60 ஏக்கர் காப்புக் காடுகளையும், சுடுகாட்டையும் மீட்க கோரிக்கை

அந்தநல்லூர் வருவாய் கிராமம் சர்வே எண் 186ல் காப்புக்காடுகள் இருந்தன. பாதுகாக்கப்பட வேண்டிய, கன்சர்வன்சி பாரஸ்ட் காணாமல் போய்விட்டது. அங்கு காடுகள் இல்லை. பள்ளி, விளையாட்டு மைதானம், விளை நிலங்கள் உள்ளன. இன்றைய தேதியில் அரசாங்க பதிவேட்டின் படி அந்த இடம் தனியாருக்கு சொந்தமான இடமாக காண்பிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், 1927ஆண்டு, வருவாய்த்துறை ஆவணங்களின் படி திருச்சி மாவட்டம், திருப்பராய்த்துறை வருவாய் கிராமத்தில் சர்வே எண் 175 & 176/2ல் சுடுகாட்டுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள இடம் மற்றும் சாலை, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.

அந்தநல்லூர் மற்றும் திருப்பராய்த்துறை ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் 26/01/2026, சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பாக சுடுகாட்டையும் காப்புக்காடுகளையும் மீட்டு பொதுமக்களின் பொது பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு மனு அளித்துள்ளனர்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    வாய்க்காலில் ஊழல்… வாய்க்கரிசி போடும் அவலம்! தூர்வாரும் பெயரில் ஊர்ப்பணக் கொள்ளை: கண்ணீரில் மிதக்கும் திருச்சி விவசாயிகள்!

    வாய்க்காலில் ஊழல்… வாய்க்கரிசி போடும் அவலம்!தூர்வாரும் பெயரில் ஊர்ப்பணக் கொள்ளை: கண்ணீரில் மிதக்கும் திருச்சி விவசாயிகள்! வாய்க்கால் முழுமையாக தூர்வார அரசாங்கத்தில் பணம் இல்லை என்று கூறும் அதிகாரிகள்.மண்ணை நம்பி வாழும் விவசாயிகளின் மனக்குமுறல்! வயிறு எரியும் வேதனையில் வழிகின்ற கண்ணீர்!…

    மரணச்சாலையில் மனிதர்களுக்கு ரயில்வே வைக்கும் பொறி.எமனின் ஏஜெண்டாக செயல்படும் ரயில்வே அதிகாரிகள் – கண்டுகொள்ளாத மாநில நெடுஞ்சாலை துறை-மரணச்சாலை

    திருச்சி கரூர் சாலை, குடமுருட்டி முதல் பெட்டவாய்த்தலை தினமும் காவு வாங்கும் சாலையாகும்.இதை மக்கள் மரணச்சாலை என்று தான் அழைக்கின்றனர். மாநில நெடுஞ்சாலையும், தேசிய நெடுஞ்சாலையும் போதுமான பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகளை இங்கு ஏற்படுத்தி தருவதில்லை. மாநில, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *