
மார்ச் 07
திருச்சி
பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ராபிடோ’
ஓலா, உபெர்’ போன்ற நிறுவனங்கள் கார்களை வைத்து பயண சேவையை அளிப்பது போன்று, இரு சக்கர வாகன `பைக் டாக்ஸி’ சேவையை அளிக்கிறது.
இதற்காக இருசக்கர வாகனம் வைத்திருப்பவர்கள் யாராக இருந்தாலும், தங்களது ஓட்டுநர் உரிமம், வாகன உரிமம் போன்ற விவரங்களை அளித்து, `கேப்டன்’ ஆக தங்களைப் பதிவு செய்து கொண்டு. ஒவ்வொரு பயணத்துக்கும் குறைந்தபட்சம் 30 ரூபாய் வருமானம் கிடைக்கும் என்பதால் இளைஞர்கள் பலரும் தங்களை மேற்படி நிறுவனத்தில் சட்டத்திற்கு புறம்பாக இணைத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் வாகனங்கள், போக்குவரத்து விதிப்படி மஞ்சள் நிற நம்பர் போர்டை வைத்திருக்க வேண்டும். இருசக்கர வாகனங்களுக்கு மஞ்சள் நிற நம்பர் போர்டு வைக்கும் நடைமுறை தமிழகத்திலேயே இல்லாத நிலையில் திருச்சி நகர் பகுதி முழுவதும் வலம் வரும் ராபிடோ வாகனங்கள் `வெள்ளை நிற’ போர்டுடன் பறக்கின்றன. சட்டத்துக்குப் புறம்பாக இயக்கப்படும் இந்த வாகனங்கள் குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கும் மற்றும் போக்குவரத்து போலீஸாருக்கும் புகார்கள் சென்றாலும் பைக் டாக்ஸி வாகனங்களைப் பறிமுதல் செய்யாமல் கண்டும் காணாமல் வேடிக்கை பார்ப்பதாக புகார்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் இருசக்கர வாகனங்களை வணிக ரீதியாக இயக்குவதற்கு அனுமதி இல்லாத நிலையில் சமீபகாலமாக திருச்சியில் `ராபிடோ ஆப்’ மூலமாக பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவ்வாகனங்களில் பயணம் செய்பவர்களுக்கு விபத்துக் காப்பீடு இல்லை.
போக்குவரத்து சட்டத்துக்குப் புறம்பாக இயக்கப்படும் `ராபிடோ’ வாகனங்கள் காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்து துறையினர் பறிமுதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.