திருச்சி மாநகரில் போதை பொருட்களை கண்டுபிடிக்க புதியதாக ஒரு மோப்பநாய் திருச்சி மாநகர காவல் துறையில் சேர்க்கப்பட்டது.

திருச்சி மாநகர காவல் துறை பத்திரிக்கை செய்தி.

திருச்சி மாநகரில் போதை பொருட்களை கண்டுபிடிக்க புதியதாக ஒரு மோப்பநாய் திருச்சி மாநகர காவல் துறையில் சேர்க்கப்பட்டது.

மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் தமிழக காவல்துறையில் புதிதாக மோப்ப நாய்கள் சேர்க்க உத்தரவிட்டதன் பெயரில் 35 மோப்ப நாய்கள் வாங்கப்பட்டுள்ளது. இதில் திருச்சி மாநகர காவல் துறைக்கு ஒரு மோப்பநாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இன்று 21/3/2025ஆம் தேதி முதல் திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி காமினி அவர்கள் முன்னிலையில் திருச்சி மாநகர மோப்ப நாய்கள் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது .

திருச்சி மாநகர காவல் துறைக்கு புதியதாக வழங்கப்பட்ட Belgian malinois என்ற இனத்தை சேர்ந்த மோப்ப நாய்க்கு சிலம்பு என்று பெயரிடப்பட்டது. மேற்படி மோப்ப நாய்க்கு வருகின்ற ஜூன் முதல் நவம்பர் வரை கோயம்புத்தூர் பயிற்சி மையத்தில் ஆறு மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி முடித்த பின்பு திருச்சி மாநகரில் மோப்பநாய் படை (narcotic drug) பிரிவில் சேர்க்கப்பட்டு போதை பொருட்களை பதுககி வைக்கப்பட்ட இடங்களை கண்டுபிடிக்க காவல்துறையினருக்கு உதவிடவும் மாநகரில் போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும் பயன்படுத்த உள்ளது என திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் தெரிவித்தார்கள்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    வெற்றி! வெற்றி! திருப்பராய்த்துறை மக்கள் தொடர்பு முகாம் வெற்றி!அதிரடி அமைச்சர் ரமேஷ் – அள்ளிக் கொடுத்த நலத்திட்டம்!வாரிக் கொடுத்த வள்ளல்கள் – வழிகாட்டும் அதிகாரிகள் – திருப்பராய்த்துறையில் நலத்திட்ட அள்ளல்!பட்டா முதல் ஆண்ட்ராய்டு மொபைல் வரை 164 பேருக்கு ரூ.73.56 லட்சம் உதவிகள்

    திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் திருவிழா போல் களைகட்டியது. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் நடைபெற்ற இந்த முகாமில் 164 பயனாளிகளுக்கு ரூ.73 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட…

    84 ஆண்டுகால மர்மக் கோட்டை நொறுங்கியது! தபோவனத்தில் புகுந்த BDO அண்ணாதுரை… அநீதிக்கு முடிவு கட்டிய கிருஷ்ண அவதாரம்! வரி ஏய்ப்பு சாம்ராஜ்யத்திற்குப் பூட்டு… தமிழகத்தை அலறவிட்ட BDO-வின் தர்ம யுத்தம்!

    மகாபாரதத்தில் அஸ்தினாபுரத்து சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு, “ஊசி முனை நிலத்தைக் கூட பாண்டவர்களுக்குத் தர மாட்டேன்!” என்று துரியோதனன் பிடிவாதம் பிடித்தானே… அதே போன்ற ஒரு சாம்ராஜ்ய ஆணவமும், 84 ஆண்டு கால அநீதியும் திருச்சிராப்பள்ளி மண்ணில் சுக்குநூறாக உடைந்து நொறுங்கியிருக்கிறது!…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *