் பயனில்லாத பத்திரிகையாளர் நல வாரியத்தை அரசு திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
பத்திரிகையாளர்களிடையே ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கும் பத்திரிகையாளர் நல வாரியத்தை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி வருகிற பிப்ரவரி 25 ம் தேதி செவ்வாய்கிழமை காலை 11 மணி அளவில், அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாகவும் ஒரே நேரத்தில் கருப்பு பேட்ஜ் அணிந்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டம் தோறும் உள்ள அனைத்து தாலுகாக்களில் பணியாற்றும் பத்திரிகை மற்றும் ஊடகவியல் துறை தோழர்களும் பங்கேற்க உள்ளனர் !
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும் நடைபெறும் இந்த கவன ஈர்ப்பு ஆர்பாட்டங்களை மாநில நிர்வாகிகள் முன்னிலையில், மாவட்ட தலைவர்கள் தலைமை ஏற்று நடத்த உள்ளனர் !
பகுதி நேர செய்தியாளர்கள் என்பது பத்திரிகை உலகில் பொருத்தமில்லாத ஒன்றாகும் !
ஆனால் அதை ஒரு காரணமாக வைத்து, உழைக்கும் பத்திரிகை மற்றும் ஊடகத்துறையினர் ஆயிரக்கணக்கானோர் வஞ்சிக்கப்படுவது கண்டிக்கத்தக்கதாகும் !
அடிப்படை வசதிகள் குறைவாக உள்ள கிராமங்களுக்கும் எந்த நேரமும் சென்று செய்தி சேகரிக்கும் தாலுகா செய்தியாளர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் பத்திரிகையாளர்களுக்கான பேருந்து பயண அட்டை வழங்கப்படாததும் மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழ்நாடு செய்தி துறை சார்பில் வழங்கப்படும் அங்கீகார அடையாள அட்டை வழங்கப்படாததும் கண்டனத்திற்கு உரியது!
உலகில் முதல் முதலாக முதலாளிகளை முன்னிலைப்படுத்தி, தொழிலாளர்களுக்காக நலவாரியம் அமைத்த பெருமை தமிழக அரசையே சேரும் !
கடந்த அ.தி.மு.க ஆட்சியில் தொடர்ந்து 10 ஆண்டுகளாக நலவாரியம் அமைக்க வேண்டும் என்று போராடி கடைசிவரை அமைக்கப்படவில்லை !
ஆனால் தி.மு.க ஆட்சிக்கு வந்தால் நிச்சயமாக நலவாரியம் அமைப்போம் என்று உறுதி அளித்தனர் !
ஆனால் தி.மு.க ஆட்சிக்கு வந்து முதலாளிகளை முன்னிலைப்படுத்தி யாருக்கும் பலன் தராமல் இருக்கும் ஒரு நலவாரியத்தை ஏற்படுத்திய நிலையில், அதை திரும்ப பெற வேண்டும் என்று தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் இந்த கவன ஆர்பாட்டம் மூலம் பத்திரிகையாளர்களின் வேதனைகளையும், வலிகளையும் அரசின் பார்வைக்கு கொண்டு வருகிறது !
அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து இதில் கலந்து கொள்ள உள்ளனர் !
இன்று நடைபெற்ற கோவை மாவட்ட ஆலோசனை கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது !
தோழமையுடன்
டி.எஸ்.ஆர்.சுபாஷ்
மாநில தலைவர்
தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் ( TUJ )
9444111494
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏